அரசியல் வரலாறு

யோகா வரலாறு.

சமீபத்தில்  அதிகமாக  விமர்சனமாக்கப்பட்ட  வார்த்தை  “யோகா”. பிஜேபி  என்ற  கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பிரபலமாகிவிட்டது.  ஆட்சியில்  அமருவதற்கு  இருபது  வருடங்களுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பல  பரிமாணங்களை  எடுத்துவிட்டது. மருத்துவ  மற்றும் அறிவியல்  பூர்வமாக  ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன.  அப்படி  இருக்கும்  போது பிஜேபி  இப்போது  யோகாவுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  கொடுப்பதின்  நோக்கம்  என்ன? பிரதமர்  மோடி  அவர்கள்  குஜராத்தின்  முதல்வராக  இருந்த  போது  தன்  மாநிலத்தில்  யோகாவை  பள்ளிகளில்  முதன்மை  படுத்தாமல்  இருந்துவிட்டு  இப்போது   பிரதமரானதும்  இவ்வளவு  முக்கியத்துவம்  கொடுப்பது  ஏன்? அதே  போல  கடந்த  திரு. வாஜ்பேயி  அவர்களின்  பிஜெபி ஆட்சியில்  கூட  யோகாவுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  தரப்படவில்லையே?

அரசியல்  நோக்கமா? அல்லது  பிஜேபி  சார்ந்த  மதவாத  ஆன்மீக  வியாபாரிகளை  முன்னிலைப்  படுத்துவது  நோக்கமா? இது  போன்ற  கேள்விகளுக்கு  பதில்  அளிப்பது இக்கட்டுரையும்  நோக்கமல்ல.  யோகா என்றால்  என்னவென்றே  தெரியாமல்  அதை  ஒரு  உடற்பயிற்சி  என்றும், மதம்  சம்மந்தப்பட்டது  என்றும்  சொல்லும்  சிலருக்கு  யோகாவைப்  பற்றி  விளக்குவதே  இக்  கட்டுரையின்  நோக்கம்.

யோகாவைப்  பற்றியும், அதன்  பலன்களை  பற்றியும்  தெரிந்து  கொள்ளும் முன்  அதன்  வரலாறு  பற்றி  தெரிந்து Untitled 1 கொள்வது  முக்கியம்.  ஏனென்றால், கராத்தே, குங்க்பூ மற்றும்  பிற தற்காப்பு  கலைகளின்  தாய் நமது  களரி ஆனால்  நம்மில்  பலருக்கு  களரி  என்றால்  என்னவென்றே  தெரியாது, அதே  களரியின் சில  பகுதிகள்  வெளிநாடு  சென்று  திரும்பி  வந்தவுடன்  புகழ்  பெற்றுவிட்டன. அது போன்றுதான்  இன்றைய  பல  உடற்பயிற்சிகளின்  தாய்  யோகா.  ஆனால்  அது  நம்மை  விட அதிகமாக  வெளிநாட்டினருக்கு  தெரிகிறது.  பல  நவீன  யோகா  வடிவங்கள்  வெளிநாட்டினரிடம்  அறிமுகப்படுத்தப் பட்டு  திரும்பி இந்தியா  வருகிறது. அதனால்  வரலாற்றை  தெரிந்து கொள்ள  வேண்டியது  அவசியமாகிறது. முக்கியமான  ஒன்று  வரலாறு  என்பது  தெரிந்து  கொள்ளத்தான்  அதில்  வாழ்வதற்கு  அல்ல.

யோகா

யோகாவின்  வரலாற்றை  நான்கு  பகுதிகளாக  பிரிக்கலாம்:

 1. சிந்து – சரஸ்வதி சமவெளி  நாகரீக யோகா ,
 2. வேத கால  யோகா
 3. நாகரீக காலத்துக்கு  முந்தைய  யோகா (Pre Classical yoga)
 4. நாகரீக காலத்துக்கு யோகா ( Classical Yoga)
 5. நாகரீக காலத்துக்கு பிந்தைய  யோகா (Post Classical Yoga)
 6. நவீன யோகா.
 1. சிந்து – சரஸ்வதி சமவெளி  நாகரீக யோகா ,

Untitled 3

யோகாவின்  வரலாறு 5000 வருடங்களுக்கு  முன்பே சிந்து – சரஸ்வதி  சமவெளி  நாகரீகத்தில்  இருந்து  ஆரம்பிக்கிறது. அகழ்வாராய்ச்சியில்  கண்டெடுக்கபட்ட  பல  முத்திரைகளில்  யோகா  பற்றிய  பதிவுகள்  காணப்படுகிறது. ஆசான்களின்  படங்களும், தியானத்தில்  அமர்திருப்பது   போன்ற  படங்களும்  அங்கே காணப்படுகிறது.

ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற  சிந்து – சரஸ்வதி  சமவெளி   நகரங்களில்  வாழ்ந்தவர்கள்  தமிழர்கள்  என்றும்   சொல்லப்படுகிறது.

 1. வேத கால யோகா

யோகா  என்ற வார்த்தயை  நம்  சமஸ்கிருத  வேதங்களில்தான்  முதலில்  காணமுடிகிறது.  யோகா  என்ற  சமஸ்கிருத  வார்த்தைக்கு  “இணைத்தல்” என்று  பொருள் படும்.  ஆங்கிலத்தில் “Ýoke” அல்லது  “Union” என்று  பொருள் படும். உடல்  மனம்  இரண்டையும்  மூச்சு  என்ற  நுகத்தடியால்  இணைக்கும்  போது  மனமும்  உடலும்  ஒரே  நேர் கோட்டில்  சென்று  நிலம்  என்ற  ஆன்மா  சிறப்பாக இருக்கும். மனது  கடந்த  காலத்தையும், எதிர்காலத்தையும்  விட்டுவிட்டு  நிகழ்காலத்தில்  வாழ  ஆரம்பிக்கும்.  உடல்  நோயில்லாமல்  ஆரோக்கியமாக  இருக்கும்.

ஆரோக்கியமான  மனதையும்  உடலையும்  பெற  சுவாசம் சரியாக  இருக்க  வேண்டும். அதை செய்வதுதான்  யோகா.   ஆனால்  வேத  காலத்தில்  யோகா  சனாதன  மத  சடங்குகளுக்குள்  உட்பட்டு ஆன்மிகம்  என்ற கட்டுக்குள்  மட்டுமே  வைக்கப் பட்டிருந்திருக்கிறது. ஜீவாத்மாவை  பரமாத்மாவுடன்  இணைக்கிறது  என்று  கூட சனாதன  ஆன்மீகவாதிகள்  சொல்லுவார்கள்.

 • நாகரீக காலத்துக்கு  முந்தைய  யோகா (Pre Classical yoga)

இந்த  காலம்தான்  பிராமிணர்களின்  ஆதிக்கம்  வளர்ந்து  விருட்சமாகி  நின்ற  காலம்.  இந்த  காலத்திலும்  யோகா  ஒரு கட்டுக்குள்  யாருக்கும்  தெரியாமல்  சடங்குகளுக்கு  மட்டுமே  ஒரு  குறிப்பிட்ட மக்களால்   மட்டுமே  பயன்படுத்தட்டு  வந்தது.  இந்த  சடங்குகள்  இரண்டு  பிரிவாக  பிரிக்கபட்டு  பயன்பாட்டில்  இருந்தன.  ஒன்று  பிராமணா  மற்றொன்று  ஆரண்யகா. பிராமணா  சடங்குகள் வேத  உபநிஷடுகளை  கோவில்  மற்றும்  தங்கள்  வீடுகளில்  செய்யபடுவது,  ஆரண்யகா வணங்களில்  தவம்  செய்யும்  முனிவர்களில்  செய்யபப்ட்ட  சடங்கு  முறைகள். இதன காலம்  சுமார்  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பில்  இருந்து  கிறிஸ்து  பிறப்பதற்கு  இரண்டாம்  நூற்றாண்டுக்கு  முன்  வரை.  இங்குதான்  யோகா  தனக்கென்று  தனியாக  உபநிஷடுகளை  கொண்டு  தனியாக  வளர  ஆரமபித்தது.  பகவத்  கீதையும்  இந்த  கால  கட்டத்தில்தான்  எழுதபட்டது.  அதவது  மகாபாரதக்  கதை. இதன்  காலம் 500 BC என்று  சொல்லுகிறார்கள்.

ஆனால்  6 AD வரை வேத, உபநிஷத், கீதை  என்று  பல தோன்றி  இருந்தாலும் 6AD காலகட்டத்தில்தான்  இந்தியா  இரண்டு  மிகப் பெரிய  மகான்களைப்  பெற்றது. புத்தா  மற்றும் மகாவீரர். புத்தர்  இன்று  பின்பற்ற  படும்  அனைத்து  தியான  முறைகளுக்கும்  தாயான  விபாசன  என்ற  தியான  முறையை  அறிமுகப்படுத்தி  அதை  பின்பற்றி  போதிக்கவும்  செய்தார்.

புத்தர் கண்டறிந்த  நான்கு  உண்மைகள்; (Four Noble Truths.)

 1. துன்பம்(“துக்கம்”): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை Untitled 4மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
 2. ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
 3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
 4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

புத்தர்  முறைப்படுத்தி  வெளியிட்ட  எட்டு  நெறிமுறைகள்:

 1. நற்காட்சி – Right View
 2. நல்லெண்ணம் – Right Thought
 3. நன்மொழி – Right Speech
 4. நற்செய்கை – Right Conduct
 5. நல்வாழ்க்கை – Right Livelihood
 6. நன்முயற்சி – Right Effort
 7. நற்கடைப்பிடி – Right Mindfulness
 8. நற்தியானம் – Right Meditation

இங்கே  யோகாவின்  உயர்நிலை  பயிற்சியான  தியானத்திற்கு  மட்டுமே  முக்கியத்துவம்  கொடுக்கபட்டது. இதே  காலகட்டத்தில்தான்  தெற்கே  திருவள்ளுவர்  என்ற  மாகான்  திருக்குறளை எழுதியதாக  சொல்லப்படுகிறது, அதாவது  கிபி 300  மற்றும் கிபி 250க்கும் இடைப்பட்ட  காலம்.

 • நாகரீக காலத்துக்கு யோகா ( Classical Yoga)

ஆனால் அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சிதறிக்கிடந்த  யோகக்  கலையை  ஒரு  நூல்  வடிவில்  கொண்டுவந்தவர்  பதஞ்சலி  முனிவர்/சித்தர்/யோகி. இவரின்  காலம்  புத்தரின்  காலதிற்கு  அடுத்த  காலம், இவரின்  “யோகா  சூத்திரம் Untitled5(Yoga Sutra translated as “Ligt on Yoga”). யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பல காலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல் தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் ‘மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக’ யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும். நன்றி: தமிழ் விக்கி பீடியா.

யோகா  சூத்ரா  196 சூத்திரங்களை  உள்ளடக்கியது.  நான்கு  பாகங்களாக  பிரிக்கபட்டு  ஒவ்வொரு  பாகமும்  யோகத்தின்  படிநிலைகளை  அழகாக  விவரிக்கிறது.

 1. சமாதி பாதம் 51 ( உடல், உள்ளம்  பற்றிய  ஒழுக்க விழிப்புணர்வு விளக்கம்).  இங்கசாதனா பாதம் 55 ( உடல்  உள்ளம் பற்றிய ஒழுக்க  விழிப்புணர்வு பயிற்சிகள்)
 1. விபூதி பாதம் 56  (பயிற்சியால்  கிடைக்கும்  பலன்கள்)
 2. கைவல்ய பாதம் 34  (பலன்களால்  எப்படி  ஆத்மாவை  விழிப்படைய  செய்து  நற்பேறு  பெறுதல், மோட்சம்)

இன்னும்  சொல்லப்  போனால்  உலகின்  முதல்  மனோதத்துவ  நிபுணர்  பதஞ்சலிதான். தமிழ்நாட்டில்  இவரை  தன் குருவாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்  என்று திருமூலர்  தன்  திருமந்திரத்தில் குறிப்பிட்டு  இருக்கிறார்.

யோகா  சூத்திரம் யம, நியம என்ற  ஒழுக்க கோட்பாடுகள்  புத்தரின்  கோட்பாடுகளையும்  உள்வாங்கி  இருக்கிறது  என்று  சுவாமி  சிவானந்தர்  குறிபிடுகிறார். புத்தருக்கு சில  வருடங்களுக்கு  பின்பு  வந்தவர்  பதஞ்சலி. இந்தக்  காலகட்டம்தான்  யோகா  உடலியல்  மற்றும்  உளவியல்  கருத்தக்களை  உள்வாங்கி  முறைப்படுத்தபட்டு உலகிற்கு  அறிமுகப் படுத்தப்பட்டது. இது  அஷ்டாங்க   யோகம்  என்றும்  ராஜ  யோகம்  என்றும்  அழைப்படுகிறது.  ஆனால்  பதஞ்சலி  எந்த  ஒரு  ஆசனங்களின்  பெயரையோ  அல்லது  பிரானயமங்களின் பெயரையோ  குறிப்பிட்டு  சொல்லவில்லை. இவர் தற்போதைய  தமிழகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்தில்  சமாதி  அடைந்ததாக சொல்லப்படுகிறது. யோகாவை  தொகுத்ததால்  இவர்  யோகாவின்  தந்தை  என்றும்  அழைக்கப் படுகிறார்.

 1. நாகரீக காலத்துக்கு பிந்தைய  யோகா (Post Classical Yoga)

புத்தர்  காலத்திலும் அவருக்கு  பின்னால்  வந்த  பதஞ்சலி முனிவர் காலத்திலும் யோகாவை  வெறும்  தியான Untitled 6 முறையாக செய்து  சமாதி  நிலையை அடைவதற்கு  மட்டுமே  பின்பற்றி  வந்தார்கள், ஆசனம், பிராணாயம்,  உடல் உள்  உறுப்புகள்  சுத்திகரிப்பு  போன்றவற்றை சரியான  முறையில் செய்யாததால்    பலர்  தோல்வியே  காண  முடிந்தது. அப்போது  தோன்றியதுதான்  “ஹத யோகா”. யோகி ஸ்வாத்மாராமாவின் “ஹத யோகா  பிரதிபிகா”, யோகி கோரக்நாத்தின் “கோரக்ஷ சம்கிதா”, யோகி ஜெரண்டா முனியின் “ஜெரண்ட சம்கிதா” ஸ்ரிநிவாசபட்ட மகா யோகியின் “ஹதரத்னா வழி” என்று  வரிசையாக ஹத யோகா  இலக்கியங்கள்   எழுதப்பட்டன.

இங்கே  உடலை  சுத்திகரிப்பதின்  மூலமாக  உடல்  உள்  உறுப்புகளை  சரியாக  இயங்க  செய்யலாம். நோயில்  இருந்து  தற்காத்துக்  கொள்ளலாம். உடலே  பிரதானம், ஒழுக்கம்  உடம்பில்  இருந்துதான்  ஆரம்பிக்கிறது  என்பது ஹத  யோகிகளின் எண்ணம்.  நாம்  குளிப்பது, பல்  துலக்குவது, சரியான  நேரத்தின்  உணவு  உண்பது, சரியான  நேரத்தில்  உறங்குவது, எல்லாமே  உடலை  சுற்றியுள்ள  ஒழுக்கங்கங்கள்.

ஹத  யோகாவின்  முக்கிய  கூறுகள்:

 1. முறையான உள் உறுப்புகள்  சுத்திகரிப்பு: கிரியாக்கள்.
 2. முறையான ஆசனம்: ஆசனங்ககள்
 3. முறையான சுவாசம்: பிரனாயமங்கள்
 4. முறையான ஓய்வு: சவாசனா மற்றும்  யோகா நித்திரை
 5. முறையான மனநிலை: தியானம்.

இந்த  முறையான பயிற்சிகளை  மேற்கொண்ட  பலர் சமாதி என்ற உயர்நிலை யோக நிலையை  எட்டி  பலனடைந்திருக்கிறார்கள்.  இந்த  கத  யோகமே  நவீன  உடற்பயிற்சிகளின்  தந்தை

 1. நவீன யோகா

நவீன  யோகாவின்  வரலாறு  1893 விவேகானந்தரின்  சி காகோ  உரையில்  இருந்து  ஆரம்பிக்கிறது. இவருக்கு Untitled7 முன்னாள் சில  யோகா  ஆசிரியர்கள்  இந்திய  எல்லையை,  இப்போதைய  பாகிஸ்தானையும்  சேர்த்து! கடந்திருந்தாலும்  அவர்களால்  சரியான  முறையில்  யோக   கருத்துக்களை மட்டுமல்ல  இந்திய ஆன்மீக  இலக்கிய  வரலாற்றை   மக்களிடம் கொண்டு  சேர்க்க முடியவில்லை, காரணம்  அவர்கள்  தங்களை  சனாதனத்தின்  பிரதிநிதிகளாக  மட்டுமே  காட்டிக் கொண்டதால்.

விவேகானந்தருக்கு  பிறகு பரமஹம்ச யோகானந்தா 1920ஆம்  ஆண்டு அமேரிக்கா  சென்றார். 1925 ஆம்  ஆண்டு போஸ்டன்  நகரில் போஸ்டன்  நகரில் “Self-Realization Fellowship” என்ற  அமைப்பை  நிறுவினார், அது  இன்றும் லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரை  தலைமை இடமாகக்  கொண்டிருக்கிறது. இவருடைய  ஒரு யோகியின்  சுய சரிதை ( Auto biography a Yogi) என்ற புத்தகம்  இன்றும்  பிரபலம்.

Untitled81919 சுவாமி குவளையனந்தா கைவல்யதமா ( Kaivalyadhama) என்ற அமைப்பினை  உருவாக்கி கத யோகாவை  உடற்கல்வித்  துறையில் அறிமுகப் படுத்தி  அதில்  பல  ஆராய்ட்சிகள்  மேற்கொண்டார். இன்றும்   அது  தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து  வெளிவரும்  ஆராய்ட்சி  கட்டுரைகள் 1924 ல் இருந்து “யோக-மிமாம்சா” என்ற இதழில் காலாண்டுக்கு  ஒரு முறை  இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த  சுவாமி சிவானந்தா  என்ற  MBBS  மருத்துவர், மலேசியாவில்  தன்  மருத்துவப்  பணியைத்  துறந்து விட்டு  Divain Life Society என்ற அமைப்பை  நிறுவி யோகாவை  மருத்துவ  முறையில்  ஆராய்ந்து  அதை  புத்தகங்களாக Untitled 10 வெளியிட்டார்.  இவர்  தியான  நிலையில்  இருந்தே  சமாதி  அடைந்தார்

பின்னாளில்  பிஹார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் Bihar School of Yoga என்று  ஒரு  பிரிவில்  இயங்கி  யோகாவில்  ஆசிரியர்களை  உருவாக்கும்  முயற்சியில்  ஈடுபட்டு  அதில்  வெற்றியும்  பெற்றார்கள்.  இவரின்  சீடரான  சுவாமி  சத்யானந்தா அவர்களின் “ஆசானா, பிரனாயமா, முத்ரா, பந்தா” (ABMB) என்ற புத்தகம் உலக  அளவில்  அதிக அளவில்  வாங்கப்பட்ட  யோகா  புத்தகமாக  விளங்குகிறது.  இன்றைய  பல  யோகா  மற்றும் கடவுள்  விற்பனர்கள் பின்பற்றுவது  இந்த  புத்தகத்தைதான்.

என்னதான் பலர் தேவையற்ற   குற்றச்சாட்டுகள்  சொன்னாலும்  யோகாவின்  வரலாற்றில்  ஓஷோ  என்று  அழைக்கபடும்  ரஜினீஷ்  முக்கிய  இடத்தைப் download பிடிக்கிறாரர்.  இவரை  குறை  சொல்லிக்கொண்டே  இவரின்  கருத்துக்களை  தங்கள்  மேடைகளில்  பேசும்  பல  நவீன  ஆன்மீக  விற்பனை  முகவர்களை  கண்டிருக்கிறேன்.

யோகாவின்  ஒரு  பகுதியான  ஆசான்களை  உலகில்  பல  இடங்களில்  கொண்டு சென்ற  பெருமை  BKS. அய்யங்கார், பட்டாபி ஜோஸ்,  இந்திராதேவி   போன்றோருக்கு போய் சேரும்.  இவர்கள் அனைவரும் கிருஷ்ணமாச்சாரி  என்ற யோகியின்  உறவினர்கள்  மற்றும்  சீடர்கள்.

இதில் ஐயங்கார்  நவீன யோகாவின்  தந்தை  என்று  அழைப்படுகிறார்.  ஏனென்றால்  இவர் ஆசான்களை  சொல்லிக்  கொடுக்கும்  முறையில்  பல  மாற்றங்களை  செய்து  அனைத்து  வயதினரும்  செய்யும்  படி  செய்தார். இவரிந உறவான  பட்டாபி  ஜோஸ்  விநியாசா மற்றும் அஷ்ட்டாங்க  விநியாசா  என்ற முறையை  ஆசான்களில்  பின்பற்ற  ஆரம்பித்தார்.

11

யோகாவின்  தற்போதைய  நிலை:

யோகா  என்றால்  அது  வெறும்  ஆசனங்கள் என்று  மட்டுமே பலர்  நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.  இன்னும்  பலர்  கண்ணை  மூடிக்கொண்டு  உட்கார்ந்திருப்பது  என்று  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னும்  பலர்  யோகா  நோய்களை  குணப்படுத்தும்  என்று  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   இன்னும் பலர்  மூச்சு பயிற்சிகள்  மட்டும்தான்  யோகா  என்று நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம்  சிலரோ  யோகா  ஹிந்து  மததிற்குரியது  என்று  நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில  வெளிநாட்டினர்  யோகாவில்  இருக்கும் ஆசனங்கள்.  பெண்களுக்குரியது  என்று  மட்டும்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும்  சிலரோ  யோகா பணக்காரர்கள்  மட்டுமே  செய்யக்கூடியது  என்று  நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

Untitled13இது  போன்ற  பல  முரணான  கருத்துக்கள்  யோகாவை  சுற்றி  வந்துகொண்டிருக்கிறது.  இந்த  முரண்களை  எல்லாம்  தாண்டி  வெளிநாட்டுக் மருத்துவர்கள்  ஆசான்களின்   உடற்கூறியல்  பற்றி எல்லாம்  ஆராய்ந்து  புத்தகங்கள்  வெளியிட்டு  இருக்கிறார்கள்.

யோகா  ஆசனங்கள், பிரானாயமக்கள், கிரியாக்கள், தியானம்  இவற்றை  ஆராய்ந்து  எப்படி  யோகா  சைகோ-சொமடிக்  நோய்களை  குணப்படுத்த   உதவுகிறது  என்பதற்கு  புத்தங்கங்கள்  வெளியிடுகிறார்கள். இவையெல்லாம்  சிறு  சிறு  உதாரணங்களே. யோகாவை  சிறந்த  நிலைக்கு  எடுத்துச்  செல்வதில்  வெளிநாட்டினரின்  பங்கு  அற்புதமானது. உலகில்  அதிகமாக யோகாவை பின்பற்றுபவர்கள்  வெளிநாட்டினர்தான். அதை வர்கள்  மில்லியன்  டாலர்  வியாபாரமாகவும்  மாற்றிவிட்டார்கள். இந்தியாவில்  கொடுக்கும்  சான்றிதழ்களை  விட, அமெரிக்காவை  மையமகாக்  கொண்ட யோகா  அல்லயன்ஸ்  எனப்படும் அமைப்பின்  மூலம்  கொடுக்கப்படும்  சன்றிதழ்களே  பெரிதாக மதிக்கப்டுகின்றன. ஆனால்  நம்ம  ஊரில்  யோகா மதமென்றும், பணக்கார்கள்  செய்வதென்றும்  கூறிக்கொண்டிருகிறோம்.

யோகா  என்ற  அறவியலை  கற்றுக்  கொள்வதும், புரிந்து கொள்வதும்  ரொம்ப  சுலபமல்ல.  அது  ஒரு  சமுத்திரம். Untitled14அதில்  நீந்தியவர்கள்  மிகச்  சிலரே.  அவர்களை  மனதில்  கொண்ட நம்முடைய  நோக்கம்.  யோகாவை  சாதாரன  மக்களுக்கும்  சென்று  சேரும்  விதமாக  இருக்கவேண்டும்.  ஏழை  பணக்காரன்  வேறுபாடுகள்  இல்லாமல்  எல்லோருக்கும்  யோகாவை  கொண்டு  சேர்க்க வேண்டும். வாழ்வின்  ஒவ்வொரு  நிலையிலும், ஒவ்வொருவரும்  யோகாவை  எப்படி  அவர்களுக்கேத்  தெரியாமல்  பின்பற்றிக்  கொண்டிருக்கிறார்கள்  என்பதை  எல்லாம்  மக்களுக்கு  எடுத்து சொல்ல  வேண்டும். இதையே  நோக்கமாகக்  கொண்டு  இவ்வரலாற்றுக்  கட்டுரையை  முடித்து, மீண்டும்  ஆரம்பிப்போம்.

நன்றி.

Related Posts