அரசியல் விவசாயம்

கிராம பொருளாதாரத்துடன் ஒரு மல்யுத்தம் … – பி.சாய்நாத்

அது சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்த கூட்டமோ என நீங்கள் நினைப்பீர்கள். ஒரு விளையாட்டு தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்னமே, அதுவும் அடைமழைத் தூறல் நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவதைப் பார்க்கும் யாரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், மஹாராஸ்ட்ராவின் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டை ஆண்டுதோரும் நடத்தும் குண்டல் நகரில் எப்போதும் வருவதைக் காட்டிலும் இது குறைவான கூட்டம். அந்த விளையாட்டு – மல்யுத்தம் (குஸ்தி). இந்த விளையாட்டு நிகழ்வுகள் மாநிலத்தின் ஊரக பொருளாதாரத்தோடு, குறிப்பாக மேற்கு மஹாராஸ்ட்ராவின் விவசாயத்தோடு இணைந்தவை. அப்படியிருந்தும், சென்ற ஆண்டின் தண்ணீர்ப் பஞ்சம், குண்டல் நகரில் நிகழ்ச்சியையே இரத்து செய்ய வைத்தது.

“3 லட்சம் பேருக்கு தண்ணி ஏற்பாடு செய்யறதுனா… யோசிச்சுப்பாருங்க” என்று கேட்கிறார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஒருவர்.

மஹாராஸ்ட்ராவின் ஊரகப் பகுதிகளின் பொருளாதார, கலாச்சார, அரசியல், விளையாட்டு அனைத்திலும் உள்ளே மல்யுத்தம்க்கு இடமிருக்கிறாது. நகரப் பகுதிகளிலும் மல்யுத்தம் விளையாட்டு உண்டு, ஆனால், மல்யுத்த வீரர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே அமைந்திருப்பார்கள். ‘தி இந்து’ சார்பில் ஏராமான பயிற்சி மையங்களுக்குச் சென்றபோது இது தெரியவந்தது.

பின்னடைவு:
மஹாராஷ்ட்ராவில் இப்போது உள்ள நெருக்கடி சில ஆண்டுகளுக்கு இந்த விளையாட்டை பாதிறது. சென்ற ஆண்டு வறட்சியும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தண்ணீர் பஞ்சமும் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. “ஊழல்வாதிகள் எங்களை பேரழிவில் தள்ளிவிட்டார்கள்” என்கிறார் அப்பாசாஹெப் காதம், இவர் மாநிலத்தின் மிகச் சிறந்த விரர்களில் ஒருவர், கோலாப்பூர் நகரத்தில் அவர் ஒரு மல்யுத்த பயிற்சி நிலையம் வைத்து நடத்துகிறார். “பெரும்பாலான விளையாட்டுப் போட்டுகள் இரத்தாகிவிட்டன” இன்னும் பலவற்றில் பரிசுப் பணத்தின் அலவு குறைந்துவிட்டது. “நிறைய மாணவர்கள், பயிற்சியை நிறுத்தியதால், பல குடும்பங்கள் துன்பத்தில் உள்ளனர்” இந்த மாணவர்களை உருவாக்க அவர்கள் செய்த செலவுகள் வீண். இந்தக் காலத்தில், அதிகபட்ச மழையாலும், இதே பிரச்சனை தொடர்ந்தது.

ஒரு சிறு விளையாட்டுப் போட்டியில் ஒரு ‘டிரேக்டர்’ முதல் பரிசாக இருக்கும். கண்டிப்பாக ஒரு தனியார் நிறுவனம் பண முடிப்பு வழங்கும். சங்லி மாவட்டத்தில் குண்டல் மெகா போட்டி நிகழ்ச்சியை நடத்தும் பாலாசாஹெப் லட், அருணா லட் ஆகியோர் இதனை தெரிவித்தனர். “ஒவ்வொரு ரூ.25 லட்சத்திலும், ரூ.15 லட்சம், சாதாரண விவசாயிகள் கொடுப்பார்கள். அவர்கள் நிலைமை மோசமானால், மல்யுத்தப் போட்டியும் பாதிக்கும்”

நல்ல வாழ்க்கைக்கான டிக்கெட்
மல்யுத்தம் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான வழியாகவும், அந்தஸ்தின் சின்னமாகவும் – ஊரக ஏழைகளுக்கு அமைந்திருக்கிறது. “90 சதவீதம் பேர் ஏழை, விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்” என்கிறார் கோலாபூரைச் சேர்ந்த காதம். இதரர்கள், நிலமற்ற ஏழைகள், ஆசாரிகள் இன்ன பிறரின் குழந்தைகள். படித்த வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் ஒருவருமில்லை. மல்யுத்தம் ஒருவரின் ஆர்வமாகவும் அமைந்திருக்கிறது. பயில்வான்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே உச்சத்தை எட்டுகிறார்கள்”
தனது ‘தலீமில்’ 3 மிகச் சிறிய அறைகளில் பகிர்ந்துகொண்டு, குழுவாக சமைத்துண்டு வாழும் இரண்டு மிக இளம் வீரர்களின் ஆட்டம், அவர்களின் பேரார்வத்தைக் கட்டுகிறது. பலர் 4 மணிக்கே எழுந்து, தலீமில் பயிற்சி தொடங்கும் 5 மணிக்குள்ளாக ஓட்டப் பயிற்சி செய்கின்றனர். 8.30 வரை உடற்பயிற்சி செய்கின்றனர். அந்த வீரர்களில் இளையவர், பயிற்சிக்கிடையில் பள்ளிக்கும் சென்று வருகிறார். அரைமணி நேர ஓய்வுக்கு பின்னர் தன் பயிற்சியை மீண்டும் தொடர்கிறார். பயிற்சி மாலை 8.30 மணி வரை நடக்கிறது. அதிகபட்ச ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது, “ஒரு இளம் கிரிக்கட் வீரனை உருவாக்க, ஆண்டில் 4 மாதங்கள் தேவைப்படலாம். மல்யுத்தத்திற்கு 10 ஆண்டு பயிற்சியும் போதுமானதல்ல’”
தலீம்களில் விவசாயிகளும் தொழிலாளர்களும், தங்கள் மகனை பயில்வானாக ஏற்கக் கேட்டு தவமிருக்கிறார்கள். 6 மணி இருக்கும், 83 வயதான கன்பத்ராவ் அந்தல்கர், கோலாப்பூரில் உள்ள தனது பயிற்சி மையத்தில் 8 வயதே உடைய ஒரு சிறுவனுக்கும், பிறருக்கும் பயிற்சியளிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆசியாத் தங்கப்பதக்க வீரரும், ஒலிம்பிக் போட்டியாளராக இருந்தாவருமான மூத்த வீரர்களின் பயிற்சியை உற்று நோக்கி, அதனை இளம் வீரர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது அவர் மல்யுத்த வீரர்களுக்கு கட்டளைகளையும், நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுக்கிறார். அடிக்கடி, அவரின் இடத்திலிருந்து முன் சென்று, இளம் விரர்களுக்கு அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டி, சரியான நகர்வுகளை கற்றுத் தருகிறார்.

“விவசாய பொருளாதாரத்துடன், ஊடாகப் பிணைந்தது மல்யுத்தம், ஆனால் அந்த பொருளாதாரம் நொறுங்கிவருகிறது” என்கிறார் அந்தல்கர், தலீம்களில் கட்டணம் மிகவும் குறைவு. மாதம் ரூ.100-200. அந்தல்கர், மாநிலம் முழுவதும் நடக்கும் பல போட்டிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக செல்வதம் மூலம், இந்த கட்டணத்தில் வருவதை விட அதிகம் சம்பாதிக்கிறார். மிக ஏழ்மையான மாணவர்களுக்கு, அவர் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. “இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவுக்காக பெரும் பணம் செலவிட வேண்டி இருக்கும்”

அரசின் அற்ப உதவிகள்:

அவர்கள் ஏராளமான சாதனையாளர்களைப் படைத்திருந்தபோதும் – அவர்களது கூட்டமைப்பை தலைமையேற்கும் பெரிய அரசியல் வாதி தவிர – மல்யுத்த ஆசிரியர்கள், அரசிடமிருந்து அற்ப உதவிகளையே பெற்றுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் தங்கள் வீரர்களை எத்தனையோ சிறப்பாக நடத்துகின்றன இதுவே மேற்கு மஹாராஷ்ட்ரா முழுவதும் மிகப்பெரும் வருத்தமாக படந்திருக்கிறது.

அவர்களுக்கு உணவுச் செலவு நிறைய பிடிக்கிறது. பூனேவில் அமைந்துள்ள அவரது தலீமில் – முன்னால் ஆசியாத், காமன்வெல்த் மற்றும் தேசிய வீரரான கலர்புல் காகா பவர் சொல்கிறார், “மூத்த வீரர்களுக்கு 400 கிராம் பாதாம், 4 லிட்டர் பால், 500 கிராம் நெய், முட்டைகள், பலம் காய்கறிகள் அல்லாமல் வாரத்தில் மூன்றுமுறை ஆட்டுக்கறி தேவைப்படும்” இது ஒரு நாலைக்கு சுமார் ரூ.700 ஆகும், இளையவர்களுக்கு ரூ.500 ஆகலாம்.”

இதுவொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கு பெரிய முதலீடு, “இருப்பினும் சிலசமயம், கிராமத்தினர் உதவுகார்கள்”. இரண்டு ஆண்டுக்ளில் இளம் வீரனால் ஒரு ஆட்டத்தில் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்க முடியும், மூத்த வீரனால் ரூ.5 ஆயிரம் பார்க்க முடியு. ஒரு பயில்வானின் திறமைக்கு ஏற்ப, இந்த வருமானம் அதிகரிக்கு. திருவிழா கண்காட்சிகளில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள், அங்குதான் பெரும்பாலான போட்டிகள் நடக்கும். சில நேரங்களில் வளரும் வீரர்களுக்கு பார்வையாளர்களும் பணமுடிப்பு வழங்குவார்கல். சில போட்டிகளில், சிறந்த வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வெல்ல முடியும் என்கிறார் அப்பாசாஹெப் காதம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள் இரத்தான காரணத்தால், இளம் வெற்றியாளர்களான சசின் ஜாம்தர், யோகேஷ் பாம்பலே கட்டண வருமாணத்தில் பெருமளவு இழந்தனர். திறமையானந்த சந்தோஷ் சுதாரைப் பொருத்தமட்டில் “கோலாப்பூர் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறி, என் குடும்பம் இருக்கும் சங்லி மாவட்டத்தின் அட்படிக்கு திரும்பியதை” பார்க்க முடிந்தது.

பாய்களின் மீது மல்யுத்தம் செய்வது விளையாட்டை மாற்றியமைக்கிறது. “இந்திய மல்யுத்த வீரர்கள் களிமண் தரையில் விளையாடி வலர்ந்தவர்கள், பாய்களில் அல்ல” என்கிறார் காவியப் புகழ் அதல்கர். மல்யுத்தத்துக்கு ஏற்ற களிமண் தயாரிப்பில், நூற்றுக்கணக்கான கிராமங்கல் ஈடுபட்டுள்ளனர், அது ஏராலமான தொழிலாளர்கள் தேவைப்படும் சிக்கலான பணி. குறிப்பிட்ட அலவு தயிர், எழுமிச்சை நீர், நெய் மற்றும் வெங்காயத்தின் கலவை அது. வெங்காயம், மல்யுத்த வீரர்கல் காயமடைந்தால், அந்தக் காயங்களை ஆரச் செய்வதற்காக பயன்படுகிறது. சில இடங்களில் அரைக்கப்பட்ட தசைத் துண்டுகளும் சிரிய அலவில் சேர்க்கப்படுகின்றன.

ஹாக்கியைப் போலவே:

40 அடு நீளம் 40 அடி அகலம் கொண்ட, சாதாரண அலவிலான பாயின் விலை ரூ.7 லட்சம் இருக்கும். சிறிய கிராமங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு இது மிகவும் எட்டாத ஒன்று, சிறிய அளவில் கூட அவர்களால் இதனை வாங்க முடியாது. எல்லோருமே பாய்க்கு மாறினால், பல உள்ளூர் போட்டிகள் முடிந்துபோய்விடலாம் என்கின்றனர் பாரம்பரியவாதிகள். இது “அஸ்ட்ரோ தரை பயன்பாடு இந்திய ஹாக்கிக்கு என்ன செய்ததோ அதையே இந்திய மல்யுத்தத்துக்கு செய்துவிடலாம்” என்கின்றனர் சிலர். உள்ளூர் சமூகத்தினரால் இதனை வாங்க முடியாத காரணத்தால், இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்தப் போட்டிகளில் தங்கள் ஆதிகத்தை இழந்தனர். பாயில் மல்யுத்தம் செய்வது, வேகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டிகள் சில நிமிடங்களில் முடிந்துவிடுகின்றனர். ஆனால், களி மண் மீது நடக்கும் சண்டை 25 நிமிடங்கள் வரையில் நீளும். “இரண்டுக்குமான வித்தியாசம் கலாச்சாரம், பொருளாதாரம், செயல்பாடு மற்றும் விளையாட்டு என அனைத்திலுமானது” என்கிறார் அந்தல்கர்.

சென்ற பருவத்தில் எல்லா மல்யுத்தங்களும் ரத்து செய்யப்பட்ட அட்படி கிராமத்தில் நம்தியோ ஸ்ரீரங்க பாதாரே அவநம்பிக்கையுடன் பேசுகிறார். ” தொடர்ந்துவரும் தண்ணீர்ப் பஞ்சம், ஒவ்வொரு பருவத்திலும் ஏராளமானவர்கள் விவசாயத்தைக் கைவிடுவதைக் காட்டுகிறது. விவசாயம் மரணமடைந்தால், மல்யுத்தமும் மரணமடையும்”

  • தமிழில்: இரா.சிந்தன்

Related Posts