பிற

முதலாம் உலக போரைப் பற்றி!

ஒட்டோமான் பேரரசு முதலாம் உலக போரின் போது‍ தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் (அக்டோபர் 30, 1918)

முதல் உலகப்போர் உலகம் தழுவிய அளவில் நடைபெறவில்லை எனினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கலந்து‍ கொண்ட போர். இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

போரில் பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர் வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.

போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போர் வீரர்களுமாக சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். இப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.

Related Posts