அறிவியல் தொழில்நுட்பம்

மாற்றுவில் எழுத..

 1.அறிமுகம்

 WordPress எனும் உலகெங்கிலு‍ம் பல மில்லியன் கணக்கான மக்களால் அழகு ததும்பும் வகையிலும், பார்த்தவுடனே ஈர்க்கத்தக்கதாக வலைத்தளங்களையும் (Websites), வலைப் பூக்களையும் (Blogs) உருவாக்க உதவும் கட்டற்ற மென்பொருள் அமைப்பைக் கொண்டு‍ “மாற்று‍” வடிவமைக்கப்பட்டுள்ளது‍. இதில் புதுப் பயனர்கள் எழுதுவதற்கு‍ உதவியாக இந்த சிறு‍ கட்டுரை உதவும்.

 2. புதுப் பயனர் கணக்கு‍

முன்னதாக உங்களுக்கான புதுப் பயனர் கணக்கை maattru.com/register இல் தொடங்கிக் கொள்ளுங்கள். இதிலுள்ள இதழியல் கொள்கையை முழுமையாக படித்தல் இந்த தளத்தில் கட்டுரைகள் மற்றும் இந்த தளம் கடைப்பிடிக்கும் இதழியல் நெறிகளை தெரிந்து‍ கொள்ள முடியும்.

3. உள்நுழைதல் 

கணக்கை தொடங்கிய பிறகு, உங்களது பதிவுகளை (பதிவுகள்-Posts என்பன சாதாரணமான வலைப்பூ உள்ளீடுகள்தாம். அவை மாற்றுவில் கட்டுரைகளாக, கவிதைகளாக நீங்கள் எழுதலாம்) உள்ளீட செய்ய மாற்றுவில் உள்ளே நுழைய வேண்டும். உள் நுழைதல் என்றால் Login. இதை மாற்று இணையதளத்தில், இடது புறத்தில் மேல் பகுதியில் காணலாம். அதை கிளிக் செய்தவுடன் கீழே காணப்படும் பக்கத்தை உங்கள் கணினியில் பார்க்கலாம்.

1_html_c7133fbe

அதில் புதுப் பயனர் கணக்கு‍ தொடங்கும் போது‍ இடப்பட்ட பெயரையும் (User name) கடவுச் சொல்லையும் (Password) கொடுத்தால் எளிதாக உள் நுழையலாம்.

4. டேஷ்போர்ட் (Dashboard)

இப்போது நீங்கள் உங்கள் DashBoard-க்கு நேரடியாக செல்லலாம்.

1_html_490f2903

மாற்று‍ தளத்தைப் பொறுத்த வரை Dashboard என்பது நீங்கள் கட்டுரைகள் எழுதி நிர்வகிக்க உதவும் பக்கமாகும். அதில் உங்களுடைய கட்டுரைகள், கட்டுரைகளின் நிலை, பின்னூட்டமிடுவதற்கான(feedback) வசதி மற்றும் வெளியேறுவதற்கான வசதி (Logout) உள்ளிட்ட தகவல்கள், வசதிகள் மேல்புறத்தில் இருக்கும்.

அடிப்படையான தகவல்கள் மட்டுமல்லாமல், இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகள், பக்கங்கள், உங்களுக்கு வந்துள்ள கருத்துகள், ஆகியவற்றை உங்கள் கணினிக்குள் கொண்டு வந்து தருவதே Dashboard ஆகும்.

Dashboard-ன் உதவியோடுதான் நாம் நமது முதல் பதிவை எழுதியாக வேண்டும். அதற்காக Dashboard-ன் செயல்பாடுகள் வசதிகளை அறிந்து கொள்வதும் அவசியமானதே.

Dashboard-ன் மூலம் நாம் என்னென்ன செய்யவேண்டும் என விரும்புவோமோ, அவையனைத்தும் இடப்பக்கம் Menu வடிவில் இருக்கும். இங்கே அவை.

bitmap

·         Home (இல்லம் அல்லது முகப்பு)

·         Posts (பதிவுகள்)

·         Comments (கருத்துகள்)

·         Profile (பயனர் விபரம்)

·         Tools (கருவிகள்)

·         Collapse Menu

இந்த Menu-களைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.

மூலம்- கணியம் இணைய இதழ்

Related Posts