ஏன் யோகாசனம் செய்ய வேண்டும்?

சித்தர்கள் நோய்கள் வராமலும் வந்த நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் எளிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். இந்த யோகாசன பயிற்சிகளை தினசாரி வாழ்வில் செய்து வந்தால் நாம் நோய்களில் இருந்து விடுபட முடியும்.

யோகத்தின் பலன்கள்:-

யோகாசனம், உடல் உறுப்புகளை நன்றாக இயங்கவைக்கிறது. சுரப்பிகளின் இயக்கத்தை சீரமைக்கிறது. இதயத்தையும், இரத்த ஊட்ட நாளங்களையும் ஊக்குவிக்கிறது, இதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் காப்பாற்றி அவைகளை நிவர்த்தி செய்கிறது. சோம்பலினை முற்றிலும் போக்கி புத்துணர்ச்சியளிக்கிறது.

உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல்தளர்ச்சியை குறைத்து புத்துணர்ச்சி தருகிறது. உடல் வளையும் தன்மை அதிரிக்கிறது. இது உடலுக்கு உறுதி அளிக்கிறது.

1. குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
2. கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
3. உடல் எடையை பராமரிப்பது.
4. உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது.
5. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பது.
6. உடலில் தேவையற்ற கொழுப்பு சேரவிடாமல் தடுத்து இதய நோய்கள் வராமல் காப்பது.
7. ஆஸ்துமா, சளி, சைனஸ் போன்ற நோய்களை நிவர்த்தி செய்கிறது.
8. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
9. உடல் சோர்விலிருந்து விடுபட்டு சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது.

யோகத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் பற்றி முந்தய தொகுப்பில் பார்த்தோம்.

யோகாசனத்தை பற்றிய தவறான கருத்துகளுக்கு வதந்திகள், யோகத்தைப்பற்றி அரைகுறையான அறிவு உள்ளிட்டவை காரணங்களாகும். வித்தியாசமான கொள்கைகளும, வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன தேர்ச்சியடையாத பயிற்ச்சியாளர்களின் வழிகாட்டல்கள், மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது.

யோகாசனப் பயிற்சியின் குறிப்புகள்:-

 1. யோகாசனம் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். காலையில் உடல் பிடிப்பாக இருக்கும். ஆனால் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மாலை உடல் தளர்வாவும் மனம் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கும். எனவே யோகத்தி தினமும் காலையிலும், மாலையிலும் செய்வது சிறந்தது. இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கிறது.
 2. சூரிய ஒளியின் கடும் வெப்பத்தில் கண்டிப்பாக செய்யக்கூடாது .
 3. சுத்தமான, காற்றோட்டமுள்ள, சப்தமில்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 4. பயிற்சிக்குமுன் மலஜலங்களை வெளியேற்றிவிடவேண்டும், மலச்சிக்கல் இருக்கும்போது  கடினமான ஆசனங்கள் செய்யக்கூடாது.
 5. அவசியப்பட்டால் நீர் அருந்தலாம். உணவு நேரம் முதல் பயிற்சி நேரம் வரை ஜீரணத்திற்கான  இடைவெளி விட வேண்டும். சிற்றூண்டியாக இருந்தால் ஒருமணி நேரமும், பேருண்டியாக இருந்தால் 4 மணி நேரமும் இடைவெளி இருக்க வேண்டும்.
 6. குளித்த பிறகு யோகாசன பயிற்சி செய்யலாம். குளியல் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இல்லையென்றால் ஒருவர் யோகப்பயிற்சியை செய்து முடித்த 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.
 7. பயிற்சி செய்பவர் உடல் சதைகளில் அசவுகரியம் (வலி) ஏற்பட்டால் உடனடியாக யோகா பயிற்சியாளரிடம் கூறவேண்டும்.
 8. கண்களை மூடாமல் முதலில் பயிற்சி செய்து நன்கு பயிற்சிபெற்று சா¢யான நிலையை அடைந்தபிறகு கண்களை மூடி பயிற்சி செய்யலாம்.
 9. பயிற்சியாளாரின் மூலம் சரியான மூச்சுப்பயிற்ச்சியின் விவரங்களை அறிந்து செய்ய வேண்டும். மூச்சை மூக்கு வழியாக மட்டும் செலுத்தி, வாய் வழியாக செலுத்தாமல் இருக்க வேண்டும். மூச்சை அடக்கி பயிற்ச்சியில் ஈடுபடக் கூடாது.
 10. உடல் நிலையை பற்றி பயிற்சியாளரிடம் கேட்டு அதற்கேற்ப ஆசனப்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

புத்தகத்தை பார்த்து  செய்துவிடலாம் என்பது மிகவும் தவறாகும். நாம் செய்யும் நிலை சரியானதா என நம்மாலேயே பார்க்க முடியாது. அது தவறான நிலையாககூட இருக்கலாம், அதனால் உடல் பிடிப்பு ஏற்படலாம், இது யோகாசனத்தின் மீது அச்சத்தை உண்டாக்கிவிடும். உரிய பலனும் கிடைக்காது.

About ஜெ.கௌதம் செல்வா

 • தோழரே, ஆதாரமற்ற கருத்து எது என குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும்,

  • Ajith

   தங்கள் கேள்விக்கு நன்றி. மேலே நீங்கள் யோகாவால் ஏற்படும் பயன்களாக கூறும் 9 க்கும் ஆதாரம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இவற்றிற்கு அறிவியல் சான்றுகள் ஏதேனும் உள்ளனவா?

   • உடல் சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்:-
    1.மன அழுத்தம் (Low BP)
    2.பசியின்மை
    3.தூங்கும் போது மூச்சுத்திணறல்
    4.சரியான தூக்கமின்மை
    5.சர்க்கரை நோய்
    6.உடல் பருமன்
    போன்றவைகள் கூறப்படுகிறது.

    இதில் மன அழுத்தம் என்பது மனதில் எழும் ஒருவித நீங்கா குழப்பமாகும். விளக்க முடியாத சோர்வு, பசியின்மை மற்றும் எதிர்மறையான உணர்வுகளுக்கு முக்கிய காரணமாக மன அழுத்தமும் செயல்படும். இதன் விளைவாக ஆற்றல் திறனை இழக்க நேரிடும். இதன் காரணமாக ஏற்படும் உடல் சோர்வினை ஆசனப்பயிற்சியின் மூலம் போக்கமுடியும்.

    தூங்கும் போது மூச்சுத்திணறல்
    இரவு நன்றாக தூங்குவதை போல் இருந்தாலும் உண்மையில் அப்படி நடக்காமல் போகலாம். தூக்க மூச்சின்மை பிரச்சனையால் நீங்கள் அவதிப்படலாம். அதாவது தூக்கத்தின் போது பல முறை உங்களால் மூச்சு விட முடிவதில்லை. இதனால் உங்கள் உடல்நலம் கெடும். ஆனால் இது எதுவுமே உங்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் குறட்டையால் உங்களுடன் தூங்குபவரின் தூக்கத்தை கெடுக்கிறீர்களா என்பதை அவர்களிடம் கேளுங்கள். அப்படியானால் நீங்கள் உங்கள் எடையை குறைக்க வேண்டிய நேரம் இது. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இதற்கு ப்ராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியின் மூலம் தீர்வுகாண முடியும்.

    சர்க்கரை நோய்
    சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் பலருக்கு அது தெரிவதே இல்லை. அளவுக்கு அதிகமான சர்க்கரையை இரத்த ஓட்டத்தில் தேங்கச் செய்வது தான் சர்க்கரை நோய். அதற்கு காரணம், அதனை இன்சுலினாக மாற்ற அதனால் முடிவதில்லை. அதனால் உடல் சோர்வடையும்.
    ஆசனப்பயிற்சியின் மூலம் உடலின் சர்க்கரை அளவை சரியான நிலையில் வைத்துக்கொள்ள முடியும். சர்க்கரையின் மூலம் வரும் உடல் சோர்வையும் கட்டுப்படுத்த முடியும்.

    அதேபோல் உடல் பருமன் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளின் மூலம் ஏற்படும் உடல் சோர்வு அதிகமாக உள்ளது இதனையும் ஆசனப்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

    இதன் காரணமாக மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்து குறைவு, இரத்த சோகை, இரத்த சிவப்பு அணுக்கள் குறைவு, சரியான உனவுப்பழக்கம் இல்லாத்தும் உடல் சோர்வு ஏற்படுவதற்கான காரணங்களாகவும் விளங்குகிறது.
    காபி, காப்ஃபைன் கலந்த டீ, சோடா, எனர்ஜி பானம், சில மருந்துகள் மற்றும் சாக்லெட் ஆகியவைகளில் காப்ஃபைன் இருப்பதால், தூக்கம் இல்லாத போது அது பெரிதும் துணை நிற்கும். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக அதை உபயோகித்தால் அதிகமான இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மற்றும் சோர்வு நிலை ஏற்படும்.

    மேலும் கேள்விகள் இருந்தால் குறிப்பிடவும். உங்கள் கருத்துக்கு நன்றி.

 • Ajith

  ஆதாரமற்றக் கருத்துக்கள் உள்ளடங்கிய கட்டுரைகள் வெளியிடுவதில் மாற்று இன்னும் கவனமாக இருப்பின் சிறப்பாக இருக்கும்.