அரசியல்

எதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்?

மனித வரலாற்றில் மிக வீரியமான, எழுச்சி மிக்க இந்திய விவசாயிகளின் போராட்டம் எந்த வித சமரசமும் இன்றி ஆளும் வர்க்கத்தை அசைக்கும் ஓர் போராட்டமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே வேலையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகயை நிறைவேற்றுவதற்கு பதிலாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்க்கு அடிக்கல் நாட்டி தனது நீண்டகால திட்டத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது.
இதை மக்கள் ஆடம்பரம், வீண் செலவு என்றே கருதுகின்றனர்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் அம்சங்கள்:

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும், மேல்சபை உறுப்பினர்கள் 384 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்தில் 543 லோக்சபா மற்றும் 245 ராஜ்ய சபா எம்.பி.க்கள் அமருகின்றனர்.

ஏன் இந்த புதிய மாற்றம்?


இந்தியாவில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டே மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு மக்களவை உறுப்பினர் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
1950’களில் இந்திய மக்கள் தொகை 361 மில்லியனாக இருந்தது 1970’இல் 548 மில்லியனாக உயர்ந்தது. இந்திய அரசாங்த்தின் கவனம் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்து அமல் படுத்தப்பட்டது. இந்தியாவின் தென் மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியதின் விளைவாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வர பட்டது.
1976 இல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முடிவெட்ப்பதாக தீரமானம் நிறைவேற்றி நிறுத்தப்பட்டு, பின் அதை 2026இல் முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதன் இடையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 39 ஆக இருக்கும் தமிழக மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 32 ஆக குறைந்து 2026 இல் 31 ஆக மாற கூடும். 20 ஆக இருக்கும் கேரளா வின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 2011 இல் 15 ஆக குறைந்து 2026 இல் 12 ஆக ஆகக் கூடும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஒருசேர 17 எம்.பி சீட்டுகளை இழந்தும். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்கள் ஒருசேர 22 எம்.பி சீட்டுகள் அதிகரித்திர்க்கும். இதே நிலை தொடர்ந்தால் 2026 இல் தமிழ்நாடு மற்றும் கேரளா ஒருசேர 16 எம்.பி சீட்டுகளை இழந்தும், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 21 சீட்டுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

இன்றைய காலகட்டத்தில் ஒடுக்குமுறைகளையும், அரசின் சர்வாதிகாரத்தையும் நேரில் சந்திக்கும் நாம். இந்த எதிர்கால நடவடிக்கையால் மக்கள் விரோத அரசுகள் சுலபமாக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும் கூடும்.
மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில் தென் மாநிலங்களே முதன்மை வகுப்பது அனைவரும் அறிந்ததே. ஆக இந்த வரிப்பணம் எப்படி செலவழிக்க படும். அதில் தென் மாநிலங்கள் எப்படி ஆதாயம் பெறும். இப்படி பல கேள்விகளை தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி தென் இந்திய மாநிலங்களின் குரல்கள் குறையக்கூடும்.
டிசம்பர் 10ஆம் தேதி நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மதிப்பையும் நல்லொழுக்கம்தையும் நாட்டு மக்களுக்கு போதிக்கின்ற வகையில் பேசுகிறாரே தவிர அதை நடைமுறையில் அவரிடம் காணவில்லை. கொரோனா தொற்று காலகட்டத்தில் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தனது வாழ்வாதாரத்திற்கு போராடுகின்றனர். விவசாயிகளும் தன் வாழ்வாதாரத்தை பெறும் முதலாளிகலான அதானி அம்பானிக்கு தாரை வார்க்கும் அரசின் விவசாய சட்டத்தை எதிர்த்து தில்லி வீதியில் இரங்கி போராடுகின்றனர். இந்த வேளையில் 900 கோடியில் பாராளுமன்ற கட்டிடம் தேவையா என்று சிபிஐ (எம்) பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் எச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ராஜா-வும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும் மனுஸ்மிருதி அடிப்படையிலான சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு ஆரம்பமாக அமையக்கூடாது என்று சுட்டிக்காட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக போன்ற மற்ற எதிர் கட்சிகளும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான தனது எதிர்ப்பை காட்டியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் எந்த எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளாதது மற்றும் நாட்டின் அடிப்படை தேவைகளே பூர்த்தி ஆகாத இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு ஆட்சியாளர்களின் உள் நோக்கத்தை தெளிவு படுத்துகிறது.


மாற்று என்ன?


இந்த சூழ்நிலையை சரி செய்ய, இருக்கும் எம்.பி சீட்டுகளை குறைக்காமல். 1950 மற்றும் ‘60 களில் கையாண்டது போல மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வட மாநிலங்களில் அவசியமாக கடைபிடிக்க வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகள் இல்லாத சூழலில் வேலை தேடும் இலைஞர்களுக்கும், இந்த கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.
இல்லை எனில் இந்த ஏற்றத்தாழ்வு இந்திய நிலப்பரப்பில் மேலும் குழப்பத்தையும் பிரச்சினைகளையும் மாநிலங்களுக்கிடையே மற்றும் மக்களுக்கிடையே உருவாக்கி ஒரு சமமற்ற சமூகத்தையே உருவாக்கம். அடுத்த சர்வாதிகாரத்தை நோக்கிய பயணமாய் அமையவும் கூடும்.

  • அஹமத்.

Reference:
https://www.google.nl/amp/s/www.thehindu.com/news/national/modis-govt-is-destroying-democracy-yechury/article33300422.ece/amp/
https://scroll.in/article/980453/the-political-fix-why-indias-new-parliament-building-portends-a-north-south-tug-of-war
https://censusindia.gov.in/Census_Data_2001/India_at_glance/variation.aspx

https://www.google.nl/amp/s/www.indiatoday.in/amp/education-today/jobs-and-careers/story/around-12-2-crore-people-lost-their-jobs-how-covid-19-will-change-job-prospects-and-hiring-in-india-1713616-2020-08-21

Related Posts