இதழ்கள் பிற புதிய ஆசிரியன்

பெரியார் வைக்கம் வீரரானது…

– பெரணமல்லூர் சேகரன்

வைக்கத்தில், சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்த தந்தை பெரியார் முக்கியக் காரணமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியினால்தான்.

வைக்கம் கோர்ட் ராஜாவின் அரண்மனையில் இருந்தது. அப்போது ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே பார்ப்பனர்கள் ஜெபம் முறை நடந்து கொண்டிருந்ததால் மாதவன் என்ற ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் கோர்ட்டுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டனர். அதனால் பெரியார் அங்கு சென்று வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். வைக்கத்தில் ஊர் நடுவில் கோவிலும் 4 நேர் வீதிகளும் இருந்ததால் போராட்டத்தை அங்கே நடத்தினார். கீழ்ச் சாதிக்காரர்கள் யாரும் அந்த நான்கு புறத்திலும் கோயில் வாசலுக்கு முன் நடக்கக் கூடாது. ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் யாரும் அந்தச் சாலைகளில் நடந்து போகக்கூடாது. இதே நடைமுறை சுசீந்திரம் கோயில் பகுதிகளிலும் இருந்து வந்தது. போராட்டம் தொடங்கியதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் தடையை மீறினார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைத் தண்டனையை அருவிக்குத்தி சிறையில் அனுபவித் தார். ஆனால் பிரச்சாரம் தடைபடவில்லை. ஈரோட்டிலிருந்து பெரியாரின் மனைவி நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் மற்றும் சிலரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது. போராட்ட வீரர் களுக்கு நிதியும் குவிந்தது. தேங்காய் காய்கறிகள் கூட அன்பளிப் பாகக் குவிந்து போராட்ட முகாம் ஒரு கல்யாண வீடு போலக் காட்சியளித்தது. பெரியாரும் சிறையிலிருந்து வெளியே வந்தார். போராட்டத்தைத் தீவிரமாக வகுத்தார். அந்தநேரம் அவருக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டில் போய் ரகளை செய்கிறாய்? அது சரியில்லை அதை விட்டுவிட்டு இங்கு வந்து வேலைகளைக் கவனி என்று எழுதப்பட்டு இருந்தது. அந்தக் கடிதம் எழுதி யவர் வேறுயாருமல்ல. அப் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாஜி அவர்களேதான். எப்படியும் பெரியாரின் வைக்கம் போராட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று காந்தியாரிடம் பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. அவர் இந்தப் போராட்டத்தில் முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கி யர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

சத்தியாகிரக முகாமில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரியாருக்கு ஆதரவு அளித்துப் போராட் டத்தை நீடிக்க உறுதிபூண்டனர். காந்தியாரின் எண்ணம் பலிக்க வில்லை.போராட்டம் தொடர்ந்தது. மீண்டும் பெரியார் ஆறு மாதம் கடுங்காவல் தண்ட னை பெற்றுச் சிறையில் அடைக் கப்பட்டார். அதைத் தொடர்ந்து நம்பூதிரி பார்ப்பனர்கள் விரோதி களை அழிக்க சத்ருசங்கார யாகம் நடத்தினர். ஆனால் அது விரோதிகளை அழிக்க வில்லை. மகாராஜாதான் திடீரெனக் காலமானார். போராட்டத் திற்கு மேலும் தனிமதிப்பு ஏற் பட்டுவிட்டது. ராஜாவின் கருமாதியை முன்னிட்டுச் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராணியும் பெரியாரிடம் ஒரு உடன் பாட்டிற்கு வர விருப்பம் தெரி வித்தார். அப்போது ராஜாஜி தலையிட்டுக் காந்தியார் தான் ராணியுடன்பேசி உடன்பாடு காண வேண்டுமென்று காந்தி யாரை வரவழைத்து ராணி யோடு பேச வைத்தார்.

நாங்கள் சாலைகளைத் திறந்து விடுகிறோம். ஆனால் நாயக்கர் கோயிலுக்குள் போக வேண்டு மென்று ரகளை செய்தால் என்ன செய்வது? என்று ராணி தெரிவித்தார்கள். பின்னர் காந்தி யார் பெரியாரைச் சந்தித்துப் பேசினார். பெரியார் கோயில்களைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோமென்று எப்படி உறுதி அளிக்க முடியும்? அது காங்கிரஸ் இலட்சியமாக இல்லாவிட்டாலும் என்னுடைய இலட்சியம் அதுதான். வேண்டுமானால் இப் போதைக்கு அப்படி கிளர்ச்சி இருக்காது என்று ராணியிடம் கூறுங்கள் என்று பதிலளித்தார். அதற்குப் பிறகு சாலையில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று ராணி உத்தரவு பிறப்பித்தார். வைக்கம் போராட் டம் வெற்றி பெற்றது. பெரியார் வைக்கம் வீரர் ஆனார்.

Related Posts