இலக்கியம்

நாங்களெல்லாம் கவுரியே . . . . . . . – கவிதா லங்கேஷ்.

அவள் எப்போதும் உள்ளம் குமுறுவாள்…..

ஆர்ப்பரித்து வசை மாரி பொழிவாள்…

சிலர் பேசும் மேல் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக,

மூடத்தனமான பார்ப்பனீயத்துக்கு எதிராக .

அவள் மேலும் சொல்லுவாள்…இவைகள் மனித நேயமற்றது.

சமூக நீதியை ஒழிக்கும் சிந்தாந்தங்கள் இவை என…….

 

ஒரு நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள்… அந்த பெண்ணா….

எப்போதும் மென்மையான , இனிமையான நல்வார்த்தைகளால் பேசும்,

மனநிறை பாசத்துடன் எல்லோரையும் வாஞ்சையுடன் அரவணைக்கும்,

கள்ளமற்ற, வெள்ளை மனத்துடன்,

குழந்தைகளை, இசுலாமியர்களை,

பெண்களை, மதச்சிறுபான்மையினரை,

களப்போராளிகளை ஆரத்தழுவும் அவரை

மதவெறி போதை தலைக்கேறிய சிலர்

அவளை சூனியக்காரி என்றனர், அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடினர்

தனியாக வாழந்ததால், அவளை விபச்சாரி என கூட கூச்சமில்லாமல் கொச்சை படுத்தினர்.

ஆனால் ஆயிரமாயிரம் பேர், சகோதரியே என அழைத்தனர்…

மேலும் பலர் “அம்மா” என அன்போடு விளித்தனர்.

இப்போதோ கம்பீரமாக கோடிக்கணக்கானவர்கள் நாங்களெல்லாம் “கவுரி” என பெருமையோடு சொல்லுகின்றனர்.

 

காரிலிருந்து சிகரெட் துண்டுகளை ரோட்டில் எறிந்தவனை வழிமறித்து கோபம் கொண்டார்.

அநீதி எங்கு நடந்தாலும் அவள் நீதிக்காக குரல் கொடுப்பாள்.

அவளின் வீட்டை சுற்றி பெரிய தோட்டம்.

அதில் ஏராளமான பாம்புகள் நெளிந்து செல்லும்.

நெளிந்து செல்லும் அந்த பாம்புகளை தொல்லை செய்யமாட்டாள். துன்புறுத்த மாட்டாள். அடித்து கொல்ல மாட்டாள்.

அது நெளிந்து செல்வதை பொறுமையாக பார்ப்பாள். அதன் பொந்துக்கு செல்லும் வரை….

ஆனால் அந்த இரவில் வந்த ஒரு பாம்பு ஊர்ந்து, நெளிந்து செல்லவில்லை.

இரு சக்கர வண்டியில் வந்த அந்த மனித கருநாகம் கவுரியின் மீது தீயை கக்கியது……துப்பாக்கி குண்டுகளாக….

கவுரியை கொன்று அமைதியாக்குவதா? முடியவே முடியாது.

அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல…… படித்து விட்டு சிரிக்க அவள் நகைச்சுவை துணுக்கல்ல…

அவள் சூரியகாந்தி மலரில் உள்ள விதை

இன்று இந்தியா முழுதும் தூவப்பட்டுள்ளாள்.

நிலத்தில் மட்டுமல்ல… மலையிலும்…

ஆழ்கடலிலும், காற்றிலும்…. கரைந்துவிட்டாள்.

கரைந்த இடங்களில் எல்லாம் இப்போது அமைதி இல்லை..

பெரும் இரைச்சலுடன், ஆர்ப்பரிக்கும் ஒலியோடு, இன்றும்

எல்லோரும் ஓசை எழுகிறது…..

”நாங்களெல்லாம் கவுரி” என்று……

                                            தமிழில்…..என்.சிவகுரு.

Related Posts