அரசியல்

Wannacry மற்றும் இதர Malwareகளிலிருந்து தப்பிக்க வழி…

Wannacry என்கின்ற ransomware வைரஸ் உலகம் முழுக்க இருக்கிற பெரும்பான்மையான கணினிகளில் பரவி வருகிறது. இது Malware என்று சொல்லப்படும் வைரஸ். இது ஒரு கணினியை தாக்கிய பின், அந்த கணினியிலிருந்து எந்தவொரு இணையதளத்தையும் பார்க்கும்போது, அந்த இணையதளம் சரியான முறையில் பார்க்க முடியாது. அமைதியாக இருக்கும். அந்த வைரஸ் பாதித்த கணினியில் இருக்கிற எல்லா முக்கியமான கோப்புகளும், Spread Sheet ஆக இருந்தாலும், வேர்டு கோப்புகளாக இருந்தாலும், தரவுகளாக இருந்தாலும், இல்லை உங்களுடைய முக்கியமான தகவல்களாக இருந்தாலும் சரி, அது encrypt பண்ணி உங்களை உபயோகப்படுத்த அனுமதிக்காது.

அதை மீண்டும் உபயோகப்படுத்த அந்த தரவுகளை decrypt செய்தாக வேண்டும். Decrypt செய்ய ஒரு வங்கி கணக்கு எண்ணில் தொகை அனுப்ப வேண்டும். அது 19,000 – 36,000 ரூபாய் என்று சொல்கிறார்கள். அவ்வளவு தொகையை கொடுத்தால் அந்த வைரசின் decrypt code தருவார்களாம். அதை வைத்து நாம் திரும்ப கணினியை பயன்படுத்தலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் இதுதான் அந்த wannacryயின் வேலை.

இதனால் இந்தியாவில் ஆந்திர காவல்துறை, கேரளா அரசு, NHS என்ற ஒரு மருத்துவ நிறுவனம், மேற்குவங்கம், நிசான் கார் தொழிற்சாலை, ரஷியன் ரயில்வேய்ஸ் ஆகிய சில இடஙகளில் பாதிப்பு உருவாகியிருக்கிறது. இந்தியாவில் ATMகள்  சில நாட்களில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இவ்வளவு பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் malwareன் தோற்றம் அமெரிக்காவின் NSA.

இதை முதன் முதலில் எட்வர்ட் ஸ்னோடன் என்ற NSA அதிகாரி வெளிச்சம்போட்டு காட்டினார். இது மக்களை உளவு பார்க்க NSA & CIA பயன்படுத்துகிறார்கள் என்று மக்களுக்கு தெரியப்படுத்திய ஸ்னோடன் அவர்களை அமெரிக்கா, நாடு கடத்தி, போலியான குற்ற வழக்குகளில் சிக்க வைத்திருக்கிறது. அவர் இப்போது வேறொரு நாட்டில் தலைமறைவாக இருக்கிறார். ஸ்னோடன் இதை வெளியே கூறிய காரணத்திற்காக அவரை செயல்படவிடாமல் வைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறது அமெரிக்கா அரசு.

அமெரிக்கா எப்படி உலகிலுள்ள மக்களை உளவு பார்க்கிறது என்று சொன்ன தகவல்களில் மிக முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த ரேன்சம்வேர். ஸ்னோடன் வெளியிட்ட தகவல்கள் மற்றும் உளவு பார்ப்பதற்கு அமெரிக்க அரசு பயன்படுத்திய சில தொழில்நுட்பங்களையும் வைத்து, தொழில்நுட்பம் தெரிந்த சில விஷமிகள் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கியதுதான் இந்த wannacry ரேன்சம்வேர். இதை யார் செய்தார்கள் என்று இன்னமும் யாருக்கும் தெரியாது.

இது விண்டோஸ் கணினிகளை மட்டும்தான் பதித்துள்ளது, அதுவும் முக்கியமாக, அதிகமாக பாதிக்கப்பட்டது win XP, win7, விண்டோஸ் 8 கணினிகள்தான். மைக்ரோசாப்ட் கடந்த 14-ம் தேதி ஒரு பத்திரிகைச் செய்தி கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் மார்ச் மாதமே இந்த ரேன்சம்வேர் பிரச்சனைக்கு ஒரு அப்டேட் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறது. அந்த அப்டேட் எண் MS -17-010. இதை நாம் பயன்படுத்தி இந்த malware பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். இது தற்போது தொழில்நுட்ப ரீதியாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையாகும்.

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் (Operating System) இருந்த ஒரு ஓட்டையைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கா  உலக மக்களை உளவு பார்த்திருக்கிறது. இதை மைக்ரோசாப்ட் முன்னரே அறிந்திருந்தபோதும் CIA, NSA ஆகியவற்றால் உளவு பார்க்க முடியாது என்று சரி செய்யாமல் இருந்தது. ஆனால் இதை சில NSA உளவாளிகள், இதை மக்களுக்கு வெளிப்படுத்தினர். இதை நீண்ட காலமாக தெரிந்திருந்த NSA/CIA மைக்ரோசாஃப்ட்டிடம் கூறி இந்தப் பிரச்னைக்கு patch வெளியிட வைத்திருந்தால் இன்று இந்த பிரச்சனை வந்திருக்காது.

தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பங்களிலுள்ள கோளாறுகளைப் பயன்படுத்தியும் அமெரிக்க அரசாங்கம் உலக மக்களை உளவு பார்க்க நினைத்தது தவறு. இதைத் தடுத்து நிறுத்த, எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். இல்லையேல் நம்மால் தீர்வு காண முடியாது.

மைக்ரோசாப்ட் மாதிரியான ஒரு லாப நோக்கோடு செயல்படும் கம்பெனிகளை இனியும் நம்பாமல் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (Free and Open Source) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

– ஐடி தொழில்நுட்ப வல்லுநர்

Related Posts