அரசியல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்?

மத்திய மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனே முதன்முதலில் தனது இந்துத்துவா கொள்கைகளை கல்வி நிலையங்களில் புகுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக மோடி அரசின் இந்த இரண்டாவது ஆட்சி முறையில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை நாடு முழுவதும் கல்வியாளர்கள் இடையிலும் மாணவர்கள் இடையிலும் மிகப் பெரும் எழுச்சியை உருவாக்கியது.

மோடி அரசாங்கம் தன்னுடைய இந்துத்துவா கொள்கைகளை எந்தவித பாகுபாடுமின்றி மாணவர்கள் மீது கட்டாயமாக திணிக்கும் முயற்சியை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தன்னெழுச்சியாக நடந்த போராட்டங்களில் பிஜேபி அரசாங்கமும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தினர்.


டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலவரமும் அதில் குறிப்பாக ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் அங்கு உள்ள முற்போக்கு மற்றும் இடது மாணவர் அமைப்புகள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி இருந்தனர். இதில் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவரான ஐஷே கோஸ் கடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.


இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மீது இந்த மோடி அரசாங்கம் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்ந்துகொண்டிருக்கிறது குறிப்பாக டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கலவரமும் அதனைத் தொடர்ந்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவிகள் மீதான தாக்குதல் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக முறையில் போராடும் மாணவர்களையும் மற்றும் கல்வி செயல்பாட்டாளர்களையும் தேச விரோதிகளாக சித்தரித்து அவர்கள் மீது தேச விரோத வழக்குகளும் தொடரப்பட்டது.


பிஜேபியின் கொள்கையானது ஆர்எஸ்எஸ் இன் அஜண்டாக்களை செயல்படுத்தும் ஒரு கொள்கையாக மட்டுமே உள்ளது குறிப்பாக அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி மாணவர்களின் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடுவதில்லை அதனை விடுத்து மாணவர்களுக்கு இடையில் மதவெறி கருத்துகளை திணிப்பதும் மதவெறிக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடும் மாணவர்களை தேச விரோதிகள் என சித்தரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.


இந்தியாவில் கடந்த சில வருடங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்களுக்கும் மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் வழங்கக்கூடிய நிதியினை நிறுத்தியுள்ளது இதனால் பல மாணவர்கள் தங்களுடைய படிப்பினை தொடர முடியாமல் தற்கொலைக்கு உள்ளாகினர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா வின் மரணம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 25 ஆயிரம் நிதி உதவியை நிறுத்தியும் அதனால் பலர் தங்களின் படிப்பை தொடரமுடியாமல் தற்கொலைக்கு உள்ளாகினர். பிஜேபி அரசாங்கம் உயர்கல்வி நிறுவனங்களில் தங்களுடைய கொள்கைகளை திணிக்க துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ் சித்தாந்த பின்புறம் கொண்டவர்களை தொடர்ந்து நியமித்து வருகிறது இதற்கு எதிராக பல ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்த துணைவேந்தர்கள் பல்கலைக்கழக மாண்பை சிதைக்கும் வகையில் தனிப்பட்ட ஒரு அமைப்பின் முடிவுக்கு அடிபணிந்து பல்வேறு முடிவுகளை தன்னிச்சையாக செயல்படுத்துகின்றனர்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா வின் நடைமுறைகள் குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழக அரசுக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் எதிராக பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை உயர்த்தியும் மாணவர்களின் படிப்ப சீர்குலைக்கும் பல அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி கொடுத்த ஒரு மிரட்டலுக்கு அடிபணிந்து. இந்தியாவின் புகழ்மிக்க எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் எழுதிய, முதுகலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் இடம்பெற்றிருந்த “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” என்ற பகுதியினை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் உள்ளது.

நாடு முழுவதும் எழுத்தாளர்கள் மீது ஆர் எஸ் எஸ்ஸன் பின்புலம் கொண்ட பல இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாதாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களை தங்களின் கருத்துக்களை எழுத விடாமலும், அவர்களின் எழுத்துகளை சீர்குலைக்கும் வகையில் தேச விரோதிகளாக சித்தரித்து வருகிறது. இந்த அரசுக்கு எதிராக எழுதியதற்காக இந்துத்துவா சக்திகள் கடந்த ஆண்டு எழுத்தாளர் கௌரி லங்கேஷ் மீது துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி அவர்களை தனது வீட்டு வாசலிலேயே வைத்துகொலை செய்தது.இப்படி தொடர்ந்து எழுத்தாளர்களை அவமதிக்கும் விதமாகவும் அவர்களை மிரட்டும் தோணியிலும் கொலை செய்தும் முற்போக்கு செயற்பாட்டாளர்களை மிரட்டி வருகிறது. ஆனால் ஒரு பொழுதும் இந்த மிரட்டல் மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் முற்போக்காளர்களயோ மாணவர்களயோ கல்வி செயல்பாட்டாளர்களயோ அடிபணிய வைக்க முடியாது.


ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் இந்துத்துவா சக்திகள் புகுந்து மாணவர் பேரவைத் தேர்தல்களின் போதும் அங்கே நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்கள் போதும் தங்களுக்கே உரித்தான கலவரங்களை நிகழ்த்தி வருகிறது தற்பொழுது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே அந்த அமைப்பின் ஒரே ஒரு மனுவிற்க்கு அடிபணிந்து ஒரு பாடத்திட்டத்தை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இடம் சில கேள்விகள்?

தற்பொழுது முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு அவசர கதியாக பாடத்திட்டத்தை மாற்ற என்ன நிலை உருவாகியுள்ளது?

ஏற்கனவே நவம்பர் 26 ஆம் தேதியுடன் இந்த பருவத்திற்கான கால அட்டவணை முடிகிறது சரியாக வெறும் 14 நாள் மட்டுமே இருக்கும் இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த படத்தை நீக்க தேவை எப்படி உருவாகியது. நவம்பர் 10ஆம் தேதி ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டதாக கூறிய மனுவில் மிரட்டும் தோணியில் அருந்ததிராய் எழுதிய “வாக்கிங் வித் காம்ரேட்” என்ற பகுதியை நீக்க கோரியும் அந்தப் பகுதியை பாடத்திட்டத்தில் இணைத்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருந்தது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் உடனே அந்த பாடப்பகுதியை நீக்கி 12ம் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடத்தை சேர்ப்பதும் நீக்குவதும் அவ்வளவு எளிதா?


பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஒரு மதவெறி அமைப்பு தலையிடுவது அந்த பல்கலைக் கழகத்தின் மீதான நம்பிக்கையையும், அங்கே படிக்க முடியும் சுமார் இரண்டு லட்ச மாணவர்களின் நிலையும் என்னாவது?


ஒரு பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாடத்திட்டத்தை இவ்வளவு அவசரமாக நீக்குவதற்கான அதிகாரம் யார் அளித்தது?

பாடத்தை சேர்ப்பது நீக்குவது பல்கலைகழகத்தால் தீர்மானிக்கப்பட்ட பாடத் திட்டக் குழுவில் உள்ள அனைவரின் ஒப்புதலோடு பல்கலைக்கழகத்தில் உள்ள சிண்டிகேட் போன்ற மட்டங்களில் விவாதித்த பிறகு அது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு அமைப்பு கொடுத்த மனுவின் அடிப்படையில் வெறும் இரண்டு நாட்களில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கி அதற்குப் பதிலாக வேறு பகுதியை இணைத்து புதிய பாடத்திட்டத்தை வெளியிட நிர்பந்தம் என்ன?


இந்த பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் முதல் பல முற்போக்கு அமைப்புகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறக்கூடிய கட்டண கொள்கை கொள்கைக்கு எதிராகவும் குறிப்பாக 2018 ஆம் வருடம் தமிழ்வழி மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்த திடீர் அறிவிப்பின் காரணமாக தமிழ்வழி மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் இந்திய மாணவர் சங்கம் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் மாணவர் பேரவைத் தேர்தலை ரத்து செய்தது.


ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இந்த பல்கலைக் கழகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலும் இந்திய மாணவர் சங்கம் தன்னுடைய தொடர் போராட்டங்கள் மூலமாகவும மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தலையீட்டின் காரணமாகவும் இன்றளவும் பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய ஒரு மாணவர் அமைப்பாக உள்ளது. இப்படி பல்கலைக்கழக வரலாற்றில் எந்த ஒரு இடமும் இந்த பல்கலைக்கழக வரலாற்று வளர்ச்சியில் எந்த ஒரு பங்களிப்பையும் அளிக்காத ஏபிவிபி மாணவர் அமைப்பானது தற்பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்குவதற்கு இந்த அளவில் அவர்களின் கொள்கை பாட்டின் நிலையாகும்.

மாணவர்கள் குறிப்பாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின அறிவு தேடல் களுக்காகவும் தங்களுடைய சித்தாந்த செயல்களுக்கும் பல்கலைக்கழகங்களை நோக்கி வருகின்றனர் இப்படி ஒரு ஜனநாயக அமைப்போடு செயல்படவேண்டிய பல்கலைக்கழகங்கள் மதவெறி சக்திகளுக்கு துணை போகின்ற நிலை ஏற்படுமாயின் பல்கலைக்கழகங்களில் பயிலக் கூடிய மாணவர்களின் நலன் கேள்விக்குள்ளாகும் எனவே தமிழக அரசும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக நிர்வாகமும் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று ஏற்கனவே இருந்த வாக்கிங் வித் காம்ரேட் என்ற பகுதியை மீண்டும் தொடருமாறு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் இடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக இந்த பிஜேபி அரசாங்கம் உயர்கல்வி நிலையங்களில் நிகழ்கின்ற காவி வன்முறைகளையும் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கினையும் கைவிட்டு மாணவர்கள் நலன் சார்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவர்கள் முதல் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் பல்கலைக்கழகங்கள் மீது மதவெறியை பூசுவதும் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களில் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தையும் கைவிட்டு மாணவர்களின் தேவைகள் என்னவென்று தெரிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படவேண்டும்.

  • சத்யா. PhD ஆய்வு மாணவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

Related Posts