சமூகம்

பெண்கள் மீது‍ தொடுக்கப்படும் யுத்தம்!

நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியர் பலாத்காரம் செய்தனர் என்பதையும் தாண்டி, அது ஒரு பெண் மீது ஆறு ஆண்களால் தொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார யுத்தம் என்றே சொல்ல வேண்டும்.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி பாராளுமன்றங்களும், செங்கோட்டைகளும் உயர்ந்து நிற்கும் டெல்லி மாநகரில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் மனிதத் தன்மையற்றவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரம் என்ற வார்த்தையில் விவரிக்க முடியாத வரிகளால் இரும்பு கம்பியினைக் கொண்டும் மற்றும் அவளுடைய பிறப்பு உறுப்பினைக் கிழித்தும் உடம்பில் உடையின்றிச் சாலை ஓரத்தில் வீசி எறியப்பட்டாள்.

இத்தனை கொடுமைகளுக்கும் மேலும் அவளுடைய உயிர் மனசாட்சி உள்ள ஒரு
சதவிகிதத்தினர்களிடம் ஏற்படுத்தியது ஒரே நல்ல விஷயம். மாவீரன் சே கூறியது போல் அந்நீதியை கண்டால் சினமடை என்றது தான்.

நிர்பயாவிற்கு ஏற்பட்ட கொடுமைகளுக்குப் பிறகு 110 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய பண்பாடு மிக்க பாரதத் திருநாட்டில் லட்சம் மக்கள் மட்டும் கலந்து கொண்டு நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக விளைவாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் சட்டத்திருத்தம் செய்வதற்காக நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

ஒரு சில பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டது. இவற்றில் சட்டமாக்கப்படாத முக்கியமான சில பரிந்துரைகளில் மனைவி என்பதற்காகவே அவர்களைத் தங்களுடைய விருப்பப்படி என்ன வேண்டுமனாலும் செய்யலாம் என்ற நினைப்பில் அவர்களின் விருப்பம்மில்லமால் நடைபெறும் பாலியல் வன்முறைகள் எதிராகக் கணவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய தண்டனை.

நாட்டைப் பாதுகாக்கக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை எல்லைகளை நோக்கித் திருப்பாமல் சொந்த நாட்டு மக்கள் முன்பு வைத்துக் கொண்டு தங்களைக் கேள்வி கேட்க ஆள் இல்லை இந்தியத் தண்டனை சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்ற திமிரில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஆதிவாசி பழங்குடிகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆயுதச் சிறப்பு சட்டத்தில் மாற்றம்.

மாற்றுத் திறனாளி பெண்கள் மீது தொடுக்கப்படும் குற்றங்களுக்கு எளிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் புறக்கணிப்பு செய்து பல மணி நேரம் காக்க வைத்தால் அந்தக் காவல் அதிகாரிகளை ஒரு ஆண்டு முதல் இரண்டு வரை தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனைப் பரிசோதனைகளான உளவியல், கவுன்சிலிங், காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்தல் ஆகியவை ஒரே இடத்தில் நடைபெற வேண்டும். சட்டம் 354 மற்றும் 509 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஈவ்டீசிங், மானபங்கம் என்ற சொல்களை நீக்குதல்.

கப் பஞ்சாயத்துகள் என்று செல்லப்படும் சாதியக் கட்டப் பஞ்சாயத்துகளை தடை செய்யப்பட வேண்டும். காவல்துறை சீர்திருத்தம் போன்ற மிக முக்கியமான பரிந்துரைகள் அரசு நிறைவேற்றுமானால் அதுவே ஆணாதிக்க யுத்தத்திற்கு எதிராக, மனிதர்களின் முதல்கட்ட எதிர்ப்புணர்வாக இருக்கும்.

Related Posts