தொழில்நுட்பம்

இணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி?

நாம் ஒரு கட்டுரை அல்லது ஒரு தளத்தின் பக்கத்தின் லிங்க் (link) ஐ காப்பி செய்து சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஒரு சிக்கலை அனைவரும் எதிர் கொண்டிருப்போம். அது யுஆர்எல் (URL) என்கோடிங் (Encoding) பிரச்சனைதான். கணினியின் கீ போர்டில் தமிழில் தட்டச்சு செய்யும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாகக் கணினி எடுத்துக் கொள்ளும். தமிழில் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் ஆங்கிலமாக இல்லாத காரணத்தினால், தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில மொழி எழுத்துக்களாக மாற்றப்படுகின்றன. இது யுஆர்எல் என்கோடிங் ஆகும். அதன் காரணமாக ஒவ்வொரு கட்டுரைக்கும் நாம் தமிழில் பெயர் வைக்கும் போது அவை பல வடிவ எழுத்துருக்களாக மாறுகின்றன. இதனால் தமிழ் யுஆர்எல் பகிர்வது சாத்தியப்படவில்லை. மொழிக்கும் தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொலைவுதான் இப்பிரச்சனைக்குக் காரணம்.

பொதுவான கணிணி தொழில்நுட்பங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் மற்ற மொழிகளைப் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப்பட்டவை. அதைத் தமிழில் பயன்படுத்தும்போது அந்தத் தொழில்நுட்பங்களுக்கு புதிய பெயர்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், தொழில்நுட்பங்களைப் பற்றி தமிழில் எழுதினால் படிப்பதற்கான ஆர்வம் குறைகிறது. எனவேதான் கல்வி தாய்மொழியில் வேண்டும் என்கிறோம். தாய் மொழியில் கல்வி இல்லாது போனால், நமது மொழியில் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் திறனை இழந்துவிடுவோம்.

கணிணித் தமிழ் வளர்ச்சிற்கு அரசு செலவிடும் ஒதுக்கும் நிதி மிகவும் சொற்பமே. அந்த நிதியும் முறையாகச் செலவிடப்படுவதில்லை. சரி அது இருந்துவிட்டு போகட்டும். நாம விசயத்திற்கு வரலாம்.

யுஆர்எல் என்பது என்ன?…

யுஆர்எல் என்பதற்கு தமிழ் ஆர்வவலர்கள் உரலி (URL) என்று பெயரிட்டுள்ளனர். இந்த யுஆர்எல் என்பது இணையதளங்களின் முகவரியை குறிப்பதாகும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கிறார்கள். இது பொதுவாக, இணையதளப் பக்கங்களை குறிக்கவும், இணையதளக் கோப்புகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

http://www.example.com இப்படி ஒரு முகவரி இருப்பின் இதை எளிதில் எந்த சிக்கலும் இல்லாமல் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால்,  தமிழில் உள்ள ஒரு யுஆர்எல் ஐ பகிரும் போது https://maattru.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/ இப்படி வரும் சிக்கலை அனைவரும் எதிர்கொண்டிருப்பீர்கள்.

URL Encoding problem in tamil

இதை எப்படி சரி செய்வது,

நாம் பயன்படுத்தும் உலாவியில் (browser) இரண்டு சிறிய அமைப்பு மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதை எளிதில் சரி செய்துவிட முடியும். நமது உலாவியில் இணையதள முகவரியை இடும் இடத்தில் about:config என்று டைப் செய்ய வேண்டும்.

url encoding

இதில் தேடுதல் பட்டையில் (Search) url.escape என்று டைப் செய்ய வேண்டும்.

url escape

இப்போது இதிலுள்ள வேல்யூ (value) true என்றிருக்கும். இதை டபுள் கிளிக் (double click) செய்தால் false என்று மாறிவிடும்.

url value false

இப்போது உலாவியை ரீஸ்டார்ட் (restart) செய்த பின், தமிழில் உள்ள ஏதாவது ஒரு பக்கத்தை காப்பி செய்யும் போது https://maattru.com/புத்தகம்-பேசுது-செப்டம்/ தமிழிலேயே வருவதைக் காணலாம். நமது சிக்கல் தற்காலிகமான தீர்ந்துவிட்டது. ஆனால், நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் நகர முயற்சி செய்ய வேண்டும்.

Puthiya Aasiriyan

அதற்கான ஒரே வழி – தாய்மொழிவழிக் கல்வியை அனைத்து நிலைகளிலும் அமலாக்குவதுதான். அப்போதுதான் நமது மொழியிலேயே தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும். அதன் மூலம் எளிய மக்களை சென்றடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.

Related Posts