ஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . !

எந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை என்பது உண்மை. சாதி பார்த்துத்தான் காவல் நிலையங்களில் வழக்கே பதியப்படுகிறது. அநேகமான வழக்குகள் பதியப்படாமலேயே கட்டப்பஞ்சாயத்தில் முடித்துவைக்கப்படுகிறது. ஆதிக்கசாதியினர் மீதான தலித்துகளின் அத்தனை வழக்குகளும் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே பதியப்பட்டதல்ல. குறிப்பிட்ட அக்கொலைக்குற்றம் விஸ்வரூபம் […]

சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி!

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே முன் நின்று களமாடப் புறப்பட்ட கௌசல்யா இந்த இளம் வயதில் இவ்வளவு […]