காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.

மற்றுமொரு அவமானம்:உள்நாட்டு அகதி முகாம்கள்!

(உத்தரப் பிரதேசத்தில் – திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் பின்னணியில் மிகப்பெரும் உள்நாட்டு அகதி முகாம்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சூழல் நமக்கு இரண்டு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மதவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் – இந்தியாவின் பின்தங்கிய சமூகங்கள் எத்தகைய பிரிவினை ரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முதல் எச்சரிக்கை. ‘மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்தின் முழுமையான பொருளை உள்வாங்காத, ‘சமாஜ்வாதி’ உள்ளிட்டவை அதிகாரத்தில் இருக்கும்போது. அவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் சந்தர்ப்பவாத மனநிலையை மதவெறியர்கள் எப்படியெல்லாம் சாய்த்துக் […]

ஆர்.எஸ்.எஸ் – ஆக்டோபஸா? அரசியல் இயக்கமா?

என்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க? எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா? இது போலத்தான் அதுவும்! இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா? என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளுக்கு இது போன்ற பல […]

வீதி தோறும் மோதல்? உள்ளம் தோறும் மதவெறி?

வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது பேச்சோடு சும்மா திரும்பப் போவதில்லை இவர்கள்… குஜராத் மாநிலத்தில் அமையப் போகும் வல்லபபாய் படேல் சிலைக்காக கலப்பை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளையும் திரட்டி வரப் போகின்றனராம். மக்கள் பிரச்சனைகளை பாஜக ஒருபோதும் பேசப் போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களது பிரச்சார உத்திகளின் வரலாற்றுத் தொடர்ச்சியை நாம் உற்று நோக்கத் தவறக் கூடாது. நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறைகளை முற்றாக அறிந்திருந்தும், இவர்கள் அத்வானி, வாஜ்பாய் […]

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!”

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் […]

2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு!

நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error)  முடியும்.