மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -18

மல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம்! மிகப் பெரிய அளவில் வாராக் கடன்கள் முதலியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீரழியக் காரணமாக இருந்தது. மோடியின் ஆட்சி. 9,000 கோடி ரூபாய் கடனுக்கு நாமம் போட்டுத் தப்பித்துச் சென்ற விஜய் மல்லையா 2010ல் பா.ஜ.க ஆதரவுடன் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களுக்கு அவைக்குத் தேர்வு செய்யப்பட்ட MP என்பதை மனதில் கொண்டு இதை வாசியுங்கள். மார்ச் 03, 2016 […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 17

5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, ‘ஃபெயில்’ முறை இருக்காது என்பதுதான். இதன்படி எட்டாம் வகுப்புவரை, அதாவது 14 வயதுவரை, ஒரு மாணவரை தேர்வில் தோற்றார் எனச் சொல்லி அதே வகுப்பில் உட்கார வைக்கக் கூடாது. பா.ஜ.க அரசு ஆட்சியில் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 16

13 புள்ளி ரோஸ்டர் முறை என்பதன் மூலம் மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் கவிழ்க்க முயலும் மோடி அரசு  எல்லா மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கை இந்தக் கருத்தை இப்போது அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்ளிப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். சென்ற பிஹார் மாநிலத் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசியதை அனைவரும் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -15

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப்  பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது. 2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்த சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சத ஒதுக்கீட்டிற்கு மேலாக இது அளிக்கப்படுகிறது. 3. முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 14

“FRDI மசோதா : நாடு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை நோக்கித் தள்ளப்படுகிறது” – பேரா. பிரபாத் பட்நாயக் நம்பிக்கைகளை நாசமாக்குகிறது பா.ஜ.க அரசு..இனி நோட்டுகளாக மட்டுமல்ல, வைப்புகளாகச் சேமித்தாலும் ஆபத்துதான்.. இனி தங்கம் அல்லது நிலத்தில் பணத்தை முடக்குவது என்பதுதான் சேமிப்பிற்கு ஒரே தீர்வா? இனி இரும்புப் பெட்டி அல்லது சுருக்குப் பைதான் ஒரே வழியா? FRDI மசோதா என்பது இந்தியப் பொருளாதாரம் தொடர்பான இன்னொரு நிறுவனத்தின் மீது மறுபடி சரி செய்ய இயலாத இன்னொரு […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 13

கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த  அறிஞர்களும் நீதி அரசரும் புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று  தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 12

பொருளாதாரத் துறையில்  மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும்  இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார். தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 6

  “நாங்கள் இந்தத் தேர்தலில் ஜெயிப்பது உறுதி. எப்படித் தெரியுமா?” – சுப்பிரமணிய சாமியின் அசத்தும் நேகாணல். சொல்லுங்கள்! இவர்களை ஜெயிக்க விடலாமா? ” ‘நாம் அரசியலில் புறக்கணிப் பட்டுவிட்டோம். இந்துக்களுக்கு உரிய நியாயம் இங்கே கிடைக்கவில்லை’ – என்கிற உணர்வும் ஆதங்கம் இன்று ஒவ்வொரு இந்துவுக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறை இந்துக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். “நிச்சயமாக பொருளாதாரத்தில் இந்த அரசு படு தோல்விதான். ஜி.எஸ்.டி. பண மதிப்பு நீக்கம் எல்லாம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறதுதான். […]

பாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்

இந்துத்துவா போன்ற விஷயங்களை நல்ல நோக்கிலும், ராகுல்காந்தியைப் பற்றிய செய்திகளில் பப்பு, பப்புவா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தவும் வேண்டும்

அடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . !

சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா !. ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது. சோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச் சாலை என  மக்கள் மீது ஏவப்படும் அநீதிக்கு எதிரான அரசியல் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]