கடற்காகம் : நாவல் விமர்சனம்

நாவல்: கடற்காகம் ஆசிரியர்: முஹம்மது யூசூஃப் வெளியீடு: யாவரும் பதிப்பகம் தன் முதல் நாவலான ‘மணல் பூத்த காடு’ மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட நண்பர் முஹம்மது யூசூஃப், தனது இரண்டாவது நாவலை சமீபத்தில் நடந்து முடிந்த சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அரங்கில் கின்னஸ் உலக சாதனைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து தத்தமது படைப்புகளுடன் ஒரே அரங்கில் அமர்ந்ததை கேள்வியுற்றபொழுது ஓர் தமிழ் வாசகனாக நெகிழ்சியடைந்தேன். […]

எந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்

சக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா? என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

கோவை குண்டுவெடிப்பும் மௌனத்தின் சாட்சியங்களும்…

இஸ்லாம் எனக்கான வாழ்க்கை நெறி. என் தனிப்பட்ட வாழ்கையை கண்ணியமாக வாழ இஸ்லாம் காட்டிய கோட்பாடுகளை நான் ஈமானோடு இறையச்சத்தோடு பின்பற்றுகிறேன். ஆனால் சமூகத்தோடு என்னை தொடர்புபடுத்தி கொள்ள எனக்கு அரசியல் பார்வை தேவைபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க சிந்தாந்த வலிமையுள்ள அரசியல் தேவை. ஒரு இஸ்லாமியனாக இங்கு நான் அச்சமின்றி வாழ நிச்சயமாக ஒரு அரசியல் தேவை

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார்.

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “. இந்த வார்த்தை, […]

கருப்பு யானைகளுக்கு வெள்ளையடிக்கும் ஜெயமோகன்

துயரத்தின் விசும்பல்களாலான கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ள கூடிய நவீன நாட்களில் சுரண்டல் கைகள் இலக்கியத்திலும் ஆழ ஊடுருவ முயல்கிறது. அதுதான் எம்மை திடுக்கிட வைக்கிறது. ஜெயமோகன் அவர்களின் வெள்ளையின் வழி நெடுக வரலாறை அறுத்து கூறு போட முயன்றுள்ளது எதற்காக? யார் கண்ணீரை துடைக்க? யாருக்கு கண்ணீர் வரவழைக்க?

துன்பக்கேணி – யாருக்கு அவமானம்?

சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய கொண்டாடப்பட்ட இரண்டு சிறுகதைகள் நீக்க்கியருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இரண்டு அம்சங்கள் முன்னுக்கு வருகின்றன. ஒன்று இந்த இரண்டு சிறுகதைகளும் தலித் மக்களை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறதா என்பது, இரண்டாவது அந்த நோக்கத்திலிருந்துதான் அது எழுதப்பட்டது என்பது.

’மூன்றாம் உலகப்போர்’ படித்தவர்கள் – தவறவிடக் கூடாத இன்னொரு புத்தகம் …

(கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ உங்களில் பலரை ஈர்த்திருக்கலாம். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடிகளை அது பேசுகிற விதமும், கதையாடலும் உங்களுக்கு விருப்பமானதென்றால் – அதைக் காட்டிலும் மிக முக்கியமான, வாசிக்கத் தவறவிடக் கூடாத ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.) இயற்கை விவசாயமே நிலத்தை காக்கும், மன்னை பொன்னாக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வைத்து உழைப்பை மூலதனமாக்கி அதில் வெற்றியும் கண்ட விவசாய பாரம்பரியத்தில் வந்த சம்சாரி பரமசிவத்திற்கும் அய்யா பழமை பேசி […]