“அவள்” குறும்படம் . . . . . . . . இருவேறு கோணத்தில் ஒரு பார்வை . . . . . . . !

முதல் கோணம்: ஒரு பாலியல் தொழிலாளியின் எளிய விருப்பத்தை காட்டுகிற குறும்படம், “அவள்”! தோழர் அருண் பகத் இயக்கியுள்ளார். பாலியல் தொழில் உள்ளிட்ட பொதுச் சமூகத்தில் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி சில வாரங்களுக்கு முன் பரவலாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் உறவு வைத்ததாக சில திரையுலக பிரபலங்களின் பெயர்களை நடிகை ஸ்ரீஜா வெளியிட்டிருந்தார். அச்சமயத்தில், ‘என் உடல், என் உரிமை’ என்கிற ரீதியிலும் அவர் பேசி இருந்தார். […]

ஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை சொல்லும் கனவு…

“ நான் ரொம்பவும் பயந்தும் மிரண்டும் போனேன். என் முன்னால் ஒரு சவம் படுக்க வைக்கும் பாடை இருந்தது.அதில் ஒரு பிணமும் கூட இருந்தது. எனக்கு அதைப் பார்க்க ரொம்பவும் பயமாக இருந்தது. அந்தப் பிணத்தின் மேல், இறுதிச் சடங்கிற்கு உரிய அனைத்து வகை உடுப்புகளும் மிகுந்த அலங்காரத்துடன் இருந்தன. அந்த பிணத்தைச் சுற்றி ஏராளமான இராணுவ வீரர்கள் இம்மியும் அசையாமல் அதனைப் பாதுகாத்து நின்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் லட்சக் கணக்கான கணக்கிலடங்கா மக்கள் கூடி பிணத்தைப் பார்த்து கதறி கதறி அழுதனர். விம்மி விம்மி மறுகினர். வாயை மூடி தேம்பித்தேம்பி அழுதனர். ஆனால் அந்த பிணத்தின் முகம் மட்டும் மூடப்பட்டு இருந்தது. எனக்கு அது யாரென தெரியவில்லை.அனைவரும் ரொம்பவும் துக்கப்பட்டு விசனத்துடன் அழுது கொண்டே இருந்தனர். அவர்களை யாரும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.கட்டுப்படுத்தவும் இல்லை.”

அஹிம்சையெனும் பேராசை …

வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று விழிமலர்ந்து கண்டுகொண்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையில், தற்போது அரசால் அனுமதிக்கப்பட்ட நுழைவாயில் ஒன்றின் வழியாக உள்ளே நுழைகிறேன். என் வாழ்நாளில் […]