கொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . ?

கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் சர்வதேச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதப் பொருளில் ஒன்றாக மாறியுள்ளது. கௌரவக் கொலைகள் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார காரணங்களை கொண்டும் உலகம் முழுவதும் நடைந்தேறி வருகிறது. ஆனால் இந்தியாவில் சாதிய அடிப்படையில் நடைபெறுகிறது. சாதிக்குள் கலாச்சார காரணங்கள் பொருளாதாரக் காரணங்களும் உள்ளடங்கியுள்ளது. தடுப்பதற்கான மாற்று தீர்வை நோக்கி நகர்வதில் பெரும் பின்னடைவே காணப்படுகிறது. ஆதரவும் எதிர்ப்பும்: ஒரு குடும்பத்தின் கௌரவம் அல்லது மானம் இழக்கும் வகையில் அந்த குடும்பத்தின் பெண் […]

ஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . !

எந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை என்பது உண்மை. சாதி பார்த்துத்தான் காவல் நிலையங்களில் வழக்கே பதியப்படுகிறது. அநேகமான வழக்குகள் பதியப்படாமலேயே கட்டப்பஞ்சாயத்தில் முடித்துவைக்கப்படுகிறது. ஆதிக்கசாதியினர் மீதான தலித்துகளின் அத்தனை வழக்குகளும் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே பதியப்பட்டதல்ல. குறிப்பிட்ட அக்கொலைக்குற்றம் விஸ்வரூபம் […]