மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன Continue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading
விஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.Continue Reading
55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்.. Continue Reading
அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் Continue Reading
கடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை Continue Reading
மூலதன நூலின் இரண்டாம் ஜெர்மன் பதிப்பு வெளிவரும் பொழுது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி குறிப்பிடும் பொழுது அத்தியாம் 1 பிரிவு 3ஐத் திருத்தவேண்டிய நிலை, டாக்டர் லூயிஸ் குகெல்மென்னைச் சந்தித்த பிறகுதான் என்கிறார் மார்க்ஸ் (பக்கம் 30). ஜெர்மனியில் வாழ்ந்த குகெல்மென் என்ற மகப்பேறு மருத்துவர், மார்க்ஸ், எங்கங்ல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.Continue Reading
யாரந்த பெர்சியஸ் என்று கூகுள் செய்து பார்த்த பொழுது அவரு நம்ம ஊர் புராண பகவான் கிருஷ்ணன்தான். கிரேக்கத்தில் அவன் பெர்சியஸ். கிருஷ்ணனுடைய தாய்மாமன் கமசன் தன்னுடைய சகோதரி யசோதாவிற்கு பிறக்கும் மகன் தன்னைக் கொல்வான் என்று சகோதரியையும் மைத்துனைரையும் சிறையில் தள்ளி ....Continue Reading
மூலதன நூலின் முதல் அத்தியாயத்தை அதன் “படுகுழி“ என்றே அழைப்பேன். நான் முதலில் தடுக்கி விழுந்தது இந்தக் குழியில்தான். நீச்சல் அடிக்கப் பழகும்பொழுது தண்ணீர் குடித்து மூக்கில் பொறையேறிய நினைவுதான் வருகிறது. என்னைப் போல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பலர் இந்தக் குழியில் விழுந்து எழுந்ததே கிடையாது. Continue Reading
ஒரு மனிதன், அதிலும் சிறந்த அறிவாளி, மேதைமையுடையவர் தன் வாழ்நாளில் தன்னுடைய சொந்த வாழ்கைகையை தொலைத்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர், அன்றாட வாழ்க்கைக்காக போராடியவர், நண்பரிடமிருந்து பணம் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தார் என்பதை நூலின் அறிமுக முன்னுரையைப் படிக்கும் பொழுது 20ம் பக்கத்தை கடிதத்தை கடந்து செல்கையில் உணர முடிகிறது.Continue Reading
Recent Comments