அரசியல்

அடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . !

சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா !. ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது.

சோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச் சாலை என  மக்கள் மீது ஏவப்படும் அநீதிக்கு எதிரான அரசியல் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு இங்கு இருக்கும் இளைஞர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை தமிழக இளைஞர்கள் எங்கு இருந்தாலும், தமிழகத்திற்கு எதிராக நடக்கும் எந்த வித நடவடிக்கைகளையும்  வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு சோபியா போன்றவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சுயசிந்தனைகள் தான் இல்லை ஆனால் தலைமை பண்பும் இல்லை என்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசை மூலம் அப்பட்டமாக தெரிகிறது.  சோபியா ”பாசிச ஆட்சி ஒழிக என கத்தினார், அது தவறென்று தமிழிசை அவர்கள் எண்ணும் பட்சத்தில், அந்த மாணவியை அழைத்து ஏன் இப்படி செய்தாய்? என்ன வேண்டும் உனக்கு என கேட்டு இருத்தால் அதுதான் சிறந்த தலைமை பண்புக்கு உதாரணம் அதை விடுத்து,  தனது ஆதரவாளர்களுடன் சென்று மிரட்டும்  சாட்சியங்கள் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கை மற்றும் பாஸ்போர்ட் முடக்கம் என எல்லாம் பாசிசமும் பாஜகவும் வேறில்லை என்று தங்களுக்கு தாங்களே பெரிய பேனர் வைத்து  விளம்பரப்படுத்தியது போல நடத்திவிட்டனர். (இதுதான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது). இதைவிட என்ன இருக்கிறது பிஜேபியை பற்றி நாம் கூற?

பிஜேபி அரசு தொடர்ந்து திட்டமிட்டு, தனக்கு எதிரான சிந்தனையோ அல்லது கருத்தையோ எவர் கொண்டிருந்தாலும் அவை  எழுத்தாகவோ திரைப்படமாகவோ எந்த வகையில் இருந்தாலும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், கருத்து ரீத்யில் எதிர்கொள்ளாமல் அவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுவதும் பல அவதூறுகளை பரப்புவதுமே இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது.

கடந்த எட்டாண்டுகளில் மட்டும் மாட்டை முன்வைத்து நடந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 51 சதவீதம் பேர் மூஸ்லீம்கள். மோடி ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் மட்டும் 97 % வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து எழுத்தாளார்களும், அரசியல் விமர்சர்களும் கொல்லப்பட்டு வருக்கின்றனர். மதம் அரசியலுக்குள் புகுந்து  ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்று.

கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி தொடங்கி கவுரி லங்கேஷ்கர் வரை எழுத்தாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது இந்த காவி வெறியர்களின் கூட்டம். கருத்துக்கு கருத்துதானே பதிலாக இருக்க முடியும் ? ஆனால் அதற்கு திராணியற்ற, துப்பில்லாத இந்த சங்கிககள் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களை, வெட்டுவோம்! வீழ்த்துவோம்! என கொக்கரிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் குரல்களை முழுவதுமாக நசுக்கி,  குரலற்ற ஒரு புதிய இந்தியாவை படைக்க போகிறது இந்த பாசிச பாஜக இவர்களிடம் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

அடக்குமுறைக்கு எதிராக தனது முஷ்டியினை உயர்த்திக் குரல் கொடுக்கும் அனைவரும் எங்கள் தோழர்களே! ஆம் சோபியா எங்களின் தோழர்!!.

– வசந்திபாரதி.

 

Related Posts