ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!

காதல் உன்னதமானது என்பதை எல்லா முற்போக்காளர்களும் ஒப்புக் கொள்வார்கள். காதல் உன்னதமானது அல்ல என்று சொல்பவர்கள் கூட காதல் சாதி, மதம், மொழி, பணம்  பார்த்து வராது என்பதை ஒப்புக் கொள்வார்கள். சாதி, மதம், மொழி, பணம் எல்லாம் சரி பாலினம்?.  இது பலருக்கு அபத்தமான கேள்வியாக தோன்றலாம். அப்படி வந்தால் அது இயற்கைக்கு எதிரானது என்று கூறலாம். இது உண்மையா? காதல் பாலினம் கடந்ததா இல்லை இயற்கைக்கு எதிரானதா? கொஞ்சம் அலசுவோம்.

எங்கிருந்து வந்தார்கள்?

ஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள். இப்போது இருப்பதை விட அதிக அளவிலேயே இருந்திருக்கிறார்கள். கலையில் அறிவில் சிறந்தது என்று கருதப்படும் கிரேக்கத்தில் பெரும்பான்மையானோருக்கு பெண்களுடன் உறவு என்பது வெறும் சந்ததியைப் பெருக்கிக் கொள்ளவே, மனைவியை சமைத்து போடுவதற்கும் பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்குமான ஒரு எந்திரமாகவே பார்த்தார்கள். எனது மாணவர்களுடன் எனக்கு உடல் வழி உறவு இல்லாத காதல் இருக்கிறது என்று தத்துவஞானி பிளேட்டோ அறிவிக்கும் அளவுக்கு அங்கே தன்பால் சேர்க்கை அதிகமாக இருந்தது. உடல் வழி உறவு இல்லாத காதலுக்கு பிளேட்டோனிக் காதல் என்கிற சொல்லும் இதை ஒட்டியே தோன்றியது. கிரேக்கத்தில் மட்டும் அல்ல அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே அப்படித்தான். பின்னாட்களில் மதத்தின் பெயரால் இது கட்டுப்படுத்தப்பட்டதால் இவர்களது எண்ணிக்கை குறைந்தது. திருநங்கைகளைப் போலவே தன்பால் சேர்கையாளர்களுக்கும் நீண்ட வரலாறு உண்டு.

இயற்கைக்கு எதிரானதா?

பெரும்பாலும் இந்த வாதம் தான் பலரால் வைக்கப்படுகிறது. இதற்கு யார் பதில் சொல்வதைக் காட்டிலும் இயற்கை பதில் சொல்வது தான் சரியாக இருக்கும். இந்த தன்பால் சேர்க்கை என்பது மனிதனில் மட்டும் இல்லாமல் இன்னும் ஆயிரத்தி ஐநூறு உயிரினங்களில் காணக் கிடைக்கிறது. இதில் ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, நாய் போன்ற பெரிய விலங்குகள், வாத்து, கிளி போன்ற பறவைகள், சிறு சிறு புழுக்கள் கூட அடக்கம். இதற்கென்றே பிரத்யேகமாக   நார்வேயின் ஓஸ்லோ நகரில் ஒரு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் தன்பால் ஈர்ப்புக் கூறுகள் பற்றி விளக்கப்பட்டது. தன்பால் ஈர்ப்பு  என்பது தற்போது மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்பதால் அதை இயற்கைக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.இயற்கைக்கு எதிரானது என்பதை ”பெரும்பான்மையே இயற்கை ” என்று நம்பும் மனித இயல்பாகவே பார்க்கமுடியும்.

தன்பால் ஈர்ப்பு எப்படி ஏற்படுகிறது?

 தன்பால் ஈர்ப்பு என்பது உடல் சார்ந்த ஒரு பிரச்சனை என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இது பிறவியிலேயே இருப்பது என்றும் கருதுகிறார்கள். இதை கண் தெரியாமை காது கேளாமை போன்ற ஒரு குறைபாடாக பார்க்கிறார்கள். சைக்கலாஜிக்கல் டிஸார்டர் என்று கூட கூறுகிறார்கள் . இது ஒரு குறைபாடு இல்லை என்பதை நாம் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும். தன்பால் ஈர்ப்பு என்பது திருநங்கைகளுக்கு ஏற்படுவது போன்று ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படுவது இல்லை. இது ஒரு தேர்வு. பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இது உடல் சார்ந்த பிரச்சனை என்று கட்டுரைகள் வெளியிட்டார்கள். எதிர்பால் ஈர்ப்பாளருக்கும் தன்பால் ஈர்ப்பாளருக்கும் மூளையின் அமைப்பு வேறு வேறு என்றெல்லாம் கூட கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால் பிற்காலத்தில் அவர்களாலேயே அது தவறு என்று ஒப்புக்கொள்ள பட்டது. காதலுக்கு காரணம் சொல்ல முடியாது அப்படி காரணம் சொன்னா அது காதலா இருக்க முடியாது என்கிற டயலாக் இங்கேயும் பொருந்தும். ஹார்மோன்களின் சுரப்பு தான் காதலுக்கு காரணம் என்று வைத்துக் கொண்டால் எதிர்பாலினத்தைக் கண்டதும் சுரக்கும் அந்த ஹார்மோன்கள் தன்பாலினத்தைக் கண்டால் சுரக்கிறது என்று மேலோட்டமாக புரிந்து கொள்ளலாம்.  மொத்தத்தில் தன்பால் ஈர்ப்பு என்பது ஒரு குறைபாடு அல்ல. எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது எப்படி இயற்கையான தேர்வோ அதே போல் இதுவும் இயற்கையான  தேர்வே.

இவர்கள் மட்டும் தானா?

கருப்பு அல்லது வெள்ளை என்பது போல் தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் அல்லது எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் என்று மேலோட்டமாக பிரிக்கமுடியாது . கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல வண்ணங்கள் இருப்பது போல் தன்பால் ஈர்ப்பாளர்கள் எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சிலர் இருக்கிறார்கள். இதை விளக்குவது தான் கின்ஸி ஸ்கேல்.  1948 ஆம் ஆண்டு  ஆல்பிரட் கின்சி அவரது நண்பர்களுடன் சேர்ந்து பல நபர்களிடம் ஆராய்ந்து அந்த ஸ்கேலை உருவாக்கினார். அதாவது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும்  இடையே ஐந்து பேர்கள் இருப்பதாக அவர் சொல்கிறார். அவர் பாலுறவுகளை 0 – 6 வரை பிரிக்கிறார்.

0: தன்பால் ஈர்ப்பற்ற எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்

1: பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்  அரிதாக தன்பால் ஈர்ப்புடையவர்கள்

2: பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்    ஓரளவு தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்

3:  தன்பால் மேலும் எதிர்பால் மேலும் சம அளவில் ஈர்ப்புடையவர்கள்

4: பெரும்பாலும் தன்பால்  ஈர்ப்புடையவர்கள்  அரிதாக எதிர்பால்  ஈர்ப்புடையவர்கள்

5: பெரும்பாலும் தன்பால்  ஈர்ப்புடையவர்கள்    ஓரளவு எதிர்பால்  ஈர்ப்பு உடையவர்கள்

6: எதிர்பால் ஈர்ப்பற்ற தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்.

கலாச்சாரத்தில் சிக்கல் ஏற்படுமா?

இது எது கலாச்சாரம் என்கிற கேள்விக்கு இட்டுச் செல்லும் என்பதால் இந்த கட்டுரையில் இதை ஆழமாக அலச முடியாது. இதை நமது நாட்டில் எப்படிப் பார்த்தார்கள் என்பதற்கு நமது கோயிலில் இருக்கும் சிற்பங்களே இதற்கான பதிலை அளிக்கும்.

இதனால் எந்த பாதகமும் இல்லையா?

பாதகம் என்று சொல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிலும் குறைகள் இருப்பது போலவே இதிலும் இருக்கிறது. குடும்பம் என்கிற அமைப்பு மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு. இரண்டு தன்பால் ஈர்ப்பாளர்கள் இருக்கும் ஒரு வீட்டில் இது பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். குடும்பம் என்பதை உடைத்து தான் வாழவேண்டி இருக்கும். இரண்டு அப்பாக்கள் அல்லது இரண்டு அம்மாக்கள் உடன் வளரும் ஒரு குழந்தையின்  நிலை அரோக்கியமாக இருக்காது.   பெற்றோரில் ஏதேனும் ஒருவர் இல்லாத குழந்தை உள்ளாகும் அனைத்து சிக்கலுக்கும் அந்த குழந்தை உள்ளாகும். தான் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை விரைவில் உணர்ந்து கொள்ளும், அதன் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

முடிவாக சில வார்த்தைகள்

வயது வந்த இருவர் முழு சம்மதத்துடன் தங்களது உறவை நிர்ணயித்துக் கொள்வதை தடுப்பது என்பது அவர்களது சுதந்திரத்திற்குள் தலையிடுவது.  ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற சுதந்திரங்கள் பற்க்கப்படுமாயின் அது ஜனநாயகம் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டது என்றே அர்த்தம்.

About புதிய பரிதி

நிறுவுவதற்கு ஏதும் அற்றவன்
 • நீங்கள் எதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும்.. தன்பால் சேர்கையாளர்களால் குடும்பம் என்கிற அமைப்பே சிதைந்துவிடும் என அச்சப்படத் தேவையில்லை.. தன்பால் சேர்கையாளர்களை விட எதிர்பால் சேர்கையாளர்கள் அதிகம்… அதனால் அந்த எதிர்பால் சேர்கையாளர்கள் குடும்பம் எனும் அமைப்பைக் காப்பாற்றி வருவார்கள்..

  பாலியல் வறட்சி உள்ளவர்களுக்கு மத்தியில் இது உத்வேகத்தை ஏற்படுத்திவிடும் என்று பயந்தோமானால் அத்தகைய பாலியல் வறட்சியை உணராதபடி பாலியல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு ஏதாவது நடவடிக்கைகள் மூலம் அந்த பாலியல் வறட்சியைத் தடுப்பது தான் அறிவுடைமையாகும்.. இந்த பாலியல் வறட்சி வல்லுறவிற்கு ஒரு முக்கிய காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அப்படியே பாலியல் வறட்சியின் காரணமாக இருவர் தன்பால் சேர்கையாளர்கள் ஆனால் எதுவும் நஷ்டமில்லை[தன்பால் சேர்கையாளர்களாவது நஷ்டம் என்று நினைப்பீர்களேயானால் ].. அவர்கள் கின்ஸி ஸ்கேலில் உள்ளபடி 2 3 கட்டத்தில் தான் இருப்பார்கள்… அவர்களுக்கு எதிர்பால் துணை கிடைத்தவுடன் மீண்டும் 0 விற்கு வந்துவிடுவார்கள்… அப்படி வராவிட்டாலும் அவர்களுக்கு எதிர்பாலினத்தவோரோடு இருப்பதில் சிரமம் இருக்காது ….

  குடும்பத்தினர் வற்புறுத்தலில் திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனம்.. அப்படியே செய்து கொண்டாலும் எதைத் தொடர்வது எதை விடுவது என்பது அந்த தனிப்பட்ட நபர் முடிவு செய்ய வேண்டியதே…

 • என்ன சொல்ல வருகிறீர்கள் குடும்பத்தையும் சந்ததியையும் சீர்குலைக்கும் இது தேவையானதுதான? இது அங்கிகரிக்கும் பட்சத்தில் இன்றைய வாழ்க்கை முறையில் காரணமாக திருமனத்திற்கு தாமதமாவது வெளியூர்களில் வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் பாலியல் வறட்சியில் உள்ளோர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்திவிடும் மேலும் குடும்பத்தினர் வற்புறுத்தலில் திருமணம் செய்ய நேறும்போது அந்த துனையின் நிலை என்ன?. எதை விடுவது எதை தொடர்வது.

  • நீங்கள் எதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும்.. தன்பால் சேர்கையாளர்களால் குடும்பம் என்கிற அமைப்பே சிதைந்துவிடும் என அச்சப்படத் தேவையில்லை.. தன்பால் சேர்கையாளர்களை விட எதிர்பால் சேர்கையாளர்கள் அதிகம்… அதனால் அந்த எதிர்பால் சேர்கையாளர்கள் குடும்பம் எனும் அமைப்பைக் காப்பாற்றி வருவார்கள்..
   பாலியல் வறட்சி உள்ளவர்களுக்கு மத்தியில் இது உத்வேகத்தை ஏற்படுத்திவிடும் என்று பயந்தோமானால் அத்தகைய பாலியல் வறட்சியை உணராதபடி பாலியல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு ஏதாவது நடவடிக்கைகள் மூலம் அந்த பாலியல் வறட்சியைத் தடுப்பது தான் அறிவுடைமையாகும்.. இந்த பாலியல் வறட்சி வல்லுறவிற்கு ஒரு முக்கிய காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அப்படியே பாலியல் வறட்சியின் காரணமாக இருவர் தன்பால் சேர்கையாளர்கள் ஆனால் எதுவும் நஷ்டமில்லை[தன்பால் சேர்கையாளர்களாவது நஷ்டம் என்று நினைப்பீர்களேயானால் ].. அவர்கள் கின்ஸி ஸ்கேலில் உள்ளபடி 2 3 கட்டத்தில் தான் இருப்பார்கள்… அவர்களுக்கு எதிர்பால் துணை கிடைத்தவுடன் மீண்டும் 0 விற்கு வந்துவிடுவார்கள்… அப்படி வராவிட்டாலும் அவர்களுக்கு எதிர்பாலினத்தவோரோடு இருப்பதில் சிரமம் இருக்காது ….
   குடும்பத்தினர் வற்புறுத்தலில் திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனம்.. அப்படியே செய்து கொண்டாலும் எதைத் தொடர்வது எதை விடுவது என்பது அந்த தனிப்பட்ட நபர் முடிவு செய்ய வேண்டியதே…