அறிவியல்

இரண்டாம் உயிர்கொல்லி …

மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இரண்டு நோய்கள் உள்ளன. ஒன்று எய்ட்ஸ் மற்றொன்று புற்றுநோய்.

புற்றுநோயை உண்டாக்கும் சில காரணிகளில் புகையிலையும் ஒரு காரணியாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.

நிக்கோட்டின்

போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவர் 1559 ஆம் ஆண்டு கத்தரீன்-டி-மெடிசியின் அரண்மனைக்கு நிக்கோட்டினை மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். அவரைக் கௌரவிப்பதற்காக இப்பெயர் இடப்பட்டது.

நிக்கோட்டின் என்பது புகையிலையிலிருந்து கிடைக்கும் பொட்டென்ட் பாரா சிம்பதோமிமெடிக் அல்கலாய்டு என்ற கிளர்ச்சியூட்டியாகும்.

புகையிலை (நி்க்கோட்டினா) சொலானேசி குடும்பத்தைச் சார்ந்த தாவர இனமாகும் (அறிவியல் பெயர்- Nicotiana Solanaceae). புகையிலை 70 வகையான சொலானேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகைகளிலிருந்து‍ பெறப்படுகிறது. புகையிலை சிகரெட் போன்ற பல்வேறு வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புற்றுநோய்

புற்றுநோய் என்பது, உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான வளர்ச்சியின் நிலையாகும். புற்றுநோய், கட்டியாகவும் இருக்கலாம் அல்லது ஆறாத புண்ணாகவும் இருக்கலாம்.

சிகரெட் புகையில் நிகோடின், கார்பன் மோனாக்சைட், அமோனியா, அசிடோன், ஆர்செனிக், பென்சீன் என்று 4,000-க்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. நிகோடின் நச்சு, இருப்பதிலேயே மிக மோசம்.

நிகோடின் நச்சு, அட்ரீனலின் இயக்குநீரை அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 25 மடங்கு அதிகம்; உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு 15 மடங்கு வாய்ப்பு அதிகம்; சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகம்.

நிகோடின், ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்வதால், புகைபிடிப்போருக்கு மூளையில் ரத்தநாளம் அடைத்து பக்கவாதம் வருகிறது; கை, கால்களுக்குச் செல்லும் ரத்தம் குறைந்து, விரல்கள் அழுகி, கை-கால்களையே அகற்ற வேண்டிய ஆபத்து உருவாகிறது.

ஆண்களின், விந்தணுக்களின் தரத்தையும், எண்ணிக்கையையும் நிகோடின் குறைப்பதால், ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாகவும் அமைகிறது.

புகையிலையில் இருக்கும், “டார்’ எனும், “பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன்’ புற்றுநோயை உருவாக்கும். புகைபிடிப்போருக்கு வாய், கண்ணம், நாக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை ஆகிய இடங்களில், புற்றுநோய் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2030-ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன். வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத ஆண்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்துக்கும், புகையில்லாத போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர் என மருத்துவ ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் புற்றுநோய் அதிகமாக தாக்கி வருகிறது. புகைப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பேருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறதென்றும் மருத்துவ ஆய்வு கூறியுள்ளது.

2006-07 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 57 ‌விழு‌க்காடு ஆண்களும், 10.9 ‌விழு‌க்காடு பெண்களும் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்.

உலகில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும்,  இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

2006 கணக்கெடுப்பின் படி உலகில் புகையிலை பயன்படுத்தும் இளைஞர்களின் விகிதம்:

13 – 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 14 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

15 ‌‌‌விழு‌க்கா‌டு புகை பிடிக்காதவர்கள் அடுத்த ஆண்டிலேயே புகைபிடிக்க துவங்கிவிடுகின்றனர்.

40 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர்.

70 ‌விழு‌க்காடு மாணவர்கள் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர்.

புகையிலையால், இந்திய அரசுக்கு ஆண்டுதோறும், 10 ஆயிரத்து, 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

புகைப்பிடிப்பவரின் புகையை சுவாசிப்பதால் மேலும் ஆறு இலட்சம் பேர் இறக்கின்றனர்.

பொதுமக்கள் புகைபிடிப்பதை கைவிட்டு, தங்கள் நலவாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 1960 ஆம் ஆண்டிலிருந்தே, இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, 2008 இல், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

சட்டத்தால் மட்டும் எல்லாவற்றையும் சரி செய்து‍விட மு‍டியாது. தேவை மாற்றத்திற்கான சிந்தனை.. உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

தவறு செய்யாதவர்களுக்கும், தண்டனை பெற்றுத்தரும் இத்தீயப் பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, நம் அனைவரின் கடமையல்லவா?

நமது உழைப்பை சுரண்டி நம்மை அழித்து‍ அதன் மூலம் ஆதாயம் பெற ஒரு‍ கூட்டம் அலைந்து‍ கொண்டிருக்‌கிறது.. இந்நிலையில், இதையறிந்த நாம் அந்த கொடிய நோய்க்கு‍ ஆளாகலாமா-?

புகையிலையிலிருந்து விடுபடுவோம்…..

Related Posts