அரசியல்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்……….!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப டெல்லி தலைநகரம் போராடும்  விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 96,000 ட்ராக்டர்கள்  1 கோடியே 20லட்சம் விவசாயிகள் டெல்லியை சூழ்ந்துள்ளனர். 550க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்த போராட்டம் அரியானா டெல்லி எல்லையில் GT.கர்ணல் ரோடு சிங்கு மற்றும் டிக்ரியல் தேசிய நெடுஞ்சாலையையும், உத்திரபிரதேசம் டெல்லி எல்லையில் காசிப்பூர் நெடுஞ்சாலையையிலும் முகாமிட்டுள்ளனர் விவசாயிகள் டெல்லிக்கு வராமல் இருப்பதற்காக அரியானா அரசு சாலையில் பள்ளம் வெட்டியது. வேகமாக தண்ணீர் பீச்சியடித்தது, தடியடி நடத்தியது சாலை தடுப்புகள் போடப்பட்டது இவை அனைத்தையும் மீறி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

டெல்லியின் வடமேற்கு  பகுதியில் உள்ள புராளி மைதானத்திற்கு வரும்படியும் அங்கு உணவு, கழிப்பறை, வசதி மற்றும் மருத்துவ வசதி ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமீத்ஷா கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. இத்துடன் நாட்டின் பலபகுதிகளில் விவசாயிகள் வந்து குவியத் துவங்கியுள்ளனர். டெல்லி போலிசாரின் அனுமதியை பெற்றுதான் இந்த முற்றுகை போராட்டம் வரலாறு காணாத வகையில் நடந்து வருகிறது.

6 மாதத்திற்கு தேவையான உணவு கோதுமை மாவு தானியங்கள்,பருப்பு வகைகள் உருளைகிழங்கு, வெங்காயம் உட்பட உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ட்ராக்டர் டெல்லரில் உள்ளது. மேலும் டெல்லியில் உள்ள குருத்வாரா கமிட்டி தேவையான அனைத்தும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

மத்திய அரசு ஜூன்-5ல் பிறப்பித்த அவசரச்சட்டம்  அதை பாராளுமன்றத்தில் ஜனநாயக நெறிமுறைகளை மீறி அராஜகமான முறையில் சட்டமாக்கியது இச்சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும். இது விவசாயிகளை கொதிப்படைய வைத்துள்ளது. 2019ல் அனைத்து விவசாய சங்கங்களில் சார்பில் டெல்லியில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானது, விவசாய கடன்களை தள்ளுபடி செய், M.S. சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைபடி கட்டுப்படியான விலை (Cost + 50%) கொடு என்பது நிறைவேற்றப்படாமல் புதிய அவசர சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கின்றனர். பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பை கணக்கிலெடுக்காமல் செப்டம்பரில் பாராளுமன்ற மேலவையில் ஜனநாயக விரோதமாக எதேச்சதிகாரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.  ஏற்கனவே அரசின் ஆய்வுப்படி ஆண்டுக்கு 33 லட்சம் விவசாயிகள், விவசாயம் கட்டுப்படி ஆகாததால் நிலத்திலிருந்து வெளியேறுகின்றனர். இப்போது கொண்டு வரப்பட்ட சட்டங்களின் விளைவாக விவசாயிகளின் கையில் உள்ள விவசாயம் கார்ப்பரேட்கள் வசமாகும்.

விவசாயம் மாநில அரசின் அதிகாரபட்டியலில் உள்ளது. அதை மதிக்காமல் மாநில உரிமையை காலில் போட்டு மிதிக்கும் வகையில் மத்திய அரசு அதிகார போதையில் சட்டமியற்றியுள்ளது. இதை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளது. கேரளா அரசு விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வை பாதுகாக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்துள்ளது. BJPயின் கூட்டணி கட்சியான சிரோற்மணி அகாலிதள் கட்சியின் அமைச்சர் மத்திய அரசின் செயலை கண்டித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 பசுமைப்புரட்சி துவக்கப்பட்ட மாநிலங்களான பஞ்சாப், அரியான, மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இதன் பிரதிபலிப்பு வலுவானது. பஞ்சாபில் 90% கோதுமை மற்றும் நெல் அரசு கொள்முதல் செய்வதால் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) விவசாயிகளுக்கு கிடைக்கிறது. 4% மட்டுமே தனியார் வாங்குகின்றனர். 2019ல் பஞ்சாபின் 128 லட்சம் டன் கோதுமை (மதிப்பு ரூ. 1620 கோடி) 110 லட்சம் டன் நெல் (மதிப்பு 1320 கோடி) கொள்முதல் செய்யப்பட்டது. அரியானாவில் 90 லட்சம் டன் நெல் மற்றும் 75 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த சாகுபடி சட்டம் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் கபளீகரம் செய்ய வழிவகுக்கும் இதுதான் பல நாடுகளின் அனுபவம். என்ன சாகுபடி செய்ய வேண்டும் என்பதை கம்பெனிகள் தான் முடிவு செய்ய முடியும். பிரிட்டிஷ் ஆட்சியில் அவரி பயிரிட நிர்பந்தித்து வரலாறு. விவசாயம் செய்வதற்கான கடனை வங்கிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பெறாமல் ஒப்பந்த கம்பெனிகளே விதையாகவும் உரமாகவும் பூச்சி மருந்தாகவும் பணமாகவும் அளித்து எழுதி வாங்கிக்கொள்ளும் கம்பெனி கோரும் தரம் அளவுகளில் உற்பத்தி பொருளை அளிக்க வேண்டும் குறைந்தால் மீதி பணத்திற்கு வட்டியுடன் எழுதி வாங்கிகொள்வார்கள்.  கடைசியாநிலம் கம்பெனிக்கு மாறும் விவசாயி ஓட்டாண்டியாவன்.

அத்தியாவசியப்பொருட்கள் திருத்த சட்டம் (Essential Commodities Amendment Act 2020) படி உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உருளை கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் போன்றவைகள் அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இப்பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும. இருப்பு வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி  விலையை உயர்த்தி கொள்ளையடிக்க முடியும். சமீபத்திய உதாரணம் வெங்காய விலை உயர்வு. இப்பொருட்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

வேளாண் விளை பொருள் விற்பனை சட்டப்படி விற்பனைக்கு வருவதை அரசு கொள்முதல் செய்தால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)கிடைக்கும் இல்லாவிடில் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலையை கேட்பார்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் வாங்கக்கூடாது  என குறிப்பிடவில்லை. அரசு கொள்முதல் இல்லாமல் போனால் ரேஷன் விநியோகம் பாதிக்கப்படும், ரேஷனுக்கு தேவையான பொருட்களை தனியாரிடமிருந்து வாங்கி விநியோகம் செய்வது சாத்தியமில்லை இதை தவிர்க்க ரேஷனில் உணவு பொருட்களுக்கு பதிலாக பணமாக அளிப்பது   என்பதே BJP அரசின் நோக்கம் ரேஷனுக்கு பணமாக கொடுக்க ஆரம்பித்தால் மார்க்கெட்டில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயரும் இதனால் ஏற்கனவே உள்ள வறுமை, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாகும்.

மக்களை வாழவைப்பது அரசின் நோக்கமல்ல மாறாக மக்கள் வாழ்வை அறிந்து கார்ப்பரேட்டுகளை வளர்ப்பதுதான் அரசின் நோக்கம். இதன் விளைவாக   உணவு தொடர்பான திட்டங்களான மதிய உணவு அந்யோதயா,  அன்னயோஜனா, அங்கன்வாடி, போன்றவை கடுமையாக பாதிக்கப்படும் உணவு பாதுகாப்பு சட்டம் 2013 செயலிழந்து போகும். நோபல் பரிசு பெற்ற டாக்டர் அமர்த்தியா சென் கூற்றுப்படி வங்கப் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் மடிந்ததற்கான காரணம் உணவு பற்றாக்குறையால் அல்ல, அது முறையாக மக்களுக்கு விநியோகிக்கப்படாததே காரணமாகும் என்றார். மின்சார திருத்தச்சட்டம் 2020 மின் உற்பத்தியில் தனியாரை ஊக்குவிப்பது அரசு அதிகப்படியாக மின் உற்பத்தி நிலையிலிருந்து விலகுவது தனியார் மின்சார விலையை சாதாரண மக்கள் ஏற்கவேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்தை இலவச மின்சாரம் ஒரு விளக்கு திட்டம் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை போன்ற சலுகைகள் படிப்படியாக இல்லாமல் போகும். கிராமப்புற மக்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த பின்னர்  வேறு வழியின்றி விவசாயிகள் களம் கண்டுள்ளனர் அவர்களின் போராட்டம் வெல்லட்டும்

–           G. மணி.

Related Posts