குறும்படங்கள் சினிமா மாற்று‍ சினிமா

களவு – குறும்படம் ஒரு பார்வை . . . . . !


இந்த குறும்படத்தின் கதைக் கரு என்பது சில வருடங்களுக்கு முன நம்மில் பலரும் பெரும்பான்மையாக நகைச்சுவையாகவோ அல்லது கழிவிரக்கமாகவோ கடந்து போன ஒரு புகைப்படம்தான்,

ஒரு இஸ்லாமிய பள்ளியில் மாநில/மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த ஒரு ப்ளெக்ஸ் பேனரின் புகைப்படம்தான் அது. அதில் ஆண் பால் மாணவர்களின் முகம் மட்டுமே நமக்கு தெரியும் மற்ற பெண் மாணவர்களின் முகம் மொத்தமாக ஹிஜாப் (முகத்திரை) போட்டு மூடப்பட்டு அனைவரையும் பொதுவாக காட்டும். (ஒருவரின் படத்தயே அனைவருக்கும் வைத்தால் கூட வித்தியாசம் தெரியாது).

நாம் அவ்வாறு நகைச்சுவையாக கடந்து போன அந்த புகைப்பத்தின் உள்ளே ப்ளெக்ஸில் உள்ள புகைப்படத்தை எடுத்த போது அந்த மாணவியின் மன ஓட்டம், புகைப்படக் கலைஞனின் மனவோட்டம் எப்படி இருந்திருக்கும் என சிந்தித்திருப்பார் போல படத்தின் இயக்குனர்.

அந்த சிந்தனையை தாள்களில் வடித்து கேமரா வழியாக நம் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். ஒரு நல்ல திரைமொழியுடன் இருக்கிறது படம். படத்தின் கதையை. கதையின் போக்கை திரை மொழி செலுத்தும் விதம் எல்லாம் நான் இப்பவே உங்கள் மூளையில் அழுத்தி அந்த கோணத்திலேயே உங்களையும் பார்க்க வைக்க விரும்பவில்லை (உங்கள் பார்வையில் பார்த்தால் பல புதிய கருத்துக்கள் கிடைக்கலாம் உதாரணமாக நான் கவனிக்க தவறிய விசயங்களை நுட்பமாக பேசியது இதற்க்கு முன்னர் நான் படித்த ஒரு விமர்சனம் தமிழ் இந்து நினைக்கிறேன்)

ஆனால் மையக்கரு இதுதான் ஹிஜாப் எனும் பெண்ணுடல் பேணுவதாக சொல்லப்படும் ஆடையின் மீதான விமர்சனம். பல நூற்றாண்டு காலம் பழமையான பெண்கள் மீதான உடைக் கட்டுப்பாடுகள் இன்னும் இந்த பார்வை மாறவே இல்லை. ஆண்களுக்கான கட்டுப்பாடுகளில் பல விசயங்களில் அவர்களாகவே சலுகைகள் எடுத்து முன்னேறியுள்ளனர்.

ஆம் ஒரு காலத்தில்… புகைப்படம் எடுப்பது ஹராம் (தடை). அதாவது ஓவியம் வரைவதை நபிகளார் தடை செய்திருந்தாராம். இதற்கு நம்பிக்கை அடிப்படையில் சொல்லும் காரணம் அவ்வாறு நீ வரைந்தால் அந்த ஓவியத்திற்க்கு உயிர் கொடுத்த பின்னரே நீ செல்ல முடியுமு மறுமையில் கடவுள் சொல்லுவார் என்பதாக சொல்கிறார்கள்.
கொஞ்சம் பரந்த பார்வை உள்ளவர்கள் அந்த நாட்களில் உருவ வழிபாடு இருந்தது ஆகவே தன்னை இவர்கள் ஆர்வமிகுதியால் வரைந்து வைத்துவிட்டார்கள் என்றால் வருங்கால சந்ததியினர் என்னையும் எனது உருவத்தை வைத்து வழிபட்டு விடுவார்கள் என தடை செய்ததாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ இன்னைக்கு புகைப்படம் எடுக்கலைன்னா ஹஜ்ஜுக்கு கூட போக முடியாது.
ஆகவே அந்த சட்டம் தளர்ந்துள்ளது. ஆனால் எது வரை இதோ இந்த நூற்றாண்டிலும் கூட முற்போக்கு போல பேசும் இஸ்லாமிய ஆண்கள் கூட தனது செல்ஃபீக்களால் சமூக வலைத்தளங்களை நிறைக்கும் போதும் கூட பெண்கள் தங்கள் பர்தா அணிந்த (ஆனால் முகம் தெரியும்) புகைப்படத்தை கூட போடாதீர்கள் என கமெண்ட்டுவதை காணமுடிகிறது.

ஆடையை நம் வேலை செய்யும் முறை தீர்மானிக்கிறது ஒரு தச்சு வேலை செய்பவரிடம் போய் நீ ஏன் லுங்கி பனியன் மட்டும் போட்டுக்கிற நீயும் கெத்தா கோட்டு ஷூட்டு போட்டுக்கோ என்பது முட்டாள் தனம். அவருக்கு அந்த லுங்கிதான் சவுகரியம். அதை அவர்தான் தீர்மானிக்கனும்…

அது போலத்தான் பெண்களின் ஆடையை ஆண் ஆதிக்க சிந்தனை போக்கு கொண்ட சமூக பொதுபுத்தியில் இருந்து விதைக்க கூடாது. அவளாக விரும்பி பர்தா போடுவதாக (ஒருவேளை இருந்தால்) அதையும் நாம் வழிந்து தடுக்க இயலாது. ஆனால் கட்டமைக்கப்பட்ட பொது புத்தியை விமர்சிக்கலாம்.
மிக சாமர்த்தியமாக இந்த படம் அதைத்தான் செய்துள்ளது பர்தா போட்டால் உன் அழகு வெளிய தெரியாம போய்டும்னோ, பர்தா போடுவதால் அறிவாற்றல் இல்லாதவள் ஆகிவிடுவாய் பர்தா போடாத எனவோ கையை பிடித்து இழுக்கல…

மாறாக அதை ஒரு பொதுவான பார்வையாளனாக அணுகிறது. ஆம் ஒரு வேளை க்ளைமேக்ஸில் அந்த பெண் அழுவதாக காட்டிருந்தால் கதையின் நோக்கம் அந்த பெண் உடன்பாடு இல்லாமல் அணிந்திருப்பதாக ஆகி இருக்குமல்லவா..?

அதே நேரம் கேமராமேன் எனும் ஒரு பார்வையாளனின் கோணத்திலும், ஒரு சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அப்பெண்ணின் தம்பியின் அவனின் நண்பர்களின் பார்வையில் கடத்துகிறது.

இயக்குனரின் சிந்தையோடு பயணித்த கேமராமேன் இசையமைப்பாளர் எடிட்டர் இயக்குனரின் கூடுதல் பலம்.

– ஃபெரோஸ் பாபு.

Related Posts