அரசியல்

இடஒதுக்கீடு: Let’s Go back to Zero !

இடஒதுக்கீடு கொஞ்சம் சிக்கலான விவகாரம். முதலில் சிக்கலான விவரங்களை புரிந்து கொள்ள மூளையும் பொறுமையும் அவசியம். அரைப் பக்கத்துக்கு மேலே படிக்க திராணியும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு தன் சம்பாத்தியத்துக்கு/Gossipக்கு உதவாத எதையும் படிக்காத அல்லது reading between the lines செய்து அதை உளறி தன்னை அறிவாளியாகக் காட்ட வேண்டிய அவசியமில்லாதோர் மட்டும் படிக்கவும்.

கல்லூரி GD தொட்டு எனக்கு சற்றும் சம்மந்தமில்லாத 18-25 வயதினரின் reservation தொடர்பான எண்ணத்தை மிக உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அனுபவித்த வகையில் பாக்யம் செய்த தலைமுறை என்னுடையது. ஆனால் இத்தலைமுறையின் ஆகப்பெரும் சாபம் ‘Run run run’, ‘Competitive world’  போன்ற அபத்த நெட்டுருக்கள். பணம் சம்பாதிப்பது, சொகுசாய் வாழ்வதை மட்டுமே லட்சியமாக கொண்ட ஒரு தலைமுறையை போன தலைமுறை பெற்றோர்கள் உரம் போட்டு வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர். முன்பே சொன்னது போல, தனக்கு உதவாத எதையும் படித்து தெரிந்து கொள்ளக்கூட இவர்களுக்கு நேரமில்லை. படிக்கணும், எக்சாம்ல பாசாகணும், உடனே சுந்தர் பிச்சை ஆகிடணும். அது இஞ்சினியரிங் காலேஜா இல்ல சுந்தர் பிச்சை க்ளோனிங் ட்ரீட்மெண்ட்டா?

சரி, கதைக்கு வருவோம். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை பாகிஸ்தான் ஆக்கிரமிக்கிறது. இந்தளவுதான் காஷ்மீர் பற்றியும், ரிசர்வேஷன் பற்றியும் இந்த நுனிப்புல் தலைமுறைக்கு அறிவு. ஆனால், lets not forgot herds form the majority and majority decides who gets to fuck in India.

உண்மையிலேயே ரிசர்வேஷன் வந்தது பணத்தால் அல்ல. ஒவ்வோரு பிரிவினருக்கும் அதற்கு மேல் உள்ளோரால் மறுக்கப்படும் “உரிமைகள்” என ஏராளம் உள்ளதால்தான்.

சரி,

மார்க் வைத்து எனக்கு சீட்டு கெடைக்கல என்பது போங்கு லாஜிக். அப்படியெனில், lets go back to zero. எல்லாருடைய சொத்தையும் புடுங்கிடலாம், முதல்ல இருந்து சம்பாதிச்சுக்க. உங்கொப்பன், பாட்டன் இவனுங்கள சொரண்டி சம்பாதிச்ச சாம்பார் உன் நரம்புல ஓடுதுல்ல? You’re entitled to pay for what they did. ஒரு தலித் மாணவன் படித்து வர சூழ்நிலையும் அதன் மேல்படி நிலைகளில் உள்ளவன் வர சூழ்நிலையும் ஒண்ணு கிடையாது. Having said that, ரிசர்வேஷன் இருக்கு கொஞ்சமா படிச்சா போதும்ன்னு சொல்ற தலித் மாணவர்களையும் எனக்கு தெரியும்.

ரிசர்வேஷன புரிஞ்சுக்க ஜாதியோட அடிப்படை, குலக் கல்வியோட அடிப்படைகள் புரியணும். இன்னமும் மெடிக்கல் தொடங்கி ஜர்னலிசம் வரைக்கும் குலக்கல்வி இல்லாமலா இருக்கு?  இப்பெல்லாம் ஒரே Professionல கல்யாணம். குழந்தைகளுக்கு அதே Profession and அதே ஜாதியும் கூட. உங்களால் History based விஷயங்களுக்கு pay பண்ண முடியாது. எப்பவோ நடந்தத இப்ப பேசவேண்டாம்னு சொன்னீங்கன்னா சரி. Lets go back to zero. எல்லா குழந்தைகளும் ஒரே இடத்தில் தங்கி ஒட்டுக்கா படிக்கட்டும், ஒரே மாதிரி வசதிகளோட. யாருக்கும் தன் அப்பா-அம்மா ஜாதிக்காரன் சொந்தக்காரன் பணமோ, Influenceஓ எங்கயும் உதவக் கூடாது. ஒருத்தருக்கு ஏசி தூக்கமும் இன்னொருத்தருக்கு பாயும் இல்ல. எல்லாருக்கும் ஒரே போல கல்வி, சரியா?

கொஞ்சம் நடைமுறையும் பேசுவோம்.

மலம், சாக்கடை கழிவு சுத்தப்படுத்த ஜாதிக்கு சிலரை சதவிகித அடிப்படைல ஒதுக்குங்க. எல்லா ஜாதிலையும் எல்லா வேல செய்யறவனும் இருக்கணும். உங்க அப்பாவோட பாவத்தை நீங்க சுமக்க மறுத்ததால உங்களுக்கு அவர் சொத்தும், ஜாதியும் கிடையாது. நீங்கள் இனி பூர்வீக சொத்து, ஜாதியை இழப்பீர்கள், சரியா? உங்கள் ஜாதிக்கு ரிசர்வேஷன் குடுத்துடுறோம். ஆனா, இனி திருமணம் புரிவோர் உங்க ஜாதியல்லாத Obcகாரணத்தான் கட்டணும், முடியுமா?

எந்த நிவாரணத்தின் போதும் தகுதியில்லாத சிலருக்கு அது கிடைக்கும். உண்மையிலேயே பாதிக்கப்படுவோரை அது சென்றடையாமல் இருக்கவும் கூடும். இதெல்லாம் Implementation faults. இதற்காக மொத்த ஸ்கீமையும் தூக்கி எறிய முடியாது. அதேபோல சிவப்பு சட்டை போட்ட ஒருத்தன் கொலைகாரன்னு எல்லா சிவப்பு சட்டை போட்டவங்களையும் எப்படி கைது செய்ய முடியாதோ, அதேபோல ஒரு பட்டேலுக்கு வேலை இல்லன்னு எல்லாத்துக்கும் ரிசர்வேஷன் குடுக்க முடியாது.

இதெல்லாம் எப்ப மாறும்னு 100% மார்க் வாங்கி சீட் கிடைக்காதவன் ப்ரொபைல தூக்கிட்டு வர்ரவங்களுக்கு;

நீங்க தலித்த கூப்பிட்டு ஹோமம் வளர்க்க முடியும் போது இதுவும் மாறும்.

இங்க எல்லார் படிக்கவும் ஒரே கல்வி, ஒரே சூழ்நிலை இருக்கணும். அது இல்லாத வரைக்கும் அதற்கான சின்ன ரெமிடி ரிசர்வேஷன். நாற்காலி நொண்டுறதுக்கு ஏத்தாப்ல பேப்பர் வைக்கறாப்போல.

இன்னொரு சுலப வழி கூட இருக்கு, நீளமான காலை வெட்டி சமமாக்கலாம்.

சட்டத்தை கூட மாத்திக்கலாம். இப்போ நீங்க ஒரு SC/ST அ (அல்லது தனக்கும் தனக்கு பின்னான சந்ததிக்கும் ஜாதியை துறந்த) தான் கட்டிப்பேன்னு 12த் முடிச்சோன்னே சொன்னா அப்பவே ரிசர்வேஷன்ல சீட்டு. ஒரு வேலை மாத்தி பின்னாடி செய்தா, உங்க டிகிரி பறிக்கப்படும்.

இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஜாதி சுத்தம்தான். எல்லாரும் ஜாதி மாத்தி கல்யாணம் கட்டி Scheduled ஆகிட்டா இது obsolete ஆகிடுமே? செய்யலாமா?

ஏங்க நீங்க ஏன் ஒரு எஸ்.சி / எஸ்.டிக்கு பொண்ண/பையன கட்டிக் குடுத்து பேரனுக்கு சீட்டு வாங்கறத ஈசியாக்க கூடாது?

Related Posts