அரசியல் அறிவியல் தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நாம் என்ன செய்யலாம்?…

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) முகேஷ் அம்பானியின் புதிய தொலைத்தொடர்பு வணிகத் திட்டத்தின் பெயர். இந்தத் திட்டத்தின் துவக்க விழாவில் “ந்தத் திட்டத்தினை வெறும் லைத் தொடர்பு நெட்வொர்க்காகப் பாக்காமல், டிஜிட்டல் நெட்வொர்க் சூழலியல் அமைப்பாக பாக்கிறோம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சூழியல் என்பது பல நெட்வொர்க்களின் நெட்வொர்க். இதனுடைய ஆற்றல் தற்போதைய தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பன் மடங்கு அதிகம.

ஜியோ திட்டத்திற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் 15,000 கோடி முதலீடு செய்து உலகிலயே முதல் பணக்கார நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இவ்வளவு பெரிய முதலீட்டுடன் துவங்கும் ஜியோ இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்காகுவெடுத்திருக்கிறது.

துவங்கிய முதல் நாளே 90,000 செல்போன் கோபுரங்களைக் கொண்டு இந்தியாவின் சுமார் 70% பகுதியை தங்களின் நெட்வொர்க் கவரேஜ் ஐ கொண்டு சேவையை துவங்கியிருக்கிறது. 2018ல் மேலும் 10,000 செல்போன் கோபுரங்களைக் கொண்டு 100 சதகிதமா உயர்த்தும் நோக்குடன் முழுவீச்சில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இதுநாள் வரை அதிக விலையிலிருந்த தலைத்தொடர்பு சேவை, ஜியோவினால் சாமானியர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். தன் வாயிலாக, 150 கோடி மக்களும் பயனடைவர் என்று அம்பானி கூறியுள்ளார்.

பெரும் இலக்குகளோடும், பெரும்பலான மக்களை தங்களின் வாடிக்கையாளர்களாக்க சுகாதாரம், கல்வி, ஆன்லைன் வர்த்தகம், தகவல்த்தொடர்பு, பொழுதுபோக்கு, இ கவர்னன்ஸ், ஷாப்பிங், பணமில்லா பரிவர்த்தனை, விவசாயம் போன்ற பல துறைகளில் கால் பதிக்க தயார் நிலையில் இருக்கிறது ஜியோ.

குறிப்பாக, LYF என்ற பெயரில் ஒரு புதிய செல்போன் கம்பனியையும் உருவாக்கி, தன்னுடைய நெட்வொர்க்கை செல்போனுடன் இணைத்து செல்போன் மார்க்கெட்டையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. LYF மூலமாக, மிகக் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்க் சந்தைக்கு வருகின்றன. மொபைல் வாலட் எனப்படும் Paytm போன்ற ஒரு புதிய சேவையை ஜியோ மூலம துவங்குகிறது. இதனால் மொபைல் மூலம் ஆன்லைனில் சுலபமாகவும் விரைவாகவும் ஷாப்பிங் மற்றும் இதர ஆன்லைன் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். வீடியோ டிமாண்ட் (Video on Demand) என்ற முறையில் அமெரிக்காவில் இயங்கி வரும் Netflix, Comcast போன்ற சேவையை இங்கும் தரவுள்ளது ஜியோ. இதன் மூலம், தொலைக்காட்சி தொடர்கள், படங்கள், கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளை தேவை அடிப்படையில் ன்லைனில் பணம் கொடுத்து உடனடியாகப் பார்க்கலாம். மேலும், பிராட்பேண்ட் சேவை பன் மடங்கு வேகமாகவும், மிக குறைந்த செலவிலும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், உலகளவில் இந்தியாவின் இணைய பயனர்களின் எண்ணிக்கை 150 இடத்திலிருந்து 10வது இடத்திற்குள் செல்ல சில வருடங்களே போதுமென்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

பிரச்சனைகள்:

ஜியோவின் இத்தகைய அணுகுமுறையால் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கையும், அதனை அடிப்படையாக வைத்து இங்கும் சேவைகளையும், மத்தியத்துவப்படுத்தியுள்ளது. மத்தியத்துவப்படுத்தலின் நோக்கம் முழு கட்டுப்பாடு என்ற ஒன்றுதான்.  இந்தக் கட்டுப்பாடு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டி தருவதிலும், ஆளும் வர்க்கத்தின் தேவைக்கற்ப மக்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியான தருணங்களில் மக்களின் கருத்துக்களைத் தடுத்து நிறுத்தவும் இந்த மத்தியத்துவப்படுத்துதல் பெரும் பங்காற்றும்.

15,000 கோடி முதல் தவணை முதலீடுதான். அப்படியானால் இன்னும் பல்லாயிரம் கோடி முதலீடு காத்துக் கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் பெட்ரோல் தயரிக்கும் ரிலையன்சின் பெட்ரோ கெமிக்கல் நிுவத்திற்குக் கூட இவ்வளவு அதிகமான முதலீட்டை அவர்கள் செலவிடவில்லை. அப்படியானால், ஜியோவின் முக்கியத்துவத்தை ஆளும் வர்க்கம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

150 கோடி மக்களை நம்பி, அவர்களிடம் சிறிது சிறிதாக, சில ஆயிரம் முதல் பல லட்ச ஆயிரங்கள வரை லாபமாக பார்ப்பதுதான் ஜியோவின் பிரதான நோக்கம்.

மக்களின் கைக்கு அடக்கமான செல்போன் மூலமாக ில் அம்பானியின் பொழுதுபோக்கு நிறுவனமும், தொலைத்தொடர்பு நிறுவனமும், முகேஷ் அமனியின் ஜியோவும் ைந்து  ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக மக்களின் உள்ளுணர்வுகளை ஆட்டிப் படைக்கும் நேரடி கருவியாக பயன்படப் போகிறது.

இதனாலேயே தற்போதைய முதலாளிகள், தங்களின் நிறுவனங்களை, ஜியோவிற்கு வி்கவோ அல்லது போட்டியே இல்லாமல் மூட வேண்டிய நிலைக்கோ தள்ளப்படுவார்கள். தொலைத்தொடர்பு சந்தையில் ஏகபோக தனியுரிமை உருவாகும் நிலை ஏற்படும்.  ஏகபோக தனியுரிமையால் உடனடியாக இதர பெரும் நிறுவனங்களுக்கும், அதன் பிறகு சிறு குறு நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏகபோக தனியுரிமையம் மத்தியத்துவப்படுத்துதலும் எப்போதும் மக்கள் மீதான சுரண்டலை பல மடங்கு அதிகரிக்கவே செய்யும். அது மட்டுமில்லாமல் சமச்சீரான இணையத்தின் தன்மையை (Net Neutrality) குலைப்பதற்கு தேவையான எல்லா செயல்களையும் முன்னின்று செய்யும் இந்த ரிலையன்ஸ் ஜியோ.

இச்சூழலில் என்ன செய்யலாம்?

  1. ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இருக்கும் பெரும் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி மிகப் பெரும் நிறுவனமாக உருவெடு்பது வெறும் பணம், சாதி, அந்தஸ்தை தாண்டி, தொழில்நுட்பத்தில் பெரும் பங்காற்றியுள்ளது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம் மக்களை ஒன்றதிரட்டி சுரண்டலைத் தடுக்கவும் சமூக மாற்றத்துக்கான முயற்சிகளயும் மேற்கொள்ள வேண்டும்.
  2. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களிடையே இன்னும் பெரும் அளவில் போய் சேரவுள்ளது. இதனால் பல கோடி மக்களுக்குண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருக்கிறதோ இல்லயோ, கண்டிப்பாக தாவது ஒரு வழியில் தவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயனாளராக மாறவுள்ளனர். இதைப் பயன்படுத்தி மக்களை ஒன்று திரட்டலாம்.
  3. முகநூல், டட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் விக்கிப்பீடியா போன்ற பொதுத் தளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு உயரும். ஊருக்கு ஒரு வலைத்தள குழு அமைத்து மக்களை ஒன்று திரட்டலாம். ஒன்று திரட்டி என்ன செய்யப் போகின்றோம், எப்படி செய்யப் போகின்றோம் என்பது விவாதிக்க வேண்டியவை.
  4. இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைக்க மேற்சொன்ன வலைத்தள குழுக்களையும், இணையத்திலுள்ள பல்லாயிரக் கணக்கான GB தகவல்களை மக்களிடம் சேர்ப்பத முதல்கட்ட நடவடிக்கையாக இருக்க  வேண்டும்.
  5. இதையெல்லாம் தாண்டி, கூட்டுறவு இைய சேவை வழங்கும் குழுக்கள் உருவாக்கலாம. டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைக்கவும், ஏகபோக தனியுரிமையையும், மத்தியத்துவப்படுத்துதல எதிர்க்கவும், மக்களை ஒன்றுதிரட்டி அவர்களின் உரிமையை தகவல் தொழில்நுட்ப உலகில் வென்றெடுக்க பெரும் பங்கு வகிக்கும் இந்தத் தொழில்நுட்பம்.

Related Posts