அரசியல்

உலக மகளிர் தினம் எதற்காக கொண்டாடுகிறோம்……?

பெண்களுக்கு சமையல் போட்டியும். கோலப்போட்டியும் நடத்துவதற்கான நாள் அல்ல. நகையும் சேலையும் மற்ற பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை என்று கூவிக் கூவி விற்கும் வியாபாரம் செய்யும் நாள் அல்ல.

இது உழைக்கும் பெண்களும் அவர்களது பிரதிநிதிகளும் நடத்திய உரிமைக்கான போராட்டங்களில் உருவான நாள்.

சோஷலிச சமுதாயம் படைத்த பெரும்புரட்சிக்கு வழிவகுத்த புரட்சியை உழைக்கும் பெண்கள் தொடங்கிய நாள்.

உலக அளவில் இன்றைக்கு பெண்கள் அடைந்துள்ள கணிசமான மன்னேற்றத்திற்கு வழிவகுத்த நாள். நடந்த போராட்டங்களை நினைவு கூர்ந்து இனி நடத்த வேண்டிய போராட்டங்களுக்கு திட்டமிடும் நாள்.

இன்று நிலவும் பெண்களின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டச்சூளுரைக்கும் நாள்.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பாக எலினார் மார்க்ஸ் கூறினார் இவ்வாறு.

பெண் தொழிலாளியின் நிலைமை என்ன?

தொழிற்சாலையில் தனது முதலாளிக்காக ஆண்களைவிட அதிக நேரம் வேலை செய்கிறாள். பட்டினியை கூட போக்காத குறைந்த கூலியை பெறுகிறாள். இப்படி மற்றவர்களை சார்ந்தே வாழ வேண்டிய நிலை. ஆகியவற்றின் அடி ஆழத்தில் வீழ்த்தப்பட்டு கிடக்கிறாள் என்று எலினார் மார்க்ஸ் கூறினார்.

வெளியில் வேலைக்கு செல்லாமல் தனது வீட்டு வேலைகளை செய்து வாழும் பெண்களின் நிலை என்ன?

விடுமுறை என்று ஏதும் கூறாமல் ஆண்டுதோறும் வாழ்நாள் முழுவதும் நச்சுப்பிடித்த வீட்டு வேலைகளை செய்து கொண்டு நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து மடிவது தானே?

இந்த நிலைமைகளை மாற்ற இவற்றுக்கெல்லாம் காரணமான வர்க்க ஆதிக்கம். ஆணாதிக்கம். உள்ளிட்ட அனைத்து ஆதிக்கங்களையும் ஒழித்துகட்டி மனிதர்கள் அனைவரும் பொது உடமையையும் சம உரிமையையும் கொண்டு அன்புடன் மகிழ்ந்து வாழ்வதற்கான போராட்டத்தில் உருவான நாள் தான் உலக மகளிர் தினம்.

இந்த உலக மகளிர் தினம் எவ்வாறு உருவாகி நிலைபெற்றது. அதற்கு மார்ச்-8 என்ற தேதி ஏன் எவ்வாறு எப்போது நிச்சயிக்கப்பட்டது. என்பது பற்றியும் உண்மையான வரலாற்றை இப்போது பார்ப்போம்.

மகளிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது தொழிலாளி வர்க்கப் பெண்களின் உலக ஒற்றுமைக்கான தினம். தங்களது பலத்தையும் அமைப்பையும் பரிசீலித்து பார்க்கும் தினம்.
ஜெர்மனியும் ஆஸ்ட்ரியாவும் உணர்ச்சி வேகத்தால் உடல் சிலிர்த்து கொந்தளிக்கும் பெண்களின் கடல் போலக் காணப்பட்டன்.

நிச்சயமாக இதுவே உழைக்கும் பெண்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்திய முதல் நிகழ்ச்சியாகும். ஒரு மாறுதலுக்காக ஆண்கள் தங்கள குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்கள். அவர்களுடைய மனைவிமார்கள் கூட்டங்களுக்கு சென்றார்கள். பல இடங்களில் சாலைகளில் பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.30 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களிடமிருந்த பேனர்களை அகற்ற காவல்துறை முயற்சித்தது. பலமான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

உலக மகளிர் தினம் உருவானதற்கு உண்மையான காரணம்.

டென்மார்க நாட்டின் தலைநகரான கோபன் ஹெகனில் 1910 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை சோஷலிஸ்ட் அகிலத்தின் மாநாடு நடைபெற்றது.

இதனையொட்டி 1910 ஆகஸ்ட் 26.27. ஆகிய நாட்களில் உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். கிளாரா ஜெட்கின் தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் பெண்கள். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இவற்றோடு இணைந்து வரலாற்று புகழ் மிக்க மகளிர் தினம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தை கடைபிடிக்க வேண்டும்.

பாட்டாளிவர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள அரசியல் அமைப்புகள். மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒப்புதலோடு செய்ய வேண்டும்.

பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும்வகையில் முன்னுரிமை கொடுத்து இந்த தினத்தை கடைபிடிக்க வேண்டும்.

ரஷ்ய புரட்சியாளரும்.உலக சோஷலிஸ்ட் பெண்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான கொலந்தாய் இது பற்றி உணர்ச்சிகரமாக விளக்கியிருக்கிறார்.

மார்ச் 8 தேதி உருவானதற்கு உண்மையான காரணம்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப்பஞ்சம். என்று பாரதி பாடினான்.அதை போல ஒரு ரொட்டித்துண்டு கூட கிடைக்காமல் தானும் குழந்தைகளும் மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என்று பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தார்கள்.
அங்கு தொழிற்சாலைகள் நிறைந்த வைபோர்க் பகுதியில் துணி ஆலைகளில் வேலைசெய்த பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச்8 மகளிர் தினத்தன்று வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினார்கள்.
இப்போது முதல்முறையாக வேலைநாளில் வேலைநிறுத்தம். பேரணி தொடங்கி புரட்சியாக வெடித்தது.வேலை நிறுத்தம் செய்த துணி ஆலை பெண்தொழிலாளர்கள் அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று கோரிக்கைகளை விளக்கி கூறியது மட்டுமல்லாமல் அனைவரும் வெளியே வாருங்கள். நமக்கு உணவு வேண்டும்.போர் நிறுத்தம் வேண்டும். சுதந்திரம் வேண்டும். வாக்குரிமை வேண்டும்.போராடும் உரிமை வேண்டும். இவற்றுக்கெல்லாம் போராடுவதை தவிர வேறுவழியில்லை. வேலைநிறுத்தம் செய்து வீதியில் இறங்கி எங்களோடு சேர்ந்து போராடுங்கள்.என்று பெண்கள் அறைகூவி அழைத்தார்கள்.
சிறிது நேரம் விவாதித்த ஆண் தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்து வெளியில் வந்தார்கள்.பெட்ரோ கிராட் நகரின் முதன்மை சாலை வழியாக நெவ்ஸ்கி சாலையை நோக்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணியாக புறப்பட்டனர்.

இம்மென்றால் சிறைவாசம். ஏனென்றால் வனவாசம் என்று நம் பாரதி பாடினாரே. அது அன்றைய ரஷ்யாவை பற்றி தான்.
இத்தகைய சூழலில் தான் மகளிர் தினத்தை 1913 மார்ச் 2 ஞாயிறு அன்று ரஷ்யாவின் பழைய காலண்டர்படி பிப்ரவரி17 நடத்துவது என்று கட்சி முடிவு செய்தது. அன்றைய தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட சில நகரங்களில் மகளிர்தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு பெண்கள குழு அமைக்கப்பட்டது. பெண்தலைவர்கள் மட்டுமல்லாமல் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவரும் விவசாய வேலை செய்யும் பெண் தொழிலாளி ஒருவரும் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.மார்ச் 2 அன்று காலையில் கூட்டம் தொடங்கியது. 1000 பெண்களுக்கு மேல் இருந்தார்கள். அரங்கின் வெளியே குதிரை படையினர் உள்ளிட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.பெண்தலைவர்கள் பேசும்போது காவல்துறையினர் குறுக்கீடு செய்து கொண்டேயிருந்தனர்.முடிந்தவரை அச்சுறுத்தி பார்த்தனர்.பெண் பேச்சாளர்களோ அசரவில்லை. அஞ்சவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தனர்.
அலெக்சீவா என்றபெண் பேச ஆரம்பித்தார்.இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் ஒன்றுபடாமல் இருப்பது தான். நாம் ஒன்று பட வேண்டும்.ஆண் தொழிலாளர்களோடு இணைந்துபோராட வேண்டும். என்றும் பேசினார்.

அதுமட்டுமல்ல பல இடங்களில் காவல் நின்ற படைவீரர்களையும் அன்புடன் அழைத்தனர். படைவீரர்களின் அரண்களுக்கு சென்று பேசியபோது படைவீரர்களின் மனைவிகளும் தாய்மார்களுமவாருங்கள் என்று அழைத்தார்கள்.
பேரணியின் ஆவேசத்தால் ஈர்க்கப்பட்டு மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர்.
இவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கி பெருகும் பேராற்று வெள்ளம்போல் முதன்மை சாலையை நிறைத்தது.
எங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடு.என்ற வாசகம் எழுதப்பட்ட ஒரு பதாகை படைவீர்களின் மனைவிகள் கேட்கிறோம். போரை நிறுத்து.ஒற்றுமை ஓங்குக. என்று குரல் எழுப்பினர்.

இந்த பேரணியில் 1 லட்சத்து28 ஆயிரம் பெண். ஆண் தொழிலாளர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர். மறுநாள் 2 லட்சத்தை தாண்டியிருக்கும். மன்னராட்சி ஒழிக. ஆம். புரட்சி தொடங்கிவிட்டது.

வழியிலிருந்த தொழிற்சாலைகளின் முன்பு பெண்கள் குவிந்து அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களையும் இணைத்து கொண்டு பேரணியை தொடர்ந்தார்கள். சிகரெட் தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர்களும் இணைந்து கொண்டார்கள்.பல பெண்கள் குழந்தைகளையும் தூக்கிவந்தார்கள். சிறுவர் சிறுமிகளும் நடந்து வந்தனர்.பல இடங்களில் காவல்துறையோடு மோதல் ஏற்ப்பட்டது. அதையெல்லாம் பெண்களே நின்று சமாளித்தனர்.தேவைப்பட்ட போது மோதி விரட்டினார்கள்.

தலைநகர் பெட்ரோகிராடில் அலைகளாய் முடிவற்ற தொழிலாளர்கள் கூட்டம் வந்து கெிண்டேயிருந்தது.ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை ஓயமாட்டோம்.என்ற முடிவோடு புரட்சி தொடர்ந்தது.போராட்டத்தை ஒடுக்க தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஜார் மன்னன் உத்தரவின் பேரில்.
புரட்சி மற்ற நகரங்களுக்கும் பரவியது. வீழ்ந்தது முடியாட்சி. புரட்சி துவங்கிய நாளான மார்ச் 8 என்பது வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும்.
மாகாளி பராசக்தி உருசிய நாட்டின் மீது கடைக்கண வைத்தாள். அங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரடசி. கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான். என்று பாரதி பாடியுள்ளார். தொழிலாளி வர்க்க பெண்கள் தான் அந்த யுக புரட்சியை தொடங்கினார்கள் என்பதால் அப்படி பாடியிருப்பாரோ?

இவ்வாறு புரட்சிக்கு வித்திட்ட பெண்களின் நிலை இந்த சமூகத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளபடுவதை அனுமதிக்க கூடாது. ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் சம வேலைக்கு சமஊதியம் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தினம் மகளிர் தினம் என்பதை அனைவருடைய நினைவில் நிறுத்த உறுதியேற்கும் நாளாக பார்க்க வேண்டும். பெண்களை தாழ்வாக நடத்தும் நிகழ்வான சட்டங்கள் நிறுவனங்களை நொறுக்கி தள்ளிவிட்டோம். ஆனால் கட்டிஞம் கட்டுவதற்கான மனையை சுத்தப்படுத்தி இருக்கிறோமே தவிர இன்னும் கட்டிடத்தை கட்டவில்லை என்று மாமேதை லெனின் கூறியதை நினைவில் கொள்வோம்.
நிறைவாக.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் விளைவாக தோன்றிய நாள்.
போர்குணத்தை வெளிப்படுத்தும் நாள்.
அடக்குமுறைகளை வேறோடு சாய்த்து ஆணாதிக்க சமூகத்திற்கு முடிவுகட்ட சபதம் ஏற்கும் நாள்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று அறைகூவல் விடுக்கும் நாள்.
தனியுடைமை ஒழித்து பொதுவுடைமை சமுதாயம் படைக்க வழிவகுத்த பெரும்புரட்சி தொடங்கிய நாள்.அதை தொடர்ந்து சூளுரைக்கும் நாள்.
எழுக பெண்களே. கொண்டாடுவோம் மகளிர் தினத்தை. வென்றெடுப்போம் நமது உரிமையை.
போராடி பெறுவோம் நமது குடியுரிமையை.
பாதுகாப்போம். இந்திய தேசத்தை. ஒன்றுபடுவோம் இந்திய குடிமக்களாய்.

P.கற்பகம்

உதவிய நூல்கள்:

  1. மகளிர்தினம் உண்மை வரலாறு.

Related Posts