தமிழ் சினிமா

ராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . !

முன்டாசுபட்டி படத்தை இயக்கிய திரு.ராம்குமாரின் அடுத்த படம்தான் ராட்ச்சன். முண்டாசுபட்டியில் கதை 80களின் காலகட்டம் காதலை மையமாகக் கொண்டு அப்போதிருந்த இப்பவும் பலரிடம் இருக்கிற  மூடநம்பிக்கைகளை பகடி செய்யும் விதத்தில் நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் நல்ல திரைக்கதையோடு ரசிக்கும் விதத்தில் எடுத்திருப்பார்.

அதற்கு எந்த வகையிலும்  குறைவில்லாத அளவிற்கு பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ராட்ச்சன் திரைப்படமும்…

படத்தின் நாயகன் ஏற்கனவே முண்டாசுபட்டியில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு, மாவீரன் கிட்டு, ஜீவா, போன்ற நல்ல  படங்களை தேர்ந்தெடுத்து  நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்குரிய  நடிப்பாற்றாலை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறார் நாயகி அமலாபால் தெய்வ திருமகள் தலைவா போன்ற படங்களில் நடித்தவர்.ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார். முண்டாசுபட்டியில் நடித்த முனிஷ்காந்த் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து  நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

படத்தின் கதையை பொறுத்தவரை ஏற்கனவே ஹாலிவுட் சினிமாவில் அல்லது தமிழ் சினிமாவிலே கூட பார்த்த கதைதான் ஆனால் அது சொல்லப்பட்ட விதம்,  திரைகதை, இசை ஒளிப்பதிவு இதெல்லாம்தான் படத்தை பாராட்ட வைக்கிறது. மிஷ்கினின் அஞ்சாதே, விசில், போன்ற படங்களின் சாயல் இதில் இருந்தாலும் படத்தின் வேகத்தில் அதெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை

ஒரு சைக்கோ கொலையாளி அடுத்தடுத்து 15வயதுடைய பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார் அதுவும் கடத்தும்போது ஒரு பொம்மை தலையை வெட்டி அதன் முகங்களை கத்தியால் கீறி கடத்தப்பட்ட இடத்தில்  Gift boxஐ வைத்து தன் அடையாளத்தை விட்டு செல்கிறார்…

பொம்மையின் முகத்தை எப்படி கீறினாரோ அதேபோல் தான் கடத்தப்பட்ட மாணவிகளையும் கொலை செய்கிறார்.. ஏதோ ஒரு அடையாளத்தோடு கொலை செய்வது  உலகம் முழுவதும் பல சைக்கோ கொலையாளிகள் பின்பற்றும் யுக்தி என்று படத்தில்  ஒரு காட்சியில் செய்தித்தாள் ஆதாரங்களோடு விவரிக்கப்படுகிறது அது எந்தளவு உண்மையோ.? ஆனால் அதெல்லாம் தான் பார்வையாளர்களை ஈர்கிறது..

தொடர் கொலைகளை மையப்படுத்திய திரில்லர் படம் என்றாலே பெரும்பாலும் உடன் இருப்பவர்களே கடைசியில் கொலையாளிகளாக இருப்பார்கள் அப்படியான ஒரு எதிர்பார்ப்பை இப்படமும் பார்க்கும் போது  ஏற்படுத்துகிறது

இவரா இருக்குமோ..,?

இவரா இருக்குமோ? என அனைவரையும் சந்தேகப்பட வைக்கிறது..கெஸ்ட் ரோலாக சில நொடிகள் வரும் நடிகர் கருணாகரனை கூட கொலையாளியா இருக்குமோ என சந்தேகப்பட வைக்கிறது.. ஆனால் நாம் என்னவெல்லாம் நினைக்கிறமோ அதையெல்லாம் அடுத்தடுத்து காட்சியில் பொய்யாக்கி இறுதிகாட்சி வரை பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர்.. அதுதான் படத்தின் மிகப்பெரிய பலம் பெரும்பாலும் சைக்கோக்கள் உருவாவது சக மனிதர்களிடமும் சமூகத்திடமும் , போதிய அன்பும் ஆதரவும் கிட்டாத போதுதான்  என்பதை இயக்குநர் பதிவு செய்கிறார். சமூக காரணிகள் முக்கியமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படியான ஒரு பின்னனியில் தான் இப்படத்தில் சைக்கோ கொலையாளியும் உருவாகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம்  கொலையாளியாக நடித்த நடிகர் அதற்கு பிறகு சொல்லவேண்டுமானால் ஜிப்ரானின் பின்னனி இசைதான் சில இடங்களில் பின்னனி இசை வரும்போதே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. குறிப்பாக பின்னனி இசையோடு கொலையாளி அறிமுகமாகும் காட்சி அசத்தல். இதே போல் 80களில் வெளிவந்த  பாசில் இயக்கி சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே படத்தின் பின்னனி இசையும் , கேட்கும் போது ஒரு பதற்றத்தை உருவாக்கும்.. எனக்கு பூவிழி வாசலிலே  மிகச்சிறந்த திரில்லர் படம் அதற்கு பிறகு என்னை கவர்ந்த  படம் ராட்ச்சன் மொத்ததில் வித்தியாசமான திரைகதையோடு இப்படம் பார்வையாளர்களை மிரட்டியிருக்கிறது என்றே சொல்லலாம்……

– மோசஸ் பிரபு.

 

Related Posts