இலக்கியம்

ராமா நீ கொல்லப்படுவாய் !

(வரப்போவதாய் சொல்லப்படும் ராமராஜ்ஜியத்தில்)

ராமா,

குஜராத்தில் ஓர்
இஸ்லாமிய தாயின்
வயிற்றில் அவதரித்தால்
கருவிலேயே கருவருக்கப்படுவாய்!

ராமா,

கயர்லாஞ்சியில் ஓர்
தலித் தாயின்
வயிற்றில் அவதரித்தால்
சொந்த சகோதரியை புணர வைக்கப்படுவாய்!

ராமா,

ஓர் அருந்ததியத் தாயின்
வயிற்றில் அவதரித்தால்
உன் பக்தர்களின் கழிவை அள்ளிக் கொண்டிருப்பாய்!
அது உனக்கே நீ விதித்த கடமை
என்றுரைப்பார்கள் உன் பக்த சிகாமணிகள்?

ராமா,

விதர்பாவில்
விவசாயியாக அவதரித்தால்
உன் சக்தி முழுவதையும் பிரயோகித்தாலும்
உலகமய அரக்கனை வீழ்த்த முடியாமல்
தற்கொலை செய்து கொள்வாய்…

உன் பெயரைச் சொல்லி
நரவேட்டையாடிய உன் பக்தர்
வல்லரசாக்கிக் கொண்டேயிருப்பார்
பாரதத்தை…

ராமா,

வைப்ரண்ட் பாரதத்தில்
நீ உன் கோவிலில்
அவதரித்தால் மட்டுமே பிழைத்தாய்…..
அதுவும் பாபர் மசூதியை
இடித்தது தவறென்று
சொல்லி விட்டாயெனில்,

ராமன் கோவிலினுள் ராமன் நீ,  கொல்லப்படுவாய் …

 

Related Posts