அறிவியல் தொழில்நுட்பம்

இந்துவின் பேப்பர் க்வ்லிங் கலை!

IMG_20131225_183324பேப்பர் க்வில்லிங் என்ற கலை வடிவம் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உலகுக்கு அளித்த கொடை என்று கருதப்படுகிறது. எகிப்து தேசத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் இணையதளத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. ஐரோப்பா முழுக்கப் பரவிய இந்தக் கலை, இன்று நம் நாட்டிலும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.

டிசம்பர் 24 அன்று மதுரையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மாநாடு முடிந்து வீடு திரும்பிய எனக்குப் பிறந்த நாள் பரிசாக எனது அன்பு மகள் இந்து வழங்கிய அழகு பொம்மையை நீங்கள் இணைப்பில் பார்க்க முடியும். சிவப்புத் தொப்பி அணிந்து இருப்பது. அருகில் உள்ள பெண் பொம்மை அவள் ஏற்கெனவே செய்தது.

பேப்பர் க்வில்லிங் செய்வதற்கான காகிதம் அதே பெயரில் சாதாரண பெரிய எழுது பொருள் விற்பனைக் கடை எதிலும் கிடைக்கும். நீங்கள் இணைப்பில் பார்க்கும் இந்த பொம்மை ஒவ்வொன்றையும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் எடுத்துச் செய்து முடித்திருக்கிறாள் இந்து.

INDU

இந்து

5 அல்லது 10 செ.மீ கனத்தில் கிடைக்கும் பேப்பர் க்வில்லிங் தீபாவளிக்கு வாங்கும் ரோல் கேப் மாதிரி இருக்கும். அந்த நீளவாக்கில் உள்ள ஸ்ட்ரிப்பை மெல்ல சுருட்டித் தேவையான வடிவில் கொண்டு சென்று பசை வைத்து ஒட்டி பொம்மையைத் தயாரிக்கலாம். வண்ண வண்ண ஸ்ட்ரிப்களாக பேப்பர் க்வில்லிங் பொருள் கிடைக்கிறது என்கிறார் இந்து.

பொறுமையும், ஆர்வமும், விடாப்பிடியான தேடலும் வித விதமான வடிவங்களை உருவாக்கத் துணை செய்யும் என்றார் இந்து. கேட்டுக் கொண்டேன். அவ்வளவு சீக்கிரம் செய்ய இயலுமா தெரியவில்லை.

Related Posts