புதிய ஆசிரியன்

புதிய ஆசிரியனின் வணக்கம் !

புதிய ஆசிரியன் மாத இதழ் 1987 ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் முயற்சியால் தொடங்கப்பட்டதாகும். நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இடையிடையே இதழ்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படினும், 1998 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த இதழ் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

ஆசிரியர்கள் இணைந்து வெளியிடும் இதழானாலும் மாணவர்கள்/ஆசிரியர்களின் தேர்வுக்கான தயாரிப்புக் குறிப்புகளாகவோ, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட தகவல் தொகுப்புகளாகவோ இல்லாமல் – பல்சுவை இதழாக, இனிமை ததும்பும், சிந்தனைச் செரிவு கொண்ட கட்டுரைகள், கதைகளோடு வெளிவருகிறது இந்தப் புத்தகம்.

புதிய ஆசிரியன் இதழ் ஏற்கனவே இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், பி.டி.எப் வடிவத்தில் மட்டும் தொகுக்கப்பட்டு வந்த இதழின் கட்டுரைகள், இனி மாற்று இணையத்தில் தொகுக்கப்படவுள்ளன. 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொகுத்த புதிய ஆசிரியன் – ஆசிரியராக தற்போது கே.ராஜு செயல்படுகிறார் ஆசிரியர் குழுவில் பெ.விஜயகுமார், ஜி.சி.மனோகரன் ஆகியோர் உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி முதல் புதிய ஆசிரியன் கட்டுரைகள் ‘மாற்று’ தளத்தில் வெளியாகும். சந்தாரராக aasiriyan11@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி…

 

Related Posts