அரசியல் சமூகம்

வாக்காளர்களுக்கு தண்டனை – ஐடி நிறுவனங்களின் அவலம் (1)

தகவல் தொழில்நுட்ப அரங்கில் அவலங்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் எந்தெந்த ரூபத்தில் நடக்கிறது என்பது பலரும் அறிந்திருப்பதில்லை. அவை குறித்து இங்கே ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அந்த வகையில் இந்தக் கட்டுரையை முதல் பகுதியாக கொள்ளலாம்.

தேர்தல் நாளில் விடுமுறை கொடுக்காத பல ஐடி நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டன. ஒவ்வொரு தேர்தலின்போதும், ஐடி தொழிலாளர்கள் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது வழக்கம். தேர்தல் விடுமுறை என்பதே இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணைய தலையீடு காரணமாக விடுமுறை கிடைத்தது.

பொதுவாக, தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று‍ சில நாட்கள் முன்னதாகவே கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பு அனைவரின் மின்னஞ்சலையும் அடையும். அந்த மின்னஞ்சலை நகலெடுக்கவோ பிறருக்கு அனுப்பவோ முடியாது.


மின்னஞ்சல்…..

Dear Associates,

The polling for the Indian parliamentary elections is schedules on April 24th 2014 in Chennai. We are declaring April 24th 2014 as a holiday to enable you to exercise your franchise.

Please note that all facilities across location will remain open on April 24th 2014 for ITIS, BPO and production support teams to support all critical deliverables of client businesses. The respective PM/PLs will make necessary adjustments to your time schedule to ensure that you are able to exercise your franchise.

Please note that it will be business-as-usual for associates who work after 6 p.m. The logistics and facility-related arrangements will be available to them as usual.

Associates working in Client locations need to follow our Client guidelines. PM/PL’s are requested to work with the account managers and onsite counterparts, to keep the clients and the team updated and also facilitate our associates to exercise their franchise.

Thanks & Regards,

xxxxx xxxxxx

Human Resources


இந்த அறிவிப்பில் முதலில் விடுமுறை என்று அறிவித்துவிட்டு – பின் பகுதியில் பலருக்கும் விடுமுறை இல்லை என்று சொல்கின்றனர்.  இந்தியா போன்ற ஒரு நாட்டில் மட்டுமே இது சாத்தியம். இங்கு “critical deliverable” என்பது தேவைபட்டால் உருவாக்கி கொள்வது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

‘சரி, கொஞ்சம் பேர வரசொல்லியிருக்கிறார்கள்’ என்பது மட்டும் விஷயம் இல்லை. வேலை பாக்காம சம்பளம் எப்படி குடுப்பது. இதற்கு பதில் சொல்கிறது இன்னொரு அறிவிப்பு. “Special working day – 31st May 2014” என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிவிப்பு மின்னஞ்சல் கீழே.


Dear Associates,

Due to client and business considerations, our offices in Chennai will remain open on Saturday, 31st May, 2014.

All transportation and other arrangements would be available as usual.

PMs/PLs are requested to inform their onsite counterparts and customers about this.

Regards
Human Resources – Chennai


“client and business considerations” என்ற பதத்திற்கு அர்த்தம் என்ன என்பது தெரியுமல்லவா? இவ்ளோ பெரிய ஆங்கில பதத்திற்கு தமிழிலில் ஒரே ஒரு வாசகம் தான் அர்த்தம், அது தேர்தல் நாளன்று விடுமுறை கொடுத்ததால், “மே 31 (இன்று) எனக்கு ஆப்பிஸ்” 🙁

Related Posts