1990களில் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்து அவை இந்திய மக்களின் வாழ்க்கைமுறையை வெகுவாக பாதித்துள்ளது. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற பணிகளிலிருந்து அரசு பின்வாங்கிக் கொண்டு தனியார், வெளிநாட்டு முதலாளிகளின் கையில் இவற்றையெல்லாம் கொடுத்து விட்டது. இதனால் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. 2010ல் உலகவங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 32.7% மக்கள் சர்வதேச வறுமைக்கோட்டு அளவீடான நாளொன்று 1.25அமெரிக்க டாலருக்கு (உத்தேசமாக 75 ரூபாய்) கீழேயும், 68.7% மக்கள் 2அமெரிக்க டாலருக்கு கீழேயும்(120 ரூபாய்) வாழ்க்கை நடத்தி வருவதாக கூறுகின்றது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தலித்துகளும்,பழங்குடியினருமே. இதற்கு முன்னர் அரசு செய்த பணிகளை தற்சமயம் பல அரசு சாரா அமைப்புகள் (NGO) செய்து வருகின்றன. மத்திய அரசு – ஒப்பந்த முறை,பணியை வெளி நிறுவனங்களுக்கு கொடுத்தல், கௌரவ, பகுதி நேர பணிகளை உருவாக்குதல், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் இடப்பங்கீடு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதிப் பாகுபாடு பார்க்கும் ஒப்பந்ததாரர்களும், அரசு சாரா அமைப்புகளும் பயனடைகின்றனர்.
தலித்துகளுக்கு கடந்த காலங்களில் நில (சொத்து) உரிமை மறுக்கப்பட்டதாலும், குறைந்த ஊதியத்தாலும் (மற்ற சாதியினரை ஒப்பிடுகையில்), தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்ததாலும் சமூகத்திலும்,பொருளாதார நிலையிலும் தலித்துகள் மற்ற முற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சாதியினரை விட பின்தங்கியே உள்ளனர். கடந்தகாலங்களில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இடப்பங்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தனியார்மய,தாராளமய கொள்கைகளினால் உருவான நிறுவனங்கள் இடப்பங்கீட்டு வரம்புக்குள் வராததால், இடப்பங்கீட்டை இல்லாமல் செய்யும் பணியை இந்த கொள்கைகள் ஒரு அம்சமாக தன்னுள் கொண்டுள்ளன. இந்த கருத்தரங்கு தலித்துகளை பற்றி
பேசவிருப்பதால், தலித்துகள் தொடர்பான சில புள்ளிவிவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஏற்கனவே மிகச்சிறியதாக உள்ள அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயம் புகுத்தப்பட்ட ஒரே ஆண்டில் பணி எண்ணிக்கை குறைந்து ஒட்டுமொத்தமாக அரசு பணியில் உள்ள தலித்துகளின் எண்ணிக்கை 6,28,000-த்திலிருந்து(1991), 6,04,000-மாக(1992) குறைந்துள்ளது. இது பொதுத்துறையில் 4,32,000-த்திலிருந்து(1991), 3,69,000-மாக(1992)குறைந்துள்ளது. 1992க்கும் 1997க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் மட்டும் மத்திய அரசு பணி 10.07% குறைந்ததால் 1,13,450 வேலைவாய்ப்புகள் தலித்துகளுக்கு குறைந்துள்ளது.
தனியார் தங்கள் நிறுவனங்களின் நேர்முகத்தேர்விலும், பணி நேரத்திலும் சாதிப்பாகுபாடு கடைபிடிக்கப்படுவதில்லை என்று கூறிவந்தாலும், அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் எதுவும் இல்லை.2010ல் இந்தியாவில் உள்ள 1000 பெரிய தனியார் நிறுவனங்களில் முடிவுகள் எடுக்கும் உயர்நிலைக்குழுவில் உள்ளவர்கள் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் மொத்தமுள்ள 9052 அதிகாரிகளில் 8204 (92.7%)உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிராமணர்களும், வைசியர்களும்(பனியா) உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சாதியினர் 345 பேரும் (3.8%),தாழ்த்தப்பட்ட, பழங்குடி சாதியினர் 319 பேரும் (3.5%) உள்ளனர்.இந்த 1000 பெரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள மொத்த மூலதனத்தில் 80 விழுக்காட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. அமைப்பாக்கப்பட்ட சாதி ரீதியிலான பாகுபாடில்லாமல் இது தனியார் துறையில் சாத்தியமா? இந்திய சமூகத்தில் எந்த நிறுவனமும்,
எந்த துறையும் சாதி ஆதிக்கம் இல்லாமல் சாத்தியமில்லை, இங்கு தனியார் துறையும் விதிவிலக்கு கிடையாது. உண்மையாக எவ்வளவு சாதி பாகுபாடு
நடந்துள்ளது என்பதை நேர்மையாக ஆராய்வது தான் சரியேயன்றி, அதை புறக்கணித்து செல்வது சரியல்ல..
ஜனசங்கத்தின் அடியாளை கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி என்பது ஜன சங்கத்தின்(R.S.S) மறைமுக அரசியல் கட்சி தான் என தன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது. மக்களின் உணர்வைத் தூண்டி விட்டு சாதி பாகுபாட்டை நியாயப்படுத்தும்
வர்ணாசிரமத்தையும், மனு ஸ்ம்ரிதியையும் காக்கும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அதே நேரத்தில் பா.ஜ.க சமூகநீதியை வலியுறுத்தும் இடப்பங்கீட்டிற்கு எதிராக நடந்த பல வன்முறை போராட்டங்களை ஆதரித்துள்ளது,இதனால் இடப்பங்கீட்டை அமல் படுத்துவது பல ஆண்டுகள் தள்ளிவைக்கப்பட்டது.காங்கிரசு கட்சியோ 2004ல் தனது முதல்பதவிகாலத்திலேயே தனியார் துறையில் இடப்பங்கீடு கொண்டு வருவதை “குறைந்த பட்ச செயல் திட்டமாகக்”கொண்டிருந்தாலும் , அதை இன்றுவரை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. பிரதமரும் இதை நடைமுறைப்படுத்துவதாக முதலில் கூறிய போது தனியார் முதலாளிகளின் எதிர்த்ததால் மௌனமாகிவிட்டார். ஜனநாயக்கத்திற்கும் , சமூக நீதிக்கும் வழிவகுக்கும் இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்த மாற்று சமூக- பொருளாதார கண்ணோட்டம் கொண்ட ஆட்சியமைய வேண்டும். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி
தொடக்கத்திலிருந்தே இடப்பங்கீட்டிற்கு ஆதாரவாக பேசியும், தனியார் துறையில் இடப்பங்கீட்டை வலியுறுத்தியும் வருகின்றது.
சமுத்துவமான சமூகமே சரியான வளர்ச்சியடையும். சாதி ரீதியிலான பாகுபாடு தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் சரியான, அடிப்படைக்
கல்வி, நில உரிமை, பொது வெளி, மூலதனம், வேலைவாய்ப்பு என எல்லாம் மறுக்கப்பட்டதால் தான் இங்கு சாதிகளுக்கும், சமூகங்களுக்கும்
இடையான சமத்துவமில்லாமல் போனது. இந்த சமத்துவமின்மை தான் நமது நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம்.மேற்கூறியவற்றின் பின்னணியில், ஒரு தேசிய கருத்தரங்கு
“தனியார்மயமும், தனியார்துறையில், தலித்துகளின் நிலையும்” என்ற தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நாள்: பிப்ரவரி 15, சனிக்கிழமை.
இடம் : தலைமைச் செயலக மன்றம், கப்பன் சாலை, கப்பன் பூங்கா(M.S.கட்டிடத்திற்கு எதிரில்) , பெங்களூரு.
கருத்தரங்கு நிகழ்வுகள்:
காலை அமர்வு : 10.30 மணி முதல்12.45 வரை
கருத்தரங்கு துவக்கமும், சிறப்பு விருந்தினர்களின் உரையும்.
கருத்தரங்கு துவக்கமும், சிறப்பு விருந்தினர்களின் விளக்கேற்றமும்.
கருத்தரங்கின் துவக்க உரையும், கருத்தரங்கின் தேவை குறித்தும்
பத்ம ஸ்ரீ . முனைவர்.சுகாதோ தோரட்.
தலைவர். இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றம்- புது தில்லி.
கருத்தரங்க நோக்கம் குறித்து
பத்ம ஸ்ரீ . திரு. தேவனூர் மகாதேவா
கன்னட எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்.
தனியார் துறையில் இடப்பங்கீடு தேவையா? – உரை.
முனைவர். மகேஸ்வரன்.
கர்நாடக அரசின் திட்டக்குழு ஆலோசகர்.
தலைமை உரை.
தோழர்.ஜி.வி. சிறீராம ரெட்டி
மாநில செயலாளர், கர்நாடகாவிற்கான மையக் குழு உறுப்பினர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி
வரவேற்புரை: லிங்கராஜீ நன்றியுரை: கோபால கிருஷ்ண அரலஹள்ளி.
உணவு இடைவேளை – 12.45 – 01.30 (உணவு கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களால்
வழங்கப்படும்.
மதிய அமர்வு : 1.30 மணி முதல் 04.00 மணி வரை
உரைவீச்சு, கலந்துரையாடல், கேள்வி பதில்.
1.30 மணி முதல் 3.30 மணி வரை.
இடஒதுக்கீடு கிடையாது = உயர்த்தப்பட்ட சாதியினர் , வர்க்கத்திற்கு 100%
இடஒதுக்கீடு – உரை.தோழர்.ஜி.என்.நாகராஜ்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி – மாநில செயற்குழு உறுப்பினர். கர்நாடகா.
CII, DICCI-யின் இடப்பங்கீட்டு குழு முன்னெடுத்துள்ள வேலை வாய்ப்பு,
தொழில் முனைவோர் பணிகள் குறித்துதிரு. அவினாஷ் குல்கர்னி
CII, DICCI-யின் இடப்பங்கீட்டு குழு உறுப்பினர்.
தனியார் மயமும், இடப்பங்கீடும் – உரை.
திரு. ஹனுமந்த்தையா
முற்போக்கு எழுத்தாளர்.
3.30 மணி முதல் 4.0 மணி வரை.
தலித், முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு
வரவேற்புரை: கோபால கிருஷ்ண அரலஹள்ளி. நன்றியுரை: லிங்கராஜீ
Recent Comments