அறிவியல்

சிறப்புப் படம்!

Pig

பன்றி (Pigs) இரட்டைப் படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. பன்றி இறைச்சி சத்து நிறைந்ததாக இருந்தாலும் பல கலாச்சாரங்களிலும் பல மதங்களிலும் இது குறித்து வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. படத்தில் படுத்துக் கொண்டிருக்கும் இரு பானைவயிற்றுப் பன்றிகள் காட்டப்பட்டுள்ளன.

சில தகவல்கள்

பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது.

Kingdom: விலங்கினம்
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Subclass: Theria
Infraclass: Eutheria
Order: இரட்டைப் படைக் குளம்பி
Family: பன்றிக் குடும்பம்
Subfamily: Suinae
Genus: Sus
லின்னேயசு, 1758

கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும். பன்றிகள் புத்தி கூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்.

பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக் கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

பன்றிக் காய்ச்சல்

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை. மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய இந் நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர். கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

Source:- Tamil Wiki

Related Posts