இந்திய சினிமா சினிமா

PAD MAN படம் மட்டுமல்ல பாடம் . . . . . . . . . . . !

ஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த  இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது.

முழுக்க முழுக்க பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும், நாப்கின் பயன்பாட்டின் அவசியத்தை கதை கருவாக கொண்ட முதல் இந்திய திரைப்படம் PAD MAN. இப்படம் பெண்களுக்கான படம் மட்டுமல்ல. இச்சமுகத்தில் ஒரு தரபினர்க்கு இழைக்கப்படும் அநிதிகளை ஒங்கி ஒலிக்க செய்திருகிற படம். பொதுவாக திரைப்படங்களில் பெண்களை மிக பிரமாண்டமாக அல்லது மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கைப்படுவதற்கு மாற்றாக திரைமறைவில் இருக்கும் சராசரி பெண்களின் அவல நிலையை திரையிட்டு காட்டிருகிறது.

விண்வெளி ஆரய்ச்சிகளில் நாசாவிற்கு இணையாக நாம் திகழ்க்கிறோம் என பெருமைப்பட்டுக் கொள்ள கூடிய இந்த தருணத்தில் தான் 500 மில்லியன் பெண்கள் இருக்க கூடிய நம் நாட்டில் வெறும் 18% பெண்களே நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என வெக்கி தலைகுனிய செய்கிறது.

மாதவிடாய் நாட்களில் சுகதரமற்ற துணிகளை பெண்களை உபயோகப்படுத்துவதன் மூலம் பலவித நோய் தொற்று உண்டாகிறது. இதன் காரணமாகவே அதிக பெண்கள் உயிர் இழக்க நேரிடுகிறது. ஆனால் அரசோ அதனை ஆடம்பர பொருளாகி 12% ஜிஎஸ்டி வரிவிதிப்பு எப்படி புரிந்துக் கொள்வது? அவசியமான பொருள் எப்படி ஆடம்பரமாக கருதமுடியும்?

காண்டம் கூட மிக சுலபமாக வாங்கி விடலாம் ஆனால் மெடிகல் சாப்புகலில் கூட நாப்கின் இன்றும் பேப்பரில் மடித்து ஒளித்து கருப்பான  பாலிதின் கவர்களில்  கொடுப்பதற்கு பெயர்தான் விண்ஞான உலகமா?

பெண்களின் பிரச்சனைகள் ஆண்களுக்கு தெரிய கூடாது அல்லது அரிய கூடாது. மாதவிடாய் சம்மந்தமாக சந்தமாக பேசுவது தவறு என இதுப்போன்றே காலம் காலமாக அணைவருக்கும் போதிக்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளை இரகசியமாக பேசு அல்லது காதுகுள் பேசு என்பதற்காக என்னவோ நாப்கின்க்கு – விஸ்பர் (whisper) எனப் பெயரிட காரணம்?? இதுப்போன்ற பல கேள்விகளை நம் மனதில் மிகச்சுலபமாக எழுப்பச்செய்து இருக்கிறது Pad man.

பல ஆண்டுகளாக முடங்கிகிடந்த பெண்கள் இந்த சானிடரி நாப்கின்களால் தான் வெளியே சென்று சாதிக்க முடிகிறது. ஆனால் இன்றும் பல குக்கிறமங்களில் இதன் அவசியத்தை அறியாமல் அல்லது வாங்கும் சக்தி இல்லாமல் பல வயதிற்கு வந்த பெண்களின் கல்வி தடைப்பட காரணமாகிறது. இவர்களின் கனவுகள் விட்டு சமையல் அறைகளிலே முடக்கி போடப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாயின் போது சராசரி ஒரு மாதத்திற்கு 3 முதல் 5 நாட்கள் விடாது இரத்த போக்கு ஏற்படுகிறது. இதே ஒரு ஆணுக்கு தொடர்ந்து அரைமணி நேரம் இரத்தம் வெளியேறினால் உடனே அவன் இறந்து விட கூடும் என நெற்றியில் அடித்தார் போல் கூறும் காட்சி சிறப்பு. பெண்களின் உடலை போக்க பொருளாக வெறும் கவர்ச்சி கூடமாக காட்டி  தொடர்ந்து மழுக்கடிக்கப்படும் இன்றைய சமுகத்திற்கு இந்த படம் கட்டாயம் தேவைப்படுகிறது.

மனிதன் தினத்தோறும் உடல் கழிவுகளை வெளியேற்றுவது எப்படியோ அதே போன்றுதான் பெண்களுக்கு இயற்க்கையாக ஏற்படும் சுழற்சி காரணம் மாதவிடாய் என அறியாமல் அதனை புனிதமற்றது அல்லது தீட்டு என பூதாகரமாக காட்டி ஒதுக்கிவைப்பது நியாயமற்றது.

எப்போதும் எளிய மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் மிரச்சியை அவ்வளவு சீக்கிரம் ஏற்படுத்தாது. அதனை பெரும் போராட்டத்தின் மூலமே நிருபிக்க வேண்டிய உள்ளது. இதில் அருணாசலம் மட்டும் என்ன விதிவிலக்கா ?? கோவையை சேர்ந்த அருணாசலம் பல அவமானங்களை வென்று எளிய மனிதராலும் சாதிக்க முடியும் என நிருபித்துக் காட்டிருகிறார். இன்று சுகாதரமான சானிடரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரிந்து உலக அளவில் புகழ் பெற்று தனக்கென ஒரு இட்த்தை தக்கவைத்திருக்கிறார். இவரின் போராட்ட கதையை தான் படமாகிருக்கிறார் பால்கி.

இவர்களை போன்ற திறமையானவர்களைஅடையாளம் கண்டு உதவிகரம் நீட்டுவது மிக அவசியமானது. அருணாசலம் போன்ற மனிதரால் குறைந்த விலையில் கொடுக்க முடிகிற சானிட்டரி நாப்கின்கள் ஏன் ஒரு அரசால் கொடுக்க முடிவதில்லை என்ற கேள்வி படத்தின் இறுதியில் மனிதில் தொற்றிக் கொண்டது.

தொடந்து பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை அகலவும், ஆண் பெண் சமத்துவத்தை பேண மற்றும் பெண்களில் பிரச்சனைகளை பேசக்கூடிய அதிகமான படங்கள் வரவேண்டும். சமுக மாற்றதிற்கு திரைப்படங்களுக்கும் அதிக பங்கு உள்ளதை உணர்ந்து செயல்பட  வேண்டும். மொத்ததில் PAD MAN படம் மட்டுமல்ல பாடம்.

– வசந்தி பாரதி.

Related Posts