தலையங்கம்

மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல்

இந்த திறந்த மடலை வாசித்து ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள், பின்னூட்டத்தில் தங்கள் விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் அமைப்பு 1978 பிரஸ் கவுன்சில் சட்டம் “ஊடக சுதந்திரத்தை காப்பாற்றும் பொருட்டும், ஊடகங்களில் தரத்தை உயர்த்துவதற்காகவும் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டது.” என்று அறிவிக்கின்றது

தொழிலாளர்கள் பேரணி குறித்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தது தொடர்பாக மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல்

13.12.13 ம் தேதியிட்ட தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைகள் தங்கள் சென்னை பதிப்புகளில் கூட12.12.13 (மாளவிகா வியவாஹரேயின் தரவேற்றிய காணொளி) மற்றும் (வெங்கட்டின் பதிவு) அன்று 11 மத்திய தொழிற்சங்கங்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, 2 லட்சம் மக்கள் கலந்து கொண்ட “நாடாளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பை“ பற்றிய செய்தியை வெளியிடாமல் புறக்கணிப்பு செய்திருந்தன என்பதை மிகுந்த வருத்தத்தோடு மேற்சொன்ன பத்திரிக்கைகளின் வாசகர்களாகிய நாங்கள், உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். மைய நீரோட்ட ஆங்கில தொலைக்காட்சிகளும் இதையே செய்தன. ஊடகங்களின் கவனத்திற்குவ் வந்து விடுகின்ற நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை விட அதிகமாக மக்கள் திரள் ஆதரவு பெற்ற பேரணிக்கு ஏன் கிடைக்காமல் போனது?

நாங்கள் குறிப்பிடும் இந்த செய்தி, சமூக வலைத்தளங்களின் வழி செய்தி கிடைத்து என்பதோடு, தில்லி பிரதியில் சிறிய அளவில் இந்த செய்தி இடம்பெற்றிருந்தது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, கேரளாவில் நடந்த ‘பெரிய இடத்து(புவனேஷ்வரி – ஸ்ரீசாந்த்) திருமண செய்தியை புகைப்படங்களோடு 13.12.13 அன்று அனைத்து முக்கிய நாளிதழ்களும், தில்லி பிரதியிலும் கூட வெளியிட்டிருந்தது. அந்த இணையர்கள் மீது எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை, அவர்களுக்கு நல்லவைகளே வாய்க்கட்டும் என்றே வாழ்த்துகிறோம்.

இப்படி செய்திகள் புறக்கணிக்கப்படுவது முதல் முறையல்ல, மாற்று ஊடகங்களில் வழி பரவலாக வெளிக் கொண்டுவரப்பட்ட பல செய்திகள் இப்படி இதற்கு முன்னரும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

சாய்நாத், மூத்த பத்திரிக்கையாளர், மையநீரோட்ட ஊடகங்களின் புறக்கணிப்பு தொடர்பாக எழுதிய பதிவு (ஸ்ரீனிவாசன் ரமணி – அவர்களின் பதிவையும் வாசியுங்கள்)

பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு தில்லி அதுவரை கண்டிராத மாபெரும் பேரணியை கண்டது. காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 9 மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். இது அண்ணா ஹஜாராவின் உண்ணாவிரதத்துக்கும், ராம்தேவின் கோமாளித்தனமான ‘யோகா முகாம்’ க்கு திரளும் கூட்டத்தைவிட அதிகமான கூட்டம். இந்த தொழிளார்களோ, தொழிற்சங்கங்களோ அரசோடு தொடர்பிலிருப்பவர்களோ, சந்தையின் திசைவழியில் செல்பவர்களோ, கார்ப்பரேட்டுகளால் பண உதவி செய்யப்பட்டவர்களோ அல்ல. மாறாக, தங்கள் உறுப்பினர்களின் நலனை பிரதிபலிப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், சிவில் சமூகத்தின் ‘குட்டி மாதிரி’. பேரணியை பிபிசி, ருய்டர்ஸ், ஏ.எப்.பி போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் பதிவு செய்திருக்க, இந்திய ஊடகங்கள் போக்குவரத்து நெரிசல் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தன. http://www.thehindu.com/opinion/columns/sainath/the-discreet-charm-of-civil-society/article2110433.ece

மும்பையில் நடந்த ஆலைத்தொழிலாளர்கள் போராட்டம் குறித்து சித்தார்த்யா ராய் “முரணாக தொழிலாளர்களின் போராட்டம், பேரணி எதற்கானது? எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? யார் ஒருங்கிணைத்தார்கள்? அவர்களுடைய கோரிக்கை என்ன? பிரச்சினையின் பின்னணி என்ன? அரசு அதற்கு எப்படி எதிர்வினையாற்றியது? போன்ற எந்த விபரங்களில் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்பதுதான் முக்கியமான பிரச்சினை”.

(http://www.thehoot.org/web/home/story.php?sectionId=1&mod=1pg=1&valid=true&storyid=5418)

சென்னை ஐஐடியில் ஆசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த டி,ஜி.நாராயணன் நினைவு உரையில் அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேஹி மும்பை சைத்ய பூமியில் மிகவும் ஒழுக்கமாக திரண்ட 20 லட்சம் மக்களை பற்றிய செய்தியை திட்டமிட்டு மறைத்ததை குறிப்பிட்டார். (ரவுண்டு டேபிள்). அதோடு நாம் மேலே குறிப்பிட்ட செய்தியை போலவே இந்த செய்தியும் நகர பிரதிகளில் இடம்பெற்றது. ஆனால், உண்மைக்கு மாறான ‘தொந்தரவு தரும் கூட்டம்’ என்ற தொனியில் இடம்பெற்றிருந்த்து உண்மைக்கு வெகு தொலைவாக இருந்தது வேடிக்கையானது.

அதேபோல, முகேஷ் அம்பானியின் மகன் 8 டிசம்பர், 2013 அன்று காரோட்டி நிகழ்த்திய விபத்தில் 2 பேர் இறந்த்தாக சொல்லப்படும் செய்தியையும் இந்த பத்திரிக்கைகள் மறைத்தன என்பதையும் இங்கே குறிப்பிடுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும் . இணைப்பு – கம்யானி பலி மஹாபல்

ஆனால், முறைசார் – முறைசாரா தொழிலாளர்கள், பழங்குடிகள், தலித் மக்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், பாலின சிறுபான்மையினர், மாற்று திறனாளிகள், மதச் சிறுபான்மையினர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பின், ‘இதழியல் ஒழுங்கு’ ஏதும் இல்லாமல், பெரும்பாலான நேரங்களில் தப்பித்தவர்களின் அடையாளங்களை கூட வெளியிடும் சிரத்தையை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற செய்தி புறக்கணிப்பு அல்லது இருட்ட்டிப்பின் பொழுது http://presscouncil.nic.in/complaints.htmஎன்ற இணைப்பில் புகார் தெரிவிக்க வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. அதில்,“ஊடகத்திற்கு எதிரான புகார்: ஊடகவியல் ஒழுங்குவிதியை மீறியதற்காக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகாரளிக்கும் நபர் பாதிகப்பட்டவராகவோ, நேரடியாக தொடர்புடையவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. செய்தியையோ, அறிக்கையையோ, கேலிச் சித்திரத்தையோ, நிழற்படத்தையோ, விளம்பரமோ எதுவாயினும் அவற்றை வெளியிடுவதோ, வெளியிடாமலிருப்பதிலோ ஊடக ஒழுங்கை மீறியிருந்தால்”.

ஆனால், புகாரை தெரிவிக்க முனைந்தால் அதற்கு முன் பத்திரிக்கை ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

“ பத்திரிக்கை ஆசிரியருக்கு எழுதுங்கள்

புகாரளிப்பவரின் பார்வையில் ஊடக ஒழுங்கு விதி எப்படி மீறப்பட்டுள்ளது என்பதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வருவது விசாரணை வழிமுறைக்கு தேவையான நிபந்தனையாகும். ஆசிரியரின் கவனத்திற்கு இந்த புகார் கொண்டு செல்லப்படுவது புகாரளிப்பவர் அடையாளமும், புகாரின் தன்மையையும் ஆசிரியர் புரிந்து கொள்ள உதவும்”.

புகார் தெரிவிப்பதற்கு முன்பாக ஆசிரியருக்கு எழுத வேண்டியதன் தேவையை நாங்கள் உணர்ந்திருந்தாலும், புகாரளிப்பவர் யாரென்று ஆசிரியருக்கு அடையாளம் தெரிய வேண்டியதன் அவசியம் என்ன என்பது புரியவில்லை. புகாரளிப்பவரின் அடையாளம் பிரஸ் கவுன்சிலுக்கு மட்டும் தெரிவிக்கும் படியாக மாற்றுவது சிறந்த வழிமுறையில்லையா?

சமகாலத்தில் ஒரு இளம் பெண்ணை மோடி தலைமையிலான குஜராத் அரசே வேவு பார்த்த விவகாரத்தை மாற்று ஊடகங்கள்தான் வெளிக் கொண்டு வந்தன என்ற செய்தியை இதன் தொடர்ச்சியாக குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்குமென்று நினைக்கிறோம்.

அலுவல் ரீதியாக இந்த பிரச்சினை எதிர்கொள்வதற்கு மாறாக, சமூக வலைத்தளங்களின் வழியாகவே இந்த பிரச்சினையை உங்கள் கனவத்திற்கு கொண்டு வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

  1. பத்திரிக்கை கவுன்சிலிடம் புகாரளிக்கவென்று இருக்கும் வழிமுறையின்படி புறக்கணிக்கப்பட்ட செய்தி குறித்த புகாரினை சம்பந்தப்பட்ட செய்தி ஆசிரியருக்கு வழங்க வேண்டும், நாங்கள் இதை வலிந்தே தவிர்த்தோம். ஏனென்றால், எங்கள் புகாரென்பது ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கைக்கோ அல்லது ஒற்றை செய்தியை பற்றியதோ மட்டும் கிடையாது.
  2. எங்களில் சிலர் இந்த பத்திரிக்கைகளின் சில ஆசிரியர்களையும், துணைஆசிரியர்களையும் இன்னும் நம்புகிறோம். அவர்கள் இந்த பிரச்சினையின் கவனம் செலுத்தி, அவரவர் பத்திரிக்கைகளில் இந்த நாட்டின் மக்கள் தொகையில் 90% அளவு இருக்கும் சாதாரண மக்கள் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டுமென்று விரும்புகிறோம்.

இதுபோன்ற, பாரபட்சமான செய்தி வெளியிடும் போக்கு என்பது ஊடகங்கள் ‘பரபரப்பூட்டும்’ நிகழ்வுகள் மட்டுமே செய்திகளாக வெளியிட தகுதி பெற்றவையாகவும், மக்கள் போராட்டங்களை வடிகட்டி நீக்கிவிடுவதாகவும் இருக்கின்றது. எதையும் நேரடியாக தற்போது குறிப்பிடவில்லையாயினும், இதுபோன்ற விசயங்களை தாங்கள் கவனத்தில் கொண்டு, தேவையானதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் நீண்டகாலமாக பத்திரிக்கை சுதந்திரத்திற்காக உறுதியாக முன்நின்றவர்கள் என்ற முறையில், மக்கள் சார் செய்திகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிரான இந்த போராட்டத்தை முன்னகர்த்த ஆயத்தமாயுள்ளோம்.

இப்படிக்கு

Catalyst Study Circle என்னும் முகநூல் குழுமத்தில் சில பிரதிநிதிகள்

தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam) – TN Labour Blog and மனித கழிவை மனிதனே அகற்றுவதற்கெதிரான கூட்டமைப்பு Forum Against Manual Scavenging (FAMS)

ஆதரவு தெரிவிப்பவர்கள்:Endorsed By: Following people have endorsed it till now:

Sadanand Menon, Arts editor and Adjunct Faculty, Asian College of Journalism (ACJ), Chennai சதானந்த் மேன்ன், கலை ஆசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் சி லட்சுமணன், C Lakshmanan, Faculty, Madras Institute of Development Studies  Sujatha Mody, Penn Thozhillalar Sangam வ. கீதா, மொழிபெயர்ப்பாளர், சமூக வரலாற்றாளர் மற்றும் செயல்பாட்டாளர் விஜய் பாஸ்கர், Vijay Bhaskar, Faculty, Madras Institute of Development Studies  வெங்கடேஷ் ஆத்ரேயா Venketash Athreya, Adjunct Faculty, Asian College of Journalism, Chennai   ஆர். வைகை, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் ஜெபிஜெ.திலக் JBG Tilak, National University of Educational Planning and Administration திமன் சட்டர்ஜி Dhiman Chatterjee, Academic and Member, Sanhati அஜித் மேனன் Ajit Menon, Faculty, Madras Institute of Development Studies  மிலிந்த் பிரம்மே Milind Brahme, Faculty, Indian Institute of Technology – Madras சாலமோன் பெஞ்சமின் Solomon Benjamin, Academic  சக்ரவர்த்தி Chakravarty M, Faculty, Indian Institute of Technology – Madras கார்கடா நாகராஜ் Karkada Nagaraj, Faculty, Asian College of Journalism, Chennai  கல்பனா கருணாகரன் Kalapana Karunakaran, Faculty, Indian Institute of Technology – Madras கருணா டி.டப்ள்யூ, ஆய்வாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் கரேன் கோல்ஹோ Karen Koelho, Faculty, Madras Institute of Development Studies க்ரிபா அனந்த்பூர் Kripa Ananthpur, Faculty, Madras Institute of Development Studies பாஸ்கர், Bhaskar, Member, Communist Propaganda Forum கே பழனி, பொதுச் செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, தமிழ்நாடு பால சுப்ரமணியன், Bala Subramanium, Faculty, MK University.   பிரபாகரன், எழுத்தாளர், அறிஜீவி மற்றும் செயல்பாட்டாளர் Prabakaran, Writer, Scholar and Activist மதுமித தத்தா, ஆய்வாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் Madhumita Dutta, Researcher and Activist   குணால் சங்கர், ஊடகவியலாளர் ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், அறிவுஜீவி, சமூக செயற்பாட்டாளர் ஜி ஆனந்த், பொதுச் செயலாளர், G Anand, General Secretary, GIEA, South Zone சண்முக சுந்தரம், ஆசிரியர், இளைஞர் முழக்கம் வேல் முருகன், மாநில செயலாளர், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் அ குமரேசன், உறுப்பினர், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வி. பரமேஸ்வரன், பொறுப்பாசிரியர், தீக்கதிர் ஜெ. சிதம்பரம், தலைவர், ஜனநாயக வணிகம் சங்கம் மீனா கந்தசாமி, கவிஞர்,புனைவு எழுத்தாளர், மொழி பெயர்ப்பளர், சமூக ஆர்வலர் சவுந்தராஜன் எம்.எல்.ஏ, Soundarajan, MLA and President, Centre of Indian Trade Unions, Tamil Nadu அமிர்தம் லெனின், பேராசிரியர், லயோலா கல்லூரி சித்தார்த்த சிந்தன் பெரியசாமி சந்திரிகா ராதாகிருஷ்ணன், ஆய்வாளர், சமூக ஆர்வலர் சஃப்வான் அமிர், ஆய்வாளர் Safwan Amir, Research Scholar, MIDS தீபா, மாநில குழு உறுப்பினர், இ.ஜ.இ.ச, ஆய்வாளர் Deepa, State Committee Member, DYFI and Research Scholar, MIDS, Chennai சரவணகுமார், மாணவர் Saravana Kumar, Student,  Madras Institute of Development Studies (MIDS) தீபக் ஜான்சன், மாணவர், Deepak Johnson, Student, Indian Institute of Technology – Madras (IIT- M) வெங்கட் Venkat, Research Scholar, MIDS and Activist, Chennai ப்ரீதா Preetha, Research Scholar, MIDS, Chennai ஜகந்த், ஆய்வாளர் Jaganth, Researcher, MIDS மீனாட்சி Meenakshi, Research Scholar, MIDS and Activist மனோஜ், பொறியாளர் ரஸ்மி Rashmi MD, Student, Loyola and Activist அபிஷேக், ஊடகவியலாலர் கணேஷ், பொறியாளர் பெத்தனவேல், மாணவர், இந்திய தொழிற்நுட்ப கழகம் – சென்னை கௌதம், மாணவர் அபராஜய், ஆய்வாளர் Aparajay, Research Scholar, MIDS அருண், ஆய்வாளர் , லயோலா கல்லூரி, சென்னை Arun, Research Scholar, Loyola College, Chennai ஹரி பிரசாத், பொதுத்துறை வங்கி ஊழியர் கிரண், மாணவர் Kiran, Student, JEDI University சூர்யா எஸ், ஆய்வாளர் Suriya S, Research Scholar, MIDS கதிர், உறுப்பினர், இந்திய மாணவர் கழகம் ஸ்ரூதி, உறுப்பினர், இந்திய மாணவர் கழகம் கிஷோர் குமார், உறுப்பினர், இந்திய மாணவர் கழகம் ஜெரோம் சாம்ராஜ் சி, பேராசிரியர், பொருளாதாரத் துறை, பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் மற்றும் பலர் Jerome Samraj C, Faculty, Department of Economics, Pondicherry University. and many others

தமிழில்: மகிழ்நன் (https://maattru.com/author/makizhnan/)

Related Posts