நிகழ்வுகள்

’மாற்று – சமூக இணையம்’ ஒரு புதிய தொடக்கம் …

அன்பார்ந்த நண்பர்களே,

ஆகஸ்ட் 15 முதல் ஒரு புதிய இணையதளம் தொடங்குகிறோம். தமிழில் சமூக வலைத்தள வசதிகளை உள்ளடக்கிய முதல் இணையமாக இது அமைந்திருக்கும்.

டுவிட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் – போல அல்லாமல், ’மாற்று’ மேலும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

  1. இந்தத் தளம் ‘கட்டற்ற மென்பொருள்’ கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
  2. இணையத்தில் நமது அந்தரங்கத்திற்கு பாதுகாப்பில்லை என்பதால், மிக அவசியமான தகவல்களை தவிர மற்ற தகவல்களை நாங்கள் கேட்பதில்லை.
  3. அவசியமான விவாதங்களுக்கான களமாகவே இதனை அமைத்துக் கொண்டுள்ளோம். இந்தத் தளத்தில் எவரும், தங்களின் சொந்த படைப்பையோ, தங்கள் நண்பர்களின் பதிவுகளையோ பெற்று சமர்ப்பிக்கலாம்.
  4. மாற்று, சிந்தனைகளுக்கான விவாதக் களத்தை சீர்ப்படுத்தும் ஒரு ஆசிரியர் குழு அமைந்துள்ளது. விக்கிபீடியா போலவே, பங்களிப்பைப் பொறுத்து, இதன் உறுப்பினர்கள் ஆசிரியர்களாக தரம் உயர்த்தப்படுவார்கள்.
  5. இணையதள ஊடகத்தின் சுதந்திரத்தையும், தனிப் பயனர்களின் அந்தரங்கத்தையும் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலும், பரப்புவதிலும், பயிற்சியளிப்பதிலும் மாற்று இணையதளம் தனது எதிர்கால கடமைகளாக வரித்துக் கொண்டுள்ளது.
  6. மாற்றுவில் எழுதப்படும் கட்டுரைகள், வெளியிடப்படும் படங்கள் ‘கிரியேட்டிவ் காமன்’ உரிமத்துடன் இருக்கும். அந்த உரிமத்தின் அடிப்படையில், எங்கள் உள்ளடக்கத்தை யாரும் எடுத்து பயன்படுத்தலாம்.
  7. நோக்கமில்லாமல் எதையும் பேசுவது அல்ல. சமூகத்தின் ஊனங்களை அனைவரின் பார்வைக்கு கொண்டுவருவது. வரவேற்கத் தகுந்த மாற்றங்களை பாராட்டுவது. சிறந்த மாற்றுச் சிந்தனைகளை முன்வைப்பது என்பதின் அடிப்படையிலான கட்டுரைகளை வரவேற்கிறோம்.

மாற்றுவில் இணைய – பதிவு செய்க

மாற்று – கருத்துகளை தொடர்ந்து வாசிக்க … (Subscribe)

 

 

Related Posts