பிற

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்!

கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் நவம்பர் 29, 1908 (1908-1957) பிறந்த நாள் இன்று.

வாழ்க்கை வரலாறு‍

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அவரது‍ வாழ்க்கை தொடங்கியது. பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக கலையுலக வாழ்வை துவக்கினார்.

திரைப்படத்துறை

என். எஸ். கிருஷ்ணன் & டி. ஏ. மதுரம் (பைத்தியக்காரன் 1947)

சொந்தமாக நாடகக் கம்பெனியும் நடத்தினார். தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்.

இவர் அறிமுகமான முதல் திரைப்படம் 1936 இல் வெளிவந்த சதிலீலாவதி. சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும் படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல். நகைச்சுவை மூலம் கருத்துக்களை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்துள்ளார்.

அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு‍ எடுத்துக் கூறியவர். 1957 ஆம் ஆண்டு‍ ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது‍ 49 ஆவது‍ வயதில் கலைவாணர் மறைந்தார்.

கொலைக் குற்றச்சாட்டு

பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

பிரபலமான திரைப்படங்கள்

  1. அம்பிகாபதி
  2. மதுரைவீரன்
  3. நல்லதம்பி

இயக்கிய படங்கள்

  1. பணம்
  2. மணமகள்

மறைவு

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மறைந்தார்.

Source: Wiki

Related Posts