அறிவியல் நிகழ்வுகள்

தமிழில் ’மொசில்லா உலாவி’, கூட்டு உழைப்பின் மகத்துவம் …

logoமொசில்லா உலாவி தமிழில் தன்மொழியாக்கம் செய்யப்பட்டு‍ சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் நோக்கங்கள், பயன்பாடுகள் மற்று‍ம் அதை செயல் வடிவில் கொணர்ந்த நடைமுறைகள் பற்றி தெரிந்து‍ கொள்வது‍ அவசியம்.

உலாவி என்பது ஒரு கணினி மென்பொருள். இது‍ நாம் அனைவரும் அறிந்ததே. இன்று‍ ஏகபோகம், உற்பத்தியின் மூலம் கிடைக்கும் அதீத லபாம், உற்பத்தியின் சந்தை இவைகளைக் கணக்கில் கொண்டு‍ தான் இன்றைய உலக சந்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சொத்து‍ அது‍ அறிவுசார் சொத்தாக இருந்தாலும் சரி வேறெதுவாக இருந்தாலும் சரி அதை சொந்தம் கொண்டாடி‍, ஒரு சிலரின் ஏகபோக சொத்தாக மாற்றுவதே இன்றைய பெரு‍நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது‍.

இப்படிப்பட்ட ஒரு‍ சூழலில், சமூக அக்கறையுடன், தன்னார்வத்துடன் ஆங்கில மொழியிலுள்ள கணினி அறிவை தமிழில் கொண்டு‍வர வேண்டும் என்ற நோக்கில் மொசில்லா உலாவியை தமிழில் மொழிபெயர்‌த்துள்ளனர்.

மொசில்லா குழுமம்

மொசில்லா குழுமத்தில் தமிழ் குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு‍ இளைஞர்கள் சேர்ந்து‍ தன்னார்வத்துடன் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த குழுமம் தன்னார்வலர்களைக் கொண்டு‍ கட்டற்ற மென்பொருள் தத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டு‍ செயல்படுகிறது.

இந்த குழுமம் மனித சமுதாயத்திற்கு‍ உலக அளவில் பெரும் பங்களிப்பை செய்து‍ கொண்டிருக்கிறது. உலகிலுள்ள அனைத்து‍ மொழி பேசும் மக்களுக்கும் தகவல் தொழிநுட்பங்களின் பயனை அடைய வேண்டுமென்ற நோக்கில் அந்தந்த மொழிகளிலுள்ள தன்னார்வலர்களை இணைத்து‍ இந்தப் பணியை மேற்கொள்கிறது.

சில தனியார் நிறுவனங்களும் இதைப்போன்றே மொழியாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவை அந்த தனிநபர்களுக்கு‍ மட்டுமே பயன்தருவதாக அமையும்.

மொசில்லா பயர்பாக்ஸ் உலாவி

மொசில்லா பயர்பாக்ஸ் உலாவி கட்டற்ற, திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும். தற்போது வெளியாகியிருக்கும் அதன் 23 ஆவது பதிப்பில் 79 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இது நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு‍ம், தொடர்ந்து‍ மேப்படுத்தப்பட்டுக் கொண்டும் வருகிறது.

சமூகம் மற்றும் தனிநபர்களின் பங்கு

இதுபோன்ற தன்னார்வலர்களைக் கொண்டு‍ உருவாக்கப்படும் பொதுமை மென்பொருட்களுக்கு‍ அங்கீகரித்து, அவர்களோடு இணைந்து உழைக்க நாம் முன்வர வேண்டும். நம்மைப் போன்ற அனைவரும் இணைந்து சரியான பங்களிப்பை செய்தால் இந்த‍ இடர்பாட்டை சரிசெய்து‍ கூடுதலான பணிகளை மேற்கொள்ள முடியும்.

நாம் பங்களிப்பு செய்வது‍ ஒருபுறமிருந்தாலும் இதுபோன்ற பொதுமை மென்பொருட்களை உபயோகிப்பது‍ம் அவசியம். இன்றைய பல அரசாங்கங்கள்  தனியுடைமை மென்பொருட்களுக்கு‍ ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

செப்டம்பர், 2012-லிருந்து‍ ஜுலை, 2013 வரை எந்தெந்த இணைய உலாவி எவ்வளவு நபர்களால் பயன்படுத்தப்படுகிறது‍ என்ற விபரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Month

Internet Explorer

Chrome

Firefox

Safari

Android Browser

Other

September, 2012

48.53%

17.11%

18.15%

10.73%

1.96%

3.52%

October, 2012

48.31%

16.61%

17.81%

11.02%

2.75%

3.51%

November, 2012

48.02%

15.22%

17.88%

12.16%

3.18%

3.53%

December, 2012

49.12%

16.29%

17.73%

10.84%

2.24%

3.78%

January, 2013

48.54%

15.58%

17.50%

11.79%

2.53%

4.06%

February, 2013

48.31%

14.27%

17.34%

11.96%

3.01%

5.11%

March, 2013

49.12%

14.69%

17.70%

12.06%

2.62%

3.80%

April, 2013

49.61%

14.78%

17.98%

11.27%

2.51%

3.85%

May, 2013

49.65%

14.28%

18.22%

11.51%

2.31%

4.03%

June, 2013

49.67%

15.56%

16.85%

11.51%

2.35%

4.06%

July, 2013

49.46%

16.02%

15.91%

12.02%

2.56%

4.03%

மொசில்லா தமிழ் உலாவி வெளியீட்டு விழா

மொழியாக்கம் மற்றும் இதுபோன்று சமூக அக்கறையுடன் கூடிய செயல்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், இதுபோன்ற செயல்ளை ஊக்கப்படுத்தும் விதமாக,  இதை அனைத்துப் பகுதி மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளது.

இடப்புறம் மொசில்லா தமிழ் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் பிரகாஷ்.  இல.சுந்தரம் தமிழ் பேராசிரியர் வெளியிட, பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார்கள்.

நாம் தெருவோரம் பார்க்கும் ஒரு எதார்த்தமான ஒரு விசயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். என்னவெனில், தெருமுனையில் ஆடம்பரமான  மிகுந்த செலவில் பல அடி உயரங்களில் யாரையோ பார்த்து கை நீட்டுவது போன்றும் சாதனையாளரே, அவரே, இவரே என்ற வெற்றுப் புகழாரவாரங்களுடன் கூடிய தட்டிகளை பார்த்திருப்போம். ஆனால்,  நடைபெற்ற மொசில்லா வெளியீட்டு விழாவில்  இதைப்போன்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் நடந்திருப்பது உண்மையான சமூக அக்கறையைக் வெளிக்காட்டுவதாக தெரிகிறது.

இதுபோன்ற செயல்களை நாமும் அங்கீகரித்து ஒட்டமொத்த சமூகத்திற்கும் தேவையான மென்பொருட்ளை உருவாக்க முயற்சிப்போம். மொசில்லா தன்மொழியாக்கக் குழுவில் இணைந்து‍ யார் வேண்டுமானாலும் உதவ முடியும்..

இக்குழுவில் இணைய: http://mozilla.locamotion.org/

கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கி அனைத்து‍ மொழிகளிலும் உள்ள மொசில்லா உலாவியைத் தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://www.mozilla.org/en-US/firefox/all/

Related Posts