தமிழ் சினிமா

கார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..!

இந்தாண்டு தீபாவளிக்கு வெளியான படங்களில் ‘மூக்குத்தி அம்மன் ‘ ஏனோதானோவென பார்க்கத் துவங்கி மெல்ல மெல்ல உள்ளிழுத்தது.

கணவனால் கைவிடப்பட்ட மனைவி நான்கு குழந்தைகளின் தாய் வாழ்வுடன் மல்லுகட்டி குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் குடும்பத்தை கைவிட்ட கணவன் ஒரு ஆடம்பர சாமியாருடன் சுற்றித் திரிகிறான்தனது ஊரில் அந்த சாமியார் டேரா போட்ட போது தந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மகன் முயல்கிறான்சாமியார் அடியாட்களை ஏவி அவனை விரட்டுகிறார்.

போலிச் சாமியார் என வெளியுலகில் அவர் அம்பலமானதும் கணவன் மனைவியிடம் தஞ்சமடைய வருகிறான்ஆனால் மனைவி இனி நீ எனக்கு தேவை இல்லை என அவனை விரட்டி விட்டு நிமிர்ந்து நடக்கிறாள்எனச் சொன்னா கதை முடிந்தது ஆனால் இக்கதையின் ஊடே படம் சொல்ல வருகிற விசயம் தான் இக் கட்டுரையின் அடித்தளம் !

திருப்பதிக்கு செல்ல வேண்டும் என இக்குடும்பம் பல முறை முயற்சி செய்கிறதுஒவ்வொரு முறையும் ஒரு தடங்கல் உருவாகிறதுஇறுதியான ஒரு முயற்சியின் போது குடும்பம் அவசர செலவிற்கு ஆகும் என அங்கங்கு ஒளித்து வைத்த சேமிப்பு பணத்தையும் இழந்து விடுகிறது.

குலதெய்வக் கோவில் செல்லாமல் திருப்பதிக்கு செல்ல நினைப்பதால் தான் தடைபடுகிறதுஎனவே அங்கு சென்று வா உன் எண்ணம் நிறைவேறும் என்கிறார் உறவினரான ஒரு கிழவி இதை சொல்லும் போதே பெண்ணுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் பொருந்தாதுகணவனின் குலதெய்வம் தான் பெண்ணுக்கு சொந்தம் என்று சமூகத்தில் உள்ள ஆண் மையக் கருத்தும் மிக இயல்பாய் வெளிப்படுகிறது.

கணவனின் குலதெய்வமான மூக்குத்தி அம்மன் கோவிலில் ஒரு இரவு தங்க வேண்டும் எனும் ஐதீகப்படி மூத்த மகன் தங்குகிறான்அம்மன் நேரில் காட்சி தருகிறாள்அவனால் நம்ப முடியவில்லைதன்னை அவன் நம்ப வேண்டும் என்பதற்காக அவன் நினைப்பதை எல்லாம் தருகிறாள் அம்மன்உண்மையில் கடவுள் காட்சி தந்ததை அவன் நம்பியதும் அனைத்தும் மறைந்து விடுகின்றன.

இதன் மூலம் பெருந் தெய்வங்களை விட குல தெய்வங்கள் தான் மக்களுக்கு நெருக்கமானவை என்பதையும்மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லை என்பதையும் படம் நமக்கு காட்டுகிறதுஅம்மன் வெளிப் படுத்திய ஆசை கலந்த ஆதங்கத்தின் வழியே பிரபலம் எனும் சொல்லின் அடையாளம் காசுபணம்வசதி மற்றும் விளம்பரத்துடன் தொடர்புடையது என்பதை அழகாய் காட்டுகிறது.

குறிப்பாக எழுபதுகளில் வந்த இன்றும் அடிக்கடி ஒளிபரப்பப்படும் பல பக்திப் படங்களின் பெயர்களை நினைவு கூர்ந்தால் திருப்பதிபழனியைப் போன்ற பிரபலமாக உள்ள பல புனித தலங்களின்அவற்றின் ஆடம்பர அம்சங்களின் உண்மைகளை பளிச்சிடச் செய்யும்.

இதேபோல மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த போது அடி உதை என குடும்பத்தை நரகமாக்கிய கணவன் பிறகு குடும்பம் நடத்த வக்கின்றி சாமியாருடன் சென்று தனது வயிற்றுப் பாட்டை மட்டும் கவனித்துக் கொள்கிறான்.

பூவும் பொட்டும் படம் முதல் பார்த்தால் பசி தீரும் படம் வரை பல பழைய படங்களில் வீட்டை விட்டுப் போன கணவனின் செயலைமனைவியின் வாய்ச்சொல் மூலமே நியாயப் படுத்தி வந்துள்ளார்கள்ஆனால் இப் படத்தில் அது மாறுபடுகிறது.

தன் வலி மறைத்து குழந்தைகளை வளர்த்த தாய்தன் நிலை குறித்து மகன் எனும் ஆணுக்கு உணர்த்துவதும்மகள்களின் திருமண சமயத்தில் தந்தை எனும் நபர் அவசியம் என மருகிக் கொண்டிருந்த மனைவி தன்னால் குழந்தைகளின் துணையுடன் எதையும் சாதிக்க இயலும் என நம்பிக்கை உருவானதும் கணவனை ஏற்க மறுத்து புறந்தள்ளுவதும் இக்காலத்திய வாழ்நிலைக்கு ஏற்ப நேர்மறை சிந்தனையை அடையாளப் படுத்துகிறது.

அம்மன் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் சாமியார் பகவதி பாபா அருமையான படைப்பாய் மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. ஏனெனில் அதன் மூலம் நித்யானந்தா, சத்குரு ஜக்கி வாசுதேவ், யோகி ராம்தேவ், ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி இன்னும் பல மதங்களில் உருவாகியுள்ள கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரையும் பெயர் சொல்லாமல் அம்பலப்படுத்துகிறது. அன்றாட நடப்புகளை கவனிக்கும் சினிமா ரசிகர்களால் இவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

காட்சியமைப்புகள் சுய சிந்தனையைத் தூண்டும் விதமாய் உள்ளன குறிப்பாக டிவி பேட்டி எனும் வகையில் சாமியார்களின் சொற்கள் பலன் தரும் என நம்புவதற்கான உத்தரவாதம் என்ன உள்ளது எனமக்களை குறிப்பாக இளைஞர்களை சிந்திக்கச் சொல்கிறது.

சாமியார் மடம் தனது கிளைகளை உலக நாடுகள் முழுமையும் உருவாக்கி அதன் மூலம் பணம் படைத்தவர்களின் நிதியை கணக்கு வழக்கின்றி பத்திரப் படுத்தும் ஏற்பாடு நடப்பதை வெளிப்படுத்துகிறது.

அத்துடன் இவையனைத்தையும் நாத்திகர்கள் மூலம் அல்லது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் மூலம் சொல்லாமல் தங்கள் துயர் தீர்க்கும் என மக்கள் நம்புகின்ற கடவுளைக் கொண்டே சொல்லும் நடை மிக அழகுஆனால் இதன் காரணமாகவே பெருந் தெய்வங்கள் மற்றும் போலிச் சாமியார்கள் கோடீஸ்வரக் கூட்டமாகவும்அதிகாரமும் செல்வாக்கும் பெறவும் ஆட்சியில் உள்ள கட்சிகளின் உறுதுணையான நடவடிக்கைகள் குறித்து சொல்லாமல் விடுகிறது !

இப்படத்தின் பலமும் பலவீனமும் இடைவிடாத வசனங்களே!

முழு படத்தையும் நகைச்சுவை மூலம் நகர்த்தியிருப்பது சொல்ல வந்த கருத்துகளுக்கு வலிமை சேர்க்கிறது ஊர்வசிநயன் தாராபாலாஜிபோலிச் சாமியார் வேடம் தரித்த நடிகர் என அனைவரும் அவரவர் தன்மையில் அழகாய் நடித்துள்ளனர் !

சுருக்கமாய்க் கூறினால் இப்படம் குலதெய்வ வழிபாட்டை பெருந் தெய்வ வழிபாடும்இறைபக்தியை கார்ப்பரேட் சாமியார்களும் முழுங்கிய நாட்டின் நிலைமையை அழகாய் அம்பலப்படுத்துகிறது ஒரு பெண்ணின் துன்பம் எதுவானாலும் தனிப்பட்ட குடும்பம் மட்டுமே பொறுப்பேற்று அதை சரி செய்ய வேண்டிய சமூக சூழலை ஒரே காட்சியில் ஊர்வசியின் சொற்கள் மூலம் அழகாய் விளக்குகிறது சமூகத்தின் ஒரு அங்கமே குடும்பம் எனவே குடும்பங்கள் ஒன்றுக்கு ஒன்று என கைகொடுத்தல் வேண்டும் தனிமனித பலம் அதிகரிக்க இது உதவும் எனும் கருத்து மனதில் பதிந்தால் அது இந்தக் காட்சியின் வெற்றி !

அதே சமயம் சமூக உற்பத்தியில் மிக முக்கியமான பங்கை செலுத்தி உதவும் குடும்ப நிறுவனத்தைக் காப்பதில் அரசுக்கு தேவையும் கடமையும் உள்ளதுகுறிப்பாக மக்களாட்சி என்பதன் வேர் தனி மனித உரிமை எனில் கணவன் மனைவி எனும் இரு அடிப்படை அலகுகள் கொண்ட குடும்பத்தில் பெண் உரிமையைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவதும் காலத்தின் தேவை !

கடவுளை நம்பினாலும்தன்னம்பிக்கையும் முயற்சியும் நமக்கு மிக அவசியம்அவைகளை இறுகப் பிடியுங்கள் நம்மைப் போல் உள்ள ’நானே கடவுள் ‘ என கூறிக் கொள்ளும் சாமியார்களை நம்பிச் செல்லாதீர்கள் என அழுத்தமாய் எச்சரிப்பதுடன்காட்டு விலங்குகள் அழிப்புபோலி மருந்து விற்பனைஇயற்கை வளங்களும் நிலங்களும் ஆக்கிரமிப்பு என பல்வகை தீமைகளை செய்யும் தீயமனிதர்கள் இவர்கள் என்பதையும் தெளிவாய்க் கூறுகிறது !

இது போன்ற படங்களை வரவேற்பதன் மூலமே மக்களின் சினிமாக்களை நாம் காண இயலும் ! இப்படக் குழுவினரை வாழ்த்துவோம் ! 

  • செம்மலர்.

Related Posts