அரசியல்

காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை!

Studio/31.10.49,A22b Sardar Vallabhbhai Patel photograph on October 31, 1949, his 74th birthday.

என்ன வெச்சி, உங்க வெளயாட்ட தொடங்கிட்டீங்களாடா? என்றபடி பார்க்கும் படேல் …

நேற்றைய (31.10.2013) மாலை மலர் நாளிதழில் கிடைத்த பல தகவல்கள் சுவராசியமானதாக இருந்ததால், மாற்று வாசகர்களுக்கு இங்கே தொகுத்து தறப்படுகிறது.

செய்தி:
சர்தார் வல்லபாய் படேலின் 138வது பிறந்த தின விழாவை தற்போது குஜராத் மாநில அரசு கொண்டாடி வருகிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு குஜராத்தில் மிக பிரமாண்டமான சிலை அமைக்க குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முடிவு செய்தார். குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் சர்வோர் அணைக்கட்டுக்கு மிக அருகில் உள்ள சாதுபேட் தீவில் அந்த சிலை கட்டப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையிலும் இந்த சிலை உருவாக உள்ளது.

படேலின் சிலை மொத்தம் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த சிலை செய்ய ரூ.2074 கோடி செலவிட திட்டமிட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைதான் 152 அடி உயரத்துடன் முதலிடத்தில் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலை அதை விட 2 மடங்கு உயரம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிலை என்ற சாதனையை வல்லபாய் படேல் சிலை பெறும். படேல் சிலைக்கான அடிக்கல்நாட்டு விழா இன்று (வியாழன்) மதியம் சாதுபேட் தீவில் நடந்தது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நரேந்திர மோடியை மிகவும் புகழ்ந்து பேசினார்.

பின்னூட்டங்கள்:

1. இதே குஜராத் குழந்தைகள் இறப்பு விகிததில் இந்தியாவில் மிகவும் பின்தங்கி யுள்ளது அதற்கு எல்லாம் இந்த பணத்தை செலவு செய்து குழந்தைகள் இறப்பை தடுக்கலாம் … சிலை வைப்பதால் காக்கைகு தான் சந்தோசம் ..மனிதற்கு அல்ல …

இவர் பிரதமர் ஆனால் இந்திய எப்படி விளங்கும்?

2. போற போக்கே பார்த்த கேடிக்கு சாரி மோடிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது போல இருக்கே , பட்னாவில் தமக்கு தாமே பாம் வைக்கும் திட்டத்தை வெகு நன்றாக அரங்கேற்றினார் அல்லவா மோடி என்றால் சும்மாவா

3. குஜராத் வளர்ச்சிக்காக 1 லக்ஷம் கோடி சுவிசர்லாந்து வங்கியில் டெபொசிட் செய்து வைத்து உள்ளார் . இவர் இதுவும் செய்வார் இதுக்கு மேலயும் செய்வார் . வாழ்க மோடி வளர்க பாரதம் . ஜெய் ஹிந்த்

4. நீங்க அவர் ஆடிட்டரா? .. அவர் ஸ்விச்ஸ் வங்கியில் வக்க அது அவரோட சொந்தபணமா?

5. காந்திக்கு வைத்தாலும் ஓகே,

6. இந்த ஆளு பிரதமரா வந்தால் நாடு விளங்கும்! எவன் அப்பன்வீட்டு காசு ? எண்டா அயோக்கியப்பயளுங்களா, செத்தவனுக்கு என்னாத்துக்குடா 2000 கோடி செலவு பண்ணி சிலை வக்கிறீங்க. அதுல நீங்க எவ்வளவு அமுக்க போறீங்க? அந்த காசை பட்டினி சாவை நோக்கி செல்கிறவர்களுக்கு வளங்களினால் அது புன்னியமாகுமே.

7. இந்த ஒரு உதாரணம் போதாதா இந்த ஆளுடைய நிர்வாக சீர் கேட்டை விளக்க. இவன் அப்பன் வீடு பணமா ? மக்களின் வரியை வீண் விரயம் செய்யவா அல்லது அதில் அமுக்கவா.. எல்லாம் திருட்டு கூட்டம் தான்.

8. உயிரோடிருக்கும் ஏழைகளுக்கு கல்வி , உணவு , உடை என நீ திட்டம் போட்டிருந்தால் நாடு பாராட்டும். இப்போ நீயும் வேஸ்ட்.

9. அரசியல் தலைவருக்கு சிலைவைத்து நாட்டின் பொருளாதாரத்தை வீணாக்க கூடாது. அப்படி சிலை வைப்பது என்றால் முதலில் காந்திக்கு அல்லவா வைத்திருக்கவேண்டும். தேச தந்தை காந்தியை விட ஆர்.எஸ்.எஸ் அபிமானி பட்டேல் தான் மிக சிறந்தவர் என்று மோடி பிரசாரத்தின் மூலம் மாக்களிடம் திணிக்க பார்கிறார்.

இப்ப எமலோக கதை…
குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களில் பேசும் போது தொடர்ந்து பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி வருவதாக குறைகூறும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், தனது கூற்றுக்கு உவமையாக ‘டுவிட்டர்’ மூலம் ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
‘பூமியில் வாழ்ந்த ஒரு மனிதன் இறந்து விடுகிறான். சொர்க்கத்தை சென்றடைந்த அவன் சுவர் முழுவதும் கடிகாரங்களாக மாட்டியிருப்பதை பார்த்து, ‘இவை எதற்காக?’ என்று அங்குள்ள தேவதையிடம் கேட்டான். இவை எல்லாம் பொய்யை அளக்கும் கடிகாரங்கள். பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொர்க்கத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு முறை அவர்கள் பூமியில் பொய் சொல்லும் போதும் இந்த கடிகார முள் நகரும் என்று தேவதை பதில் அளித்தது.

ஓடாமல் நின்றிருந்த ஒரு கடிகாரத்தை சுட்டிக் காட்டிய அந்த பூலோகவாசி, ‘இந்த கடிகாரம் கொஞ்சம் கூட நகர்ந்ததாக தெரியவில்லையே.. இது யாருடையது?’ என்று கேட்டான். பதிலளித்த தேவதை, ‘ஓ.. இதுவா? இது சுவாமி விவேகனந்தருடைய கடிகாரம். அவர் ஒரு முறை கூட பொய்யே பேசாததால் இதன் முட்கள் நகராமல் உள்ளன’ என்றது.

ஆவலை அடக்கிக் கொள்ள முடியாத பூலோக வாசி ‘அப்படியானால் நரேந்திர மோடியின் கடிகாரம் எங்கே?’ என்று அவசரமாக கேட்டான். ‘அது எங்கள் அலுவலகத்தில் உள்ளது. அதைதான் நாங்கள் மேஜை விசிறியாக பயன்படுத்துகிறோம்’ என்று தேவதை பதில் அளித்தது’

நன்றி : மாலைமலர்

டாடி எனக்கு ஒரு டவுட்டு …

மன்மோகன் சிங் கடிகாரம் எங்கே?

“நாம் சந்தேகத்துடன் தேடியபோதுதான் அந்த உண்மை தெரிந்தது. அவரது கடிகாரத்தை வைத்துதான் தேவலோகத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.”

Related Posts