பிற

பல அலைகளும், ஊடக சுனாமியும்…

– பி.சாய்நாத்
(ஆங்கிலக் கட்டுரை)

– தமிழில்: இரா.சிந்தன்

அங்கே அலை இருந்தது. ஒன்றை விட அதிகமாக…

மத்தியில் இருந்த காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வு மாற்ற அலை. பத்தாண்டு காலங்களில் மிக அதிகமான அளவில் விலைவாசியை அதிகமான உயர்த்திய ஐந்தாண்டுக்கு எதிராக கோபத்தின் பேரலை கூட இருந்தது. இந்த அலையில்தான் மோடியின் தலைமையிலான பாஜகசரியாக பொருத்தப்பட்டு அலைச்சருக்கு மூலம் மிகப்பெரும் வெற்றியைப் இழுத்துவந்தது.

எப்படியிருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விதங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசுக்கு எதிராக, ஒவொரு மாநிலத்திலும் நின்ற சரியான எதிர் சக்திக்கு பலன் கிட்டியது. மேற்கு இந்தியாவில் இந்தி பேசும் பகுதிகளில் அந்த சக்தி பாஜகவாக இருந்தது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், தமிழகத்தில் அஇஅதிமுகவும் பலனடைந்தன. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் பலனடைந்தன. எனவே, தேசிய அளவில் ஒரு அலை வீசியதென்றால் அது காங்கிரஸ் எதிர்ப்பு அலைதான். ஆனால் அடிமட்டத்தில் மேலும் சில அலைகள் இருந்தன.

2014 தேர்தல் பல முக்கியமானவைகளை உள்ளடக்கியது, அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறேன்:

காங்கிரஸ் கட்சியின் சீர்குலைவு:

காங்கிரஸ் தனது மிக மோசமான கொள்கைகளுக்காகவும், அந்த கொள்கைகளைத் தொடர்ந்து விளைந்த பெரும் ஊழலுக்காகவும் வசவுக்கு உள்ளானது. அந்தக் கொள்கை வரையறைகளை புதிய அரசாங்கம் பெரிதாக மாற்றப்போவதில்லை மேலும் சில துறைகளில் கூடுதல் வேகத்துடன் கூடுதலான இறக்கமற்ற வழிகளில் அமலாக்கும். புதிய தாராளவாத வரையறைகளோ அல்லது முடிவற்ற கார்பரேட் ‘கரசேவகமோ’ மாறப்போவதில்லை.

சிந்தனையற்றவகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் காரணமாகத்தான் ராடியா, 2 ஜி, கே.ஜி, கோல்கேட் உள்ளிட்ட ஊழல்கள் பெருக்கெடுத்து, யுபிஏ அரசை முடக்கியது. நீதித்துறை தலையீடுகளால், தொழிலகங்களுக்கான ‘ஒப்புதல்கள்’ தாமதமாகின. ஆதார வளங்களை எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட ‘ஐகான்கள்’ மீது கார்பரேட் துறையினர் கோபம் குவியவும், மோடி மேல் அவர்கள் ‘டிரேட்’ செய்யவும் வழிவகுத்தது. இப்போது, இனி ‘ஒப்புதல்கள்’ வேகமடைவதைப் பார்க்கலாம்.

ப.சிதம்பரம் அதனை கசப்பாக உணர்ந்தார். அதன் பிறகும் அவர் அவர்களுக்காக நிரம்பச் செய்து கொடுத்தார். ‘இந்த நாட்டின் மிகவும் நிலையற்ற தொகுதி ‘பிசினஸ்’ தான்’ என சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 13 ஆம் தேதி கொடுத்த நேர்காணலில் செய்தியாளர் பல்லவி கோசிடம் அவர் தெரிவித்தார், தேர்தல் அப்போது கிட்டத்தட்ட பாதி முடிந்திருந்தது. சிதம்பரம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையை முன்னரே உணர்ந்துவிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரின் மகன் கார்த்தி, தமிழ்நாட்டில் ப.சிதம்பரத்தின் பழைய சிவகங்கை தொகுதியில் தொகுதியில் ஓடி, 4 ஆம் இடத்தில் வந்தார்.

காங்கிரசின் யுபிஏ தங்களை பெரு நிறுவனங்களின் வசதிக்கு ஏற்றவகையில் செயல்படுமாறும், அவசியமான கொள்கை வற்புறுருத்தல்களை மேற்கொள்ளும் வகையிலும் அமைத்துக் கொண்டது. அவற்றின் காரணமாக அது மூழ்கத் தொடங்கியபோது, சொத்து மிகுந்த கார்பரேட் நிறுவனங்களும், அவற்றின் முதலீடுகளைக் கொண்ட ஊடகங்களாலும் வேகம் போதவில்லை என்ற வசவுக்கும் ஆளானது.

இந்தத் தேர்தல், இந்திய கார்பரேட் துறையின் வலிமையையும் உணர்த்தியது.

தன்னளவில், காங்கிரஸ் ஆந்திராவிலும், மஹாராஷ்ட்ராவிலும் எரிந்துகொண்டிருந்தபோதும், கடுமையாக உழைத்தது. அந்த இரண்டு மாநிலங்கள், காங்கிரஸ் தற்போது கொண்டிருக்கும் எம்பி எண்ணிக்கையை விட அதிகமான மக்களவை உறுப்பினர்களைக் கொடுத்திருந்தன. அந்த 2 மாநிலங்களிலும் வெளியிலிருந்து அமர்த்தப்பட்ட முதலமைச்சர்கள் மோசமான பெயர் எடுத்துக் கொடுத்தனர். மற்ற மாநிலங்களிலும் அது தன்னை உடைத்துக் கொண்டது.

இந்தியாவின் மிக அதிக செலவுபிடித்த தேர்தல்:

2009 ஆம் ஆண்டு தேர்தல்களில் மிரட்டிய பணத்தை விட அலை அலையான செலவுகள் இருந்தன. அதன் பெரும்பகுதி சட்டரீதியான வரையறை இல்லாத கட்சி செலவினங்களில் காட்டப்பட்டன. பெரும் செலவு செய்தவர்கள் இதில் தப்பித்தனர். தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஊர்வலங்கள், ஹெலிகாப்டர்கள், திட்டமிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த தீவிரமான மதிப்பீடுகள் யாரிடமும் இல்லை. (வாக்குக்கு கொடுக்கப்பட்ட பணம் இதில் சேர்க்கப்படவில்லை). ஆனால், பாஜகதான் அதிகம் செலவு செய்தது என்பதை நாம் அறிவோம்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு குறிப்பிடுவது என்னவென்றால், 2014 ஆம் ஆண்டில் “82 சதவீதம் வெற்றியாளர்கள் கோடீஸ்வரர்கள்” மேலும் ஏடிஆர் அமைப்பு கோடீஸ்வர வேட்பாளரின் வெற்றி வீதத்தை கணக்கிட்டது அது கோடிகளில் சொத்து இல்லாத வேட்பாளரை விட 10 மடங்கு அதிகம் என்று அவர்கள் கண்டனர். மிகப் பொருத்தமான வகையில் நாம் 442 கோடீஸ்வரர்களைக் கொண்ட மக்களவையைப் பெற்றிருக்கிறோம். 82 சதவீதம் புதிய மக்களவை உறுப்பினர்களிடம் 10 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளது. 2009 ஆம் ஆண்டை விட இது 58 சதவீதம் அதிகம்.

2014 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வெற்றியாளரின் சராசரி சொத்து மதிப்பு 14.61 கோடி. 2009 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களின் சராசரி சொத்து மதிப்பான 5.35 கோடியை விட அது 173 சதவீதம் அதிகம். சராசரி குடிமகன்கள் இந்த விலையாட்டில் விலையில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டனர். அவர்களால் போட்டியிடுவது குறித்து நினைத்துப்பார்க்க முடியுமா?

புதிய தாராளவாதக் கொள்கைகளில் 20 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவின் மிகக் கடுமையான ஏற்றதாழ்வுகளைப் படைத்துள்ளன. நாம், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இடம்பெற்ற 56 டாலர் கோடீஸ்வரர்களையும், ‘அதிகாரப்பூர்வமாக’ 50 சென்ட்டுக்கும் குறைவான தொகையில் வாழும் கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்களையும் பெற்றுள்ளோம். தேர்தல்களில் அதுபோன்ற ஏற்றதாழ்வுகளுக்கு இடமில்லை, மிகப் பணக்காரர்களுக்கு மட்டுமே இடமிருக்கிறது. யூகிக்கும் விதத்தில், கார்பரேட் உலகத்தின் அதிகார செல்வாக்கு முன்பிருந்ததை விட மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

கார்பரேட் ஊடகம் தனியொரு கட்சிக்காகவும், தனி நபருக்காகவும் பெருமளவில் சாதகமாக இருந்தது:

அதிகம்பேரைச் சென்றடையும் வகையில், மிகைப் புகழ்ச்சி, சிலரின் நன்மைகளுக்காக, எப்போதாவது செய்யப்படும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்த தேர்தல் பிரச்சாரத்தை, பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஊடகங்கள் முன்னெடுத்ததற்கான விலையை எல்லோருமே செலுத்தியாக வெண்டும். பாஜக தன்னை ஒரு தனி நபருக்கு துணையாக மாற்றிக் கொண்டது என்று சொல்வதும் தவறில்லை.

நரேந்திர மோடியைச் சுற்றி ஒரு வழிபடுதலைக் கட்டமைத்தது பிரச்சாரத்தின் வெற்றி. நாம் ஊடகங்களால் சூழப்பட்ட வாக்காளர்களாக இருந்ததால், இது வேலைசெய்தது. 20 ஆண்டுகளுக்கு முன் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் எட்ட முடியாத பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கூட, 2014 ஆம் ஆண்டின் ஊடக அலையால் இழுத்துவரப்பட்டனர்.

எப்போதும் இல்லாத வகையில் கார்பரேட் மயமாக்கப்பட்ட ஊடகம் இருந்தது. அத்வானி தனது குளிரூட்டப்பட்ட ரதத்தில் பயணம் செய்தபோது, ஊடகத்தின் இந்த செயல்முறை மிகவும் தொடக்க நிலையில் இருந்தது. 2014 ஆம் ஆண்டில், ஊடக நிறுவனங்களில் தங்கள் பங்குகளைக் கொண்டுள்ள சில மிகப்பெரும் கார்பரேட் நிறுவனங்கள் மோடியின் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான ‘அணுக்களை’ உருவாக்கின.

புதுதில்லியின் ஊடக கல்விக்கான மையத்தின் சிஎம்எஸ் – ஊடக ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஒரு விசயம் தெரிய வந்தது. 5 முக்கிய தொலைக்காட்சி சானல்களின் முக்கிய நேரச் செய்திகளில் பிரதமரின் செய்திகளை விட 3 மடங்கு அதிகமாக மோடி காட்டப்பட்டார். அதுவும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 மற்றும் மே 1 முதல் 11 ஆம் தேதி காலகட்டத்தில். ஊடக ஆய்வகத்தின் பிரபாகரன் “மோடிக்கான நேரம் 50 சதவீதத்தை தாண்டிவிட்டது” என்கிறார். ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட இது 6 மடங்கும், கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டதை விட 10 மடங்கும் அதிகம்.

கெஜ்ரிவால் குறித்து வெளியான செய்திகளில் ஒரு பகுதி எதிர்மறையானவை. மோடி குறித்த செய்திகள் அப்படியில்லை.

இந்திய ஊடகங்கள் இப்போது பங்கெடுத்ததைப் போல, இந்தியத் தேர்தலில் இதற்கு முன்னர் பங்கெடுத்ததில்லை. எத்தனை தொலைதூர மாவட்டத்தில் இருந்தபடி, மோடி என்ன பேசினாலும், பல வாரங்கள் முக்கிய சானல்களில் அவை நேரலையாக ஓடிக் கொண்டிருந்தன.

இதுதான் கார்பரேட் ஊடகங்களின் முதல் முடிசூட்டுவிழா என்று சொல்ல முடியாது. அதன்அளவுதான் எதிர்பாராதது. தங்களின் அன்புக்கும் கீழ்ப்படிதலுக்கும் உரியவராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு, கவசங்களாக ஊடகங்கள்தான் இருந்தன. இந்தியாவின் முதல் (அவரே கடைசியுமாக இருக்க வெண்டும்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமராக இருந்த போதிலும். அவர் ஒரு ‘பொருளாதாரவாதிப் பிரதமர்’, அரசியல்வாதியல்ல என்று அவர்கள் சொன்னார்கள். அடடா என்னவொரு நற்பண்பு. 2009 ஆம் ஆண்டு யுபிஏ மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு அவரே காரணம் என்றனர். இடதுசாரிகளின் விலங்கிலிருந்து விடுவித்து, கார்பரேட்டுகளின் சூதாட்டத்தை அவர் வேகப்படுத்தினார். ஆகஸ்ட் 2011 வாக்கில், பெரும் காட்சி ஊடகங்களின் தலைவர்களும், ஆசிரியர்களும் அவரோடு நீண்ட சந்திப்பை நடத்தினர். அப்போது அவர்கள் எந்த கடினமான கேள்வியும் கேட்கவில்லை.

தனக்காக பேசும் ஒரு தலைவனுக்காக மக்கள் ஏங்கத் தொடங்குவதற்கு முன்னமே கார்பரேட் நிறுவனங்கள், அவரது காலம் காலாவதியாகிப் போனதை முடிவு செய்துவிட்டனர். இதைச் செய்தது CII, பிக்கி மற்றும் அசோச்செம் அல்லது மார்கன் ஸ்டான்லி மட்டுமல்ல. 2014 ஆம் ஆண்டு, பேச்சாளரும், அரசியல்வாதியுமான மோடி இதன் பலனை பெருமளவில் பெற்றார்.

எப்படியும், ஆரத் தழுவிக் கொண்டிருக்கும் மோடியும், மீடியாவும் குறித்த தனியொரு பார்வையை பிறகு பார்க்கலாம்.

தேர்தலை படுகொலை செய்யும் ‘கணக்கு’:

முக்கிய ஊடகங்களில் மோடி அலை கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. இந்தி பேசும் மாநிலங்களிலும், மேற்கு பிரதேசங்களிலும் பாஜகவின் தொகுதிக் கணக்குகள் அதிகரித்ததை பேசிக் கொண்டிருந்தனர். ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும், மத்திய பிரதேசத்திலும், குஜராத்திலும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் நேரடி யுத்தம் நடந்தது. உத்திர பிரதேசம், பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் பாஜக பலவகைப்பட்ட சக்திகளின் உதவியுடனும், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்கான வித்தியாசமான நடையைப் போட்டது.

தென்னக மாநிலங்களில் அலை கரையைத் தொட்டது.

கேரளத்தில் பாஜக வெறுமையை ஈர்த்தது. தமிழகத்தின் அதன் 5 கட்சி கூட்டணியால் 2 இடங்களைப் பெற முடிந்தது. தெலங்கானாவில் தனக்கென 1 சீட்டும், தனது கூட்டணியான தெலுங்கு தேசத்திற்கு ஒன்றும் பெற்றது. பாஜகவை எதிர்த்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி பெரும் வெற்றியடைந்தது. சீமாந்திராவில், தெலுங்குதேசம் கட்சியுடன் சேர்ந்து இரண்டு சீட்டுகளை ஜெயித்தது, அங்கு ‘மோடி’ அலை தெலுங்குதேசம் கட்சிக்கு உதவியதா?. மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே சீமாந்திராவின் உள்ளாட்சித் தேர்தல்களில் தெலுங்குதேசம் வெற்றியடைந்தது. அப்போது, தெலுங்குதேசம் பாஜகவோடு கூட்டணி அமைக்கவில்லை, மாறாக ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிட்டனர்.

கர்நாடகாவிலும், எட்டியூரப்பாவை தன்னோடு இணைத்துக் கொண்டதன் காரணமாகவே பாஜக வெற்றியடைந்தது. எடியூரப்பா ஒரு மாநிலக் கட்சியை ஏற்படுத்தி பாஜகவிடமிருந்து உடைந்து செஎறபோது, (மோடி பிரச்சாரத்தையும் மீறி) பாஜக தோல்வியடைந்தது. ஒதிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாத்ஹளம் 2009 ஆம் ஆண்டு பெற்றதை விட கூடுதலாக வெற்றியடைந்தது. பாஜக பெற்றதை விட அதிக சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றது.

மோடி தனது கட்சியின் வெற்றிக்கு செலுத்திய பங்கென்பது, காங்கிரஸ் எதிர்ப்பு கோபத்தை தனக்கு சாதகமானதாக திருப்பியதுதான். முக்கியமாக, கட்சி ஏற்கனவே வலுவாக உள்ள இடங்களில் அவர் அதனை செய்தார். மஹாராஸ்ட்ராவில் இருப்பதைப் போல புதிய (மற்றும் இளமையான) மத்திய தர வர்கத்தினரின் பல்வேறு அடுக்குகளை அவரால் மீட்ட முடிந்தது. காங்கிரசுக்கு எதிராக வலிமையான பிற சக்திகள் குறைவாக இருந்த பகுதிகளிலேயே அவரின் பாதிப்பு இருந்தது.

அதிகம் வாக்குகள் பெற்றவர் வெற்றியடையும் தேர்தல் தன்னையே இந்த முறை தோற்கடித்துக் கொண்டது. பல்வேறு கட்சிகள், அணிகள் மற்றும் வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான தொகுதிகளில் – சிலர் வலுவான பிராந்திய கவனத்தோடு போட்டியிடும்போது – இது கிறுக்குப் பிடித்த நிலைக்கு இட்டுச் சென்றது.

தேசிய அளவில் பாஜக 31 சதவீத வாக்குகளை பெற்று 282 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரஸ் 19.3 சதவீத வாக்குகளையும் 44 தொகுதிகளையும் பெற்றது. சித்தார்த் வரதராஜன் எழுதியதைப் போல, 12 சதவீத வாக்கு வித்தியாசம் ஆனால் தொகுதி எண்ணிக்கையில் 500 சதவீத வித்தியாசம்.

உத்திரபிரதேசத்தில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் 8 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால் 2 தொகுதிகளில் வெற்றியடைந்தனர். சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ்கட்சியை விட 2.6 சதவீத வாக்குகள் அதிகம் கிடைத்தன ஆனால் 5 தொகுதிகளில் வெற்றியடைந்தது. பாஜகவுக்கு 42 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் கிடைத்தது ஆனால் 90 சதவீத தொகுதிகளை வென்றது.

சீமாந்திராவில், தெலுங்குதேசம்-பாஜக அணிக்கும், ஒயெஸார் காங்கிரஸ் கட்சிக்குமான வாக்கு சதவீத வித்தியாசம் சுமார் 2 சதவீதம் மட்டுமே, ஆனால், அவர்களின் அனி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெற்றதை விட இரண்டு மடங்கு தொகுதிகளை ஜெயித்தது.

தமிழ்நாட்டில் திமுக 23.6 சதவீத வாக்குகளைப் பெற்று, ஒரு தொகுதிகூட வெல்ல முடியவில்லை. பாஜக தலைமையிலான 5 கட்சி அணி 18.6 சதவீத வாக்குகளைப் பெற்றது ஆனால் 2 தொகுதிகளை வென்றது. பல இடங்களில் 5 முனைப் போட்டி நிலவியது. அதிமுக, திமுக, பாஜக அணி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள். பெருமளவில் 44 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களையும் அதிமுக வென்றது. 44 சதவீதவாக்குகளைப் பெற்றது.

மேற்கு வங்கத்தின் இடது முன்னணி 30 சதவீத வாக்குகள் பெற்றது. ஆனால் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் 4 தொகுதிகளை வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 40 சதவீத வாக்குகளைப் பெற்று 80 சதவீத தொகுதிகளை அதாவது 42 இல் 34 தொகுதிகளை வென்றது.

இதுபோன்ற அலைகளுக்கு உருவாக்க எவ்வளவு தண்ணீர் வேண்டும்? சுமார் 60 சதவீத இந்தியர்கள் பாஜகவுக்கும் அதன் அணிக்கும் வாக்களிக்காத போது.

விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறைக்கு மாறுவதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தொடக்கமாக, மக்களவையின் 3 இல் ஒரு பங்கு விகிதாச்சார பிரதிநிதித்துவத்தால் நிரப்பப்பட, மற்ற இடங்களை பெரும்பான்மை அடிப்படையில் வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். விளைவுகளை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

மேலும், இனி இது எதிர்காலம்:

நரேந்திர மோடியின் கோரிக்கை அடிமட்டம் வரை சென்றிருக்கிறது. 1980 – 2002 இடையிலான மத வன்முறைகளையும், இரத்த வெள்ளத்தையும் அனுபவித்திராத இளம் தலைமுறையில், இப்போதுதான் பருவமடைந்திருக்கும் ஒரு பகுதியை அது எட்டியிருக்கிறது. புதிய தாராளவாத சூழலில் வளர்ந்தவர்களும், மற்ற அமைப்புகளை அறியாதவர்களுமானவர்களிடம் சென்றுள்ளது. அவர்களின் நம்பிக்கைகள் பலவற்றில், அவர் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவார் என்பதும் ஒன்று.

வளர்ச்சி குறித்த மோடியின் பிம்பத்தை, ஊடகங்கள் திகட்டும் அளவுக்கு செய்துவிட்டன. பழமைவாதமும் மதவாதமும் கலந்த மேடைப் பேச்சுகளில் இருந்து விலகிச் செல்வதைப் பார்ப்பது எத்தனை சிறப்பானது. நல்லது, இப்போதைக்கு குஜராத் ‘மாதிரியை’ தள்ளி வைப்போம், அது மற்றுமொரு கதை. மோடி தனது வகுப்புவாத அல்லது சாதியவாத குட்டைகளை குழப்பவில்லை. அந்த வேலையை அமித் ஷா, கிரிராஜ் சிங், பாபா ராம் தேவ் மற்றும் பிறரிடம் அவுட் சோர்சிங் கொடுத்துவிட்டார். அவர் வளர்ச்சியை நட்டுவைத்தபோது, அவர்கள் இறுதித் தீர்ப்பு நாளை உத்திரவாதம் செய்தார்கள். அந்த பிரச்சாரம் வளர்த்த மிக ஆழமான அச்சமும், பாதுகாப்பின்மையையும் மிக எளிதில் போகாது.

Related Posts