அரசியல்

லவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….!

“லவ் ஜிகாத்திற்கு தடை” என்ற பெயரில் மத மறுப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கி
றது உ. பி. யின் பாஜக அரசு. வயதுக்கு வந்தவர்கள் காதலித்து மணம் புரிவது அவர்க
ளின் உரிமை. காதல் என்றாலே அது சாதி, மதம் பாராதது என்றுதான் பொருள். உண்மை
யான காதல் இரு தனி இதயங்களின் ஈர்ப்பு, கலப்பு. அங்கே சமூக பேதங்களுக்கு வேலை இல்லை. அதனால்தான் சாதி வெறியர்களும், மத வெறியர்களும் காதலை நஞ்சாய்
வெறுக்கிறார்கள்.

உ. பி. யில் உள்ள சாமியார் அரசு மத மாற்றத்திற்காகவே திட்டமிட்டு காதலிக்கிறார்கள்,
கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. இங்கே சில சாதியவாதிகள் சொல்லும் அதே “நாடகக் காதல்” குற்றச்சாட்டுத்தான். இதன் நோக்கம் நாடகக்
காதலை அல்ல, காதலையே நிராகரிப்பதுதான் என்பதை அறிவோம். அப்படித்தான்
அதுவும். மத மாற்றத்தை தடுக்க அல்ல, மத மறுப்பு திருமணத்தை தடுக்கவே அவசரச்
சட்டம் போடுகிறார்கள். காரணம் இதில் வெளிப்படையாகத் தெரிவது காதலர்கள் இரு
வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதானே தவிர, அவர்களது உள்நோக்கம் அல்ல.
இல்லாத உள்நோக்கத்தையும் இருப்பதாகச் சொல்லி இயல்பான மத மறுப்பு காதலை
நொறுக்குவதுதான் இவர்களது வேலை.

மதம் மாறுவது என்பது நமது அரசியல்சாசனம் தந்துள்ள ஓர் உரிமையாகும். எனது
பெற்றோர் பின்பற்றிய மதத்தையே வயதுக்கு வந்த நானும் ஏன் பின்பற்ற வேண்டும்?
வேறு ஒரு மதத்திற்கு போனால் என்ன? அல்லது மதங்களே வேண்டாம் என்றால் என்ன?
அந்த உரிமை வேண்டும். இல்லையெனில் எனது கருத்துரிமை எனது சிந்தனை உரிமை பறிக்கப்பட்டதாகப் பொருள். இதைத்தான் செய்ய முனைகிறார்கள் பாஜகவினர்.

மதம் மாறி திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது மநுசாஸ்திரத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது. பிராமண, ஷத்திரிய, வைஸ்ய வருணத்தவர்கள் வாழ வேண்டிய தேசங்கள்
“பிரம்மவர்த்தம், மத்தியதேசம், ஆரியவர்த்தம்” எனும் மநு இதர பகுதியை “மிலேச்சர்
களின் தேசம்” என்கிறார். அங்கே போய் இந்த மூன்று வருணத்தவர் வாழவே கூடாது என்
பவர் சூத்திரர்கள் வேண்டுமானால் பிழைப்புக்காக அதை தம் தேசமாகக் கொள்ளலாம்
என்கிறார்.(2:17-24) ஆக மிலேச்சர்களும் சூத்திரர்களும் ஒன்று என்பதுதான் மநுவின்
கூற்று.
இப்போதும் பிற மதத்தவரை “மிலேச்சர்கள்” என்று சநாதனிகள் அழைப்பதைக் கேட்க
லாம். அவர்களது தேசங்களிலேயே வாழக்கூடாது என்பவர் அவர்களோடு திருமண
சம்பந்தத்தை ஏற்பாரோ? மத மறுப்பு திருமணம் கூடாது என்று பாஜக போடும் அவசரச்
சட்டத்தில் மநு சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். “மநு தற்போது நடைமுறையில்
இல்லை” என்போருக்கு இது சமர்ப்பணம்.

மத மறுப்பு திருமணத்திற்குத் தடை என்பது சாதி மறுப்பு திருமணத் தடைக்கான முன்னோட்டமே. மிலேச்சர்களையும் சூத்திரர்களையும் சமமாக பாவிக்கும் மநுவைப் பின்பற்
றுகிறவர்கள்தாம் பாஜகவினர். பிற மதத்தவரை மணப்பது மதமாற்றத்திற்காகவே என்பவர்கள் எஸ் சி யினரும், ஓ.பி.சி யினரும் உயர்சாதிப் பெண்களை மணப்பது சாதியமைப்பை சீர்குலைக்கவே என்று கூச்சமில்லாமல் சொல்வார்கள். தமிழ்நாட்டில்கூட ஒரு சாதிச் சங்கம் அப்படித் தீர்மானம் போட்டுள்ளது!

உயர் வருணத்துப் பெண்களை கீழ் வருணத்து ஆடவர் மணப்பதை மநு மிகக் கடுமை
யாகப் பார்க்கிறார், அதைத் தடுக்க அவர் விதித்துள்ள தண்டனைகள் கொடூரமானவை.
“முதல் மூன்று வருணத்துப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்
குறியைச் சிதைத்துவிட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றி
விட வேண்டும்” (8:374) என்கிறார். இவ்வளவு கடுமை இல்லாவிட்டாலும் தம்மைவிட
உயர்ந்த வருணத்துப் பெண்ணோடு கூடும் ஷத்திரிய, வைசிய ஆடவருக்கும்
தண்டனை அல்லது தண்டம் உள்ளது.

பிற மதத்தவரை மணப்பதால் தமது மதத்திற்கு ஆபத்து என்போர் பிற சாதியினரை மணப்பதால் தமது சாதிக்கு ஆபத்து என நிச்சயம் சொல்வார்கள். உண்மையில் அவர்களது
பழைய வேத மதத்தை- ஆரிய மதத்தை- பிராமணிய மதத்தை காக்கவே “இந்து மதம்”
எனும் போர்வைக்குள் புகுந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்
களது அந்த ஒரிஜினல் மதத்தில் சூத்திரர்களும், சண்டாளர்கள் எனப்பட்ட பஞ்சமர்களும்
கிட்டத்தட்ட அடிமைகளே. எண்ணிக்கை பலத்திற்காக அவர்களை இன்றைக்கு “இந்துக்
கள்” என்பதில் சேர்த்திருந்தாலும் அவர்களை தமது ஆளுகைக்குள் ஆட்படுத்தி வைப்பதே உயர்சாதியினரின் இலக்கு. அதற்கு நிச்சயம் சாதிய படிநிலையைக் காப்பாற்றியாக
வேண்டும். அதற்கு சாதிமறுப்பு திருமணத்தை தடுத்தாக வேண்டும். ஆகவே அடுத்து
அதை நோக்கி நிச்சயம் நகர்வார்கள். அதற்கான சாஸ்திர பலத்தை மநு தந்துள்ளார்.

அதனால்தான் “மநுவுக்கு எதிராக ஏன் எதிர்மனு?” என்று கேட்டு தினமணியில் கட்டுரை
எழுதுகிறார்கள். பிறப்பில் பேதம் காணாது அனைவருக்குமான “இன்பத்துப்பாலை”
தந்த வள்ளுவப் பெருந்தகையை வருண வேறுபாடு புகட்டும் கேடுகெட்ட மநுவோடு
சமப்படுத்திப் பேசுகிறார்கள்!
“ஒருதலையான் இன்னாது காமம், காப்போல/ இரு தலையானும் இனிது” என்றார் வள்ளு
வர். அதாவது காவடியின் இருபுறமும் எடை சமமாக இருந்தால்தான் அதை சுமப்பது எளிது.

அப்படி இரு தரப்பிலும் காதல் சமமாக இருக்க வேண்டும் என்றார். காதலில் ஆண், பெண்
சமத்துவம் பார்த்தாரே தவிர வருண வேறுபாடு போதிக்கவில்லை. அவரைப் போய் மநுவுக்கு ஈடாகச் சொல்கிறவர்கள் தமிழ்ச்சமூக நல்மரபின் எதிரிகள். இதைத் தமிழர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

  • அருணன்.

Related Posts