அரசியல்

நிற வெறி: உண்மையை ஏன் மறைக்க வேண்டும்? – பிடல் காஸ்ட்ரோ

(தயக்கமின்றி படுகொலைகளை அரங்கேற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் – நிறவெறியர்கள் நடத்திய தாக்குதலில் இருந்து ஆப்பிரிக்க மக்களை பாதுகாக்க நடைபெற்ற வீரம்செரிந்த போரை – பிடல் காஷ்ட்ரோ நினைவு கூர்கிறார். மனித நேயம் என்ற ஒற்றை கருப்பொருளை வலியுறுத்தும் அவரின் நினைவோட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன)

– தமிழில் – மிலிட்டரி பொன்னுசாமி

கடந்த நூற்றாண்டின் நிச்சயமற்ற காலங்களின் பொழுது சோவியத் யூனியன் மறைந்து போனாலும்கூட, கியூபா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் என்று நாம் உறுதியுடன் தெரிவித்த வார்த்தைகளை நாம் காப்பாற்ற மாட்டோமென அமெரிக்க சாம்ராஜ்ஜியம் நினைத்திருக்கலாம்.

நாஜி-பாசிச துருப்புகள் போலந்து மீது தாக்குதல் தொடுத்த 1939, செப்டம்பர் 1 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் தொடங்கியது, நாஜிப்படைகள் வீரம் செறிந்த சோவியத் யூனியனின் மக்கள் மீது மின்னல் வேகத் தாக்குதலைத் தொடுத்தன. 50 மில்லியன் உயிர்களைக் குடித்த அந்த மிருகப் படுகொலையிலிருந்து மனித இனத்தைப் பாதுகாக்க சோவியத் மக்கள் 27 மில்லியன் உயிர்களை தியாகம் செய்தார்கள்.

வரலாறு நெடுக மானுட இனம் தவிர்க்கத் தவரிய ஒரே காரியம் யுத்தம்தான், மூன்றாம் உலகப்போர் எப்படிப்பட்டதாக இருக்குமென தனக்கு தெரியாது, ஆனால் நான்காம் உலகப் போர் கற்களையும், தடிகளையும் கொண்டுதான் நடத்தப்படும் என ஐன்ஸ்டினின் புகழ்பெற்ற கூற்றுக்கு அது இட்டுச் சென்றது.

இரண்டு மிக ஆற்றல் வாய்ந்த சக்திகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் கிடைக்கக் கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால், அது 20 ஆயிரத்தைத் தொடுகிறது. 1961, ஜனவரி 20 ஆம் தேதி ஜான் எஃப் கென்னடி தன் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் – ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 260 மடங்கு சக்திவாய்ந்த 2 அணுகுண்டுகளை சுமந்து கொண்டு வழக்கமான பரப்பிலிருந்த ஒரு அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானம், ஒரு விபத்தில் சிக்கி தரையில் வீழ்ந்தது. இதுபோன்ற விபத்துகளில் குண்டு வெடிக்காமலிருப்பதற்கு நவீன தானியங்கி தடுப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். முதலாவது குண்டு ஆபத்துக்கள் இல்லாமல் தரையிரங்கியது. இரண்டாவது குண்டில் இருந்த 4 தடுப்புப் பொறிகளில் 3 பழுதாகிவிட்டன, 4 வது அந்த மிக நெருக்கடியான நிலைமையில் கிட்டத்தட்ட செயல்படவில்லை. சந்தர்ப்ப வசத்தால்தான் அந்த குண்டு வெடிக்காமல் தப்பியது என்பதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

நெல்சன் மண்டேலாவின் மறைவைப் போல உலகப் பொதுமக்களின் கருத்து மீது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கடந்த கால நிகழ்வு எதுவும் என் நினைவுக்கு எட்டவில்லை. அதுபோல நான் கேட்டதுமில்லை. இத்தகைய தாக்கம் அவருடைய செல்வச் செழிப்பினால் ஏற்பட்டதல்ல, மாறாக அவருடைய மானுடப் பண்பின் தரம் காரணமாக, அவர் கருத்துகள் மற்றும் உணர்வுகளின் மேன்மை காரணமாக ஏற்பட்டதாகும்.

ரோபாட்டுகளும், இயந்திரங்களும் குறைந்த சக்தியின் செலவில் நம் சாதாரண வேலைகளை எடுத்து க்கொள்வதில் வந்து சேர்ந்திருக்கும் இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கு முன், வரலாறு நெடுகவும், ஆண்கள் – பெண்கள், குழந்தைகள் – முதியவர்கள், இளைஞர்கள் – வயதானவர்கள், விவசாயிகள் – ஆலைத் தொழிலாளர்கள், உடலுழைப்பாளர்கள் – அறிவு ஜீவிகள் என்றிருக்கும் ஒவ்வொருத்தரையும் இரக்கமில்லாமல் ஆட்சி புரிகின்ற, மனித குலத்தை உலுக்குகிற சக்திகள் போல – எதுவும் இருந்ததில்லை. இப்போதைய போக்கு, நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதாகும், நகரங்களில் வேலைவாய்ப்புகள் போக்குவரத்து, அடிப்படை வாழ் நிலைமைகள் ஆகியன உருவாவதற்கு மிகப்பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன, அது உணவு உற்பத்திக்கும், பிற விதமான வாழ்க்கை வழிகளுக்கும் கேடு விளைவிக்கிறது.

நமது நிலவில் 3 சக்திகள் (நாடுகள்) தரையிரங்கியுள்ளன. தான் 95 ஆண்டுகள் முன்பு பிறந்த எளிய வீட்டின் பின்பகுதியில் தன் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டு நெல்சன் மண்டேலா அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் நிலவின் ஒரு பிரகாசமான இடத்தில் சீன மக்கள் குடியரசின் ஒரு நவீன விண்கலம் தரையிறங்கியது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுபோல நிகழ்ந்தது தற்செயல்தான்.

பூமியையும், விண்வெளி விவகாரங்களையும் மில்லியன் கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரூகிறார்கள். சனி கிரகங்களின் வளையங்களில் ஒன்றான டிச்சான் துணைக் கோளில் – நம் பூமியின் 125 ஆண்டுகளுக்கு முன்னால் எண்ணை எடுக்கத் தொடங்கியபோது இருந்த மொத்த எண்ணை வளத்தஒப் போல 40 மடங்கு எண்ணை வளம் இருப்பதை இன்று நாம் அந்த விஞ்ஞானத்தின் வழி அறிந்து வைத்திருக்கிறோம். நம் எண்ணை வளம் இதே விகிதத்தில் எடுக்கப்படுமானால், இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில் வரண்டுவிடும்.

கியூப மக்களுக்கும் நெல்சன் மண்டேலாவின் தாய் மண்ணுக்கும் இடையிலான ஆழ்ந்த சகோதரத்துவ உணர்வு – இதுவரை குறிப்பிடப்படாத, நீண்ட ஆண்டுகளாக நாங்கள் ஒரு வார்த்தைகூட வெளிப்படுத்தியிராத ஒரு நிகழ்விலிருந்து பிறந்தது.(அதைச் சொல்லாமலிருந்தற்கு) காரணம் மண்டேலா அமைதியின் தூதராக இருந்ததும்; கியூபா புகழுக்காகவும், வெற்று பெருமைக்காகவும் எதையும் செய்ததில்லை என்பதும்தான்.

கியூபாவில் புரட்சி வெற்றியடைந்ததில் இருந்தே ஆப்பிரிக்காவிலிருந்த போர்ச்சுகீசிய காலனிகளுக்கு எங்களுடைய ஒருமைப்பாட்டை அளித்துவந்தோம். ரஷ்ய சோசலிசப் புரட்சியின் மகத்தான வெற்றியை தொடர்ந்து நடந்த இரண்டாம் உலகப் போருக்கும், அதையொட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீன மக்கள் குடியரசின் விடுதலைக்கும் பிறகு அந்தக் கண்டத்தின் விடுதலை இயக்கங்கள் காலனியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் பயங்கரமாக குலுக்கின.

சமூகப் புரட்சிகள் பழைய ஒழுங்கமைப்பின் தூண்களை உலுக்கிக் கொண்டிருந்தன. 1960 இல் இந்த பூமியின் மக்கள் தொகை 300 கோடியாக உயர்ந்திருந்தது. இதனுடன் சேர்ந்து பெரும் பன்னாட்டுக் கம்பெனிகள் – கிட்டத்தட்ட எல்லாமே அமெரிக்க கம்பெனிகள் வளர்ந்துகொண்டிருந்தன. தங்கத்தில் அமெரிக்க ஏகபோகமும், போர்க்களங்களில் இருந்து வெகுதொலைவில் சேதமில்லாமலிருந்த அமெரிக்க தொழில்துறையும் வலுவான அடித்தளமாக அமையப் பெற்றிந்த அமெரிக்காவின் நாணயம், உலகப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. டாலருக்கு நிகரான தங்க இருப்பு ஆதாரத்தை ரிச்சர்ட் நிக்சன் தன்னிச்சையாக நீக்கினார், அவருடைய நாட்டின் கம்பெனிகள் புவிக் கோளில் இருந்த பிரதான மூல ஆதாரங்களையும், இயற்கை வளங்களையும், காகிதப் பணத்தைக் கொடுத்து தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.

நான் இதுவரை கூறியதெல்லாம் புதிதல்ல..

ஆனால் ஆப்பிரிக்காவுக்கு அத்தனை துன்பத்தைக் கொண்டுவந்த, உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான நாடுகளில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய நிறவெறி அரசாட்சி ஐரோப்பிய காலனிய சக்திகளின் விளைபொருள் என்பதையும், அதை அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு வல்லமை கொண்ட அரசாக மாற்றினார்கள் என்பதையும், போர்ச்சுகீசிய அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிக் கொண்டிந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆதரவளித்து வந்த கியூபா அதனை பகிரங்கமாகக் கண்டனம் செய்ததையும் ஏன் அவர்கள் மறைக்க முயல்கிறார்கள்?

30 ஆண்டுகால வீரம் மிக்க போராட்டத்திற்கு பின்னர் ஸ்பெயினால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் மக்கள் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக திணிக்கப்பட்ட அடிமை ஆட்சியுடன் என்றுமே சமரசம் செய்துகொள்ளவில்லை.

1975 ல் 90 எம்.எம். பீரங்கிகள் பொருத்தப்பட்ட லகுரக டாங்குகளின் ஆதரவுடன் இனவெறித் துருப்புகள் நமீபியாவிலிருந்து (அது அப்போது தென்னாப்பிரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது)கிளம்பி லுவாண்டாவுக்கு அருகிலிருந்த அங்கோலாவின் நிலப்பகுதிக்குள் ஆயிராம் கிலோமீட்டர்களுக்கும் அதிக தூரம் ஊடுருவின – லுவாண்டாவிலிருந்த கியூப சிறப்புப் படையின் ஒரு விமான பட்டாலியனும் செலுத்தும் குழு இல்லாத சோவியத் டாங்கிகளை செலுத்திய கியூபக் குழுவினரும் அந்த துருப்புகளின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக தாமதப்படுத்தினர்.

குயிட்டோ குயுனாவேல் போருக்கு 13 ஆண்டுகள் முன்பாக இது நடந்தது.

புகழுக்காகவோ, எந்தவொரு ஆதாயத்துக்காகவோ கியூபா எதுவுமே செய்ததில்லை என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். மண்டேலா ஒரு நேர்மையான மனிதர், பரந்த புரட்சியாளர், 27 வருட தனிமைச் சிறைவாசத்தைப் பெரும் அமைதியுடன் தாங்கிக் கொண்ட ஒரு தீவிரமான சோஷலிஸ்ட். அவருடைய நேர்மை, அடக்கம் மற்றும் பெரும் மகத்துவத்தை என்னால் போற்றாமலிருக்க முடியாது.

மைய முக்கியத்துவம் வாய்ந்த போர்க்கள நிலைகளைப் பாதுகாத்தும், ஆயுதங்களைக் கையாளுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான அங்கோலா வீரர்களுக்கு பயிற்சியளித்தும் தன் சர்வதேசக் கடமைகளைக் கியூபா கறாராக நிறைவேற்றிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியன் ஆயுதங்களை அளித்தது. இருந்தபோதிலும் அந்த நேரத்தில் ஆயுதத் தளவாடங்களை வழங்கியவர்களின் பிரதான ஆலோசகரின் கருத்துடன் நாங்கள் முரண்பட்டோம்.

அப்போது துவக்க நிலையில் இருந்த ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான அங்கோலா இளைஞர்கள் இடைவிடாமல் இணைந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு பிரதான ஆலோசகராக இருந்தது சோவியத் ராணுவ போர்த்தந்திரத்திற்கு அத்தனை புகழைக் கொண்டுவந்தது ஒரு ஜிகோவோ அல்லது ரோகோ சோவ்ஸ்கியோ அல்லது மாலினோவ்ஸ்கியோ அல்ல. பழங்குடியின அரசாங்கம் இருந்ததாக நம்பப்பட்ட பகுதிக்கு சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த அங்கோலா பிரிகேடுகளை அனுப்ப வேண்டுமென்பது அவருடைய சிந்தனையை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது, அது சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரிட ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பிய ஃபாலாங்கிஸ்ட் ஸ்பெயினின் எல்லைக்கு ஸ்டாலின் கிராடில் போரிட்டுக் கொண்டிருந்த துருப்புகளை அனுப்புவதற்கு ஒப்பாகும். அந்த வருடம் இதையொத்த ஒரு ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.

லுவாண்டாலில் இருந்து சுமார் 1500 கி.மீ தொலைவில் இருந்த பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த பல அங்கோலா பிரிகேடுகளை பின்னாலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் இருந்து ஒரு முன்னாள் நேட்டோ தளமான குய்ட்டோ குவானாவேல்க்குச் செல்லும் வழியில் தென்னாப்பிரிக்கது துருப்புகள் அவர்களை துரத்திக் கொண்டிருந்தன.

அந்த இக்கட்டான நிலையில் அங்கோலா ஜனாதிபதி கியூபத் துருப்புகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தார். தெற்கே நமது துருப்புகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தார். தெற்கே நமது துருப்புகளின் கமாண்டராக இருந்த ஜெனரல் தெற்கு அங்கோலாவில் இருந்த கியூபத் தலைமையின் கீழ் கோலாவின் துருப்புகளும் தன வளங்களும் வந்தால்தான் அந்த உதவியை அளிக்க முடியும் என்பதுதான் நம்முடைய உறுதியான பதில். இனவெறி ஆப்பிரிக்கத் துருப்புகளைத் தாக்குவதற்கான பொருத்தமான போர்க்களமாக அந்த முன்னாள் ராணுவ முகாமை மாற்றும் தேவைக்கானதுதான் நமது வேண்டுகோள் என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள்.

24 மணி நேரத்திற்குள் அங்கோலாவிலிருந்து சாதகமான பதில் வந்தது. அங்கு ஒரு கியூப டாங்கிப் பிரிகேடை உடனடியாக அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. மற்ற சில டாங்கிப் பிரிவுகளும் மேற்கு நோக்கிய அதே கோட்டில் இருந்தன. பிரதானமான தடையாக மழைக் காலத்தின் காரணமாக ஏற்பட்டிருந்த சகதியும், வெக்கையும், நிலத்தின் ஒவ்வொரு துண்டுப் பகுதியிலும் ஆட்கொல்லிக் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையும் இருந்தன. டாங்கிகளையும், பீரங்கிகளையும் இயக்குவதற்கான படைவீரர்களும் குய்ட்டோவுக்கு அனுப்பப்பட்டனர்.

கிழக்கில் அகலமாகவும், வேகமாகவும் ஓடிக் கொண்டிருந்த குய்ட்டோ நதியினால் நிலப்பகுதியிலிருந்து படை முகாம் பிரிக்கப்பட்டிருந்தது, ஆற்றின் குறுக்காக இருந்த திடமான பாலத்தை இனவெறி ராணுவம் வெறிகொண்டு தாக்கிக் கொண்டிருந்தது. வெடிப்பொருட்கள் நிறைந்த ரேடியோ கட்டுப்பாட்டு விமானம் ஒன்று பாலத்தின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. இன்னும் இயங்கியவாறு பின்வாங்கிக் கொண்டிருந்த அங்கோலன் டாங்கிகள் மேலும் வடக்கு நோக்கிக் கடந்தன. நல்ல நிலைமையில் இல்லாதவை கிழக்கு முகமாக ஆயுதங்கள் இருக்கும்படி புதைக்கப்பட்டன, ஆற்றின் மறுபக்கம், ஒரு அடர்த்தியான ஆட்கொல்லிக் கண்ணி வெடிகள் மற்றும் டாங்கியெதிர்ப்பு கண்ணிவெடிகள் நிறைந்த பட்டையான நிலப்பகுதி அந்த முனையை ஒரு மரணப் பொறியாக மாற்றியது. அந்த தற்காப்புச் சுவருக்குள் நுழைவதற்கு இனவெறித் துருப்புகள் மீண்டும் முயற்சித்த பொழுது குய்ட்டோ பகுதியிலிருந்த புரட்சி பிரிகேடுகளின் பீரங்கிப் பையையும் டாங்கிகளும் தங்கள் நிலைகளில் இருந்தவாறு அவர்கள் மீது குண்டுமாரிப் பொழிந்தன.

மிக் – 23 ரக சண்டை விமானங்களுக்கு ஒரு சிறப்புப் பாத்திரம் இருந்தது. மணிக்கு கிட்டத்தட்ட 1000 கி.மீ வேகத்தில் 100 மீட்டர் உயரத்தில் பறந்த அவைகளால் பீரங்கிப் படையினர், வெள்ளையரா அல்லது கருப்பரா என்பதை பிரித்தறிந்து இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ள முடிந்தது.

துவைத்தெரியப்பட்டு, நகரவிடாமல் செய்யப்பட்ட எதிரி பின்வாங்கிய பொழுது புரட்சிகரப் படைகள் இறுதிப் போருக்கு தயாராகத் தொடங்கின.

பெரும் எண்ணிக்கையில் அங்கோல – கியூபன் பிரிகேடுகள் விரைவாக இயங்கத் தொடங்கியவுடன் அங்கோலாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்கர்கள் இப்போது தொடங்கிவந்த ஒரே அகலமான பாதையிலிருந்து மேற்கு நோக்கி போதுமான தொலைவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இருந்த போதிலும், நமீபியாவின் எல்லையிலிருந்து ஏறத்தாழ 300 கி.மீ தொலைவிலிருந்த விமானத் தளம் நிறவெறி ராணுவத்தால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

துருப்புகள் மறு – சீரமைத்துக் கொண்டு, ஆயுதங்களை மீண்டும் பெற்றுக் கொண்டிருந்தபோது மிக் 23 க்கு ஒரு ஓடுபாதை கட்டுவதென அவசர முடிவு எடுக்கப்பட்டது. அங்கோலாவுக்கு சோவியத் யூனியன் வழங்கியிருந்த விமானங்களை கியூப விமானிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். நம்முடைய பீரங்கிப் படையினர் அல்லது விமான – எதிர்ப்புப் படையினரின் காரணமாகவே பல விமானங்கள் செயலிழந்து போயிருந்தன. அங்கோலாவில் சமவெளியிலிருந்து நமீபியாவுக்குச் செல்லும் பிரதான பாதையில் ஒருபகுதியை தென்னாப்பிரிக்கர்கள் இன்னும் ஆக்கிரமித்திருந்தார்கள். தெற்கு அங்கோலாவுக்கும், வடக்கு நமீபியாவுக்கும் இடையிலிருந்த அகன்ற குயிட்டோ நதியின் மீதமைந்திருந்த பாலங்களில் இருந்து அவர்கள் சுடத் தொடங்கினார்கள், அவர்களுடைய 140 எம்.எம் பீரங்கிகளின் குண்டுகளின் தாக்கு தூரத்தை அது சுமார் 40 கி.மீ க்கு கொண்டு வந்தது.

முக்கியமான பிரச்சனை என்னவென்றால் தென்னாப்பிரிக்கர்களிடம், நமது மதிப்பீட்டின்படி 10 முதல் 12 அணு குண்டுகள் இருந்தன. உறைந்து கிடந்த பகுதிகளிலோ அல்லது தெற்கிலிருந்த கடல் பரப்புகளிலோ அவர்கள் அவற்றை சோதித்தும் பார்த்திருந்தனர். அதுபோன்ற சோதனைகளுக்கு ஜனாதிபதி ரெனால்டு ரீகன் அனுமதியளித்திருந்தார். இஸ்ரேல் அளித்திருந்த தளவாடங்களில் அணு குண்டை வெடிக்கச் செய்யும் சாதனமும் இருந்தது. இஸ்ரேல் அளித்திருந்த தளவாடங்களில் அதற்கு எதிர்வினையாக, இரவில் , ஒரு பரந்த தரைப்பகுதியில் விமான எதிர்ப்பு டாங்கிகளின் துணையுடன் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிற 1000 பேருக்கு மிகாத சண்டைப் பிரிவுகளாக நமது (கியூப) துருப்புகளை அமைத்தோம்.

நம்பத் தகுந்த ஆதாரங்களின்படி, தென்னாப்பிரிக்க அணு ஆயுதங்களை மிராஜ் விமானங்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை; அதற்கு பதிலாக கனரக காண்பரா வகை வகை விமானங்கள் தேவைப்பட்டன. எதுவாகிணும் பல டஜன் கி.மீ-ல் இருக்கும் வான்வெளி இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்வேறு வகையான ஏவுகணைகள் நம் படைகளின் விமானத் தற்காப்புப் பிரிவிடம் இருந்தன. அத்துடன், அங்கோலா நிலப்பரப்பில் இருந்த 80 மில்லியன் கன மீட்டர் நீருடன் கூடிய ஒரு அணையை கியூப – அங்கோலப்படைகள் கைப்பற்றி கண்ணிவெடி பொருத்தியிருந்தன. அந்த அணை வெடித்துச் சிதறுவது பல அணு ஆயுதங்கள் வெடிப்பதற்கு ஒப்பாகும்.

இருந்த போதிலும், நமீபிய எல்லையை எட்டுவதற்கு முன்னால், வலிமையாக நீரோட்ட வேகத்தில் ஓடும் கியூனேனி நதியைப் பயன்படுத்தும் ஒரு புனல் மின்னுற்பத்தி எஇலையத்தை ஒரு தென்னாப்பிரிக்க படைப்பிரிவு பயன்படுத்தி வந்தது.

இந்த புதிய போர்க்களத்தில் தங்களுடைய 140 எம்.எம் பீரங்கிகளைக் கொண்டு இனவெறியர்கள் சுடத் தொடங்கிய பொழுது வெள்ளப்படையின் வீரர்கள் மிக் 23 இன் சக்திவாய்ந்த தாக்குதலுக்குள்ளானார்கள், தப்பிப் பிழத்தவர்கள் தங்களுடைய தலைமை அலுவலகத்தை விமர்சிக்கும் போஸ்டர்களை விட்டுவிட்டு இடத்தை விட்டுப் பறந்து விட்டார்கள். எதிரிகளின் வரிசைகளைத் தாண்டி கியூப – அங்கோலத் துருப்புகள் நடைபோட்டபோது நிலைமை அப்படியிருந்தது.

சில வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த நூலாசிரியரான கட்டியுஸ்கா பிளாங்கோவும், அவருடன் சில நிருபர்கள் மற்றும் பத்திரிக்கைப் புகைப்படக் கலைஞர்களும் அப்பொழுது அங்கிருந்ததாக நான் அறிந்துகொண்டேன். அது ஒரு பதட்டமான சூழ்நிலையாக இருந்தது. இருந்தாலும் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

அப்போதுதான், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிரி விருப்பத்துடனிருக்கும் செய்தி நமக்குக் கிடைத்தது. 30 வருடங்களில் சீனா, இந்தியா இரண்டினுடைய மக்கள் தொகையையும் தாண்டிவிடக் கூடிய ஒரு கண்டத்தில் ஏகாதிபத்திய, இனவெறி சாகசத்தை தடுத்து நிறுத்துவதில் நாம் வெற்றியடைந்துவிட்டோம்.

நம் சகோதரரும், நண்பருமான நெல்சண் மண்டேலா மறைந்துள்ள இந்த நேரத்தில், கியூப தூதுக்குழு (அப்போது வகித்த) பாத்திரம் நினைவுகூறத் தக்கது.

தோழர் ராவ்ல் ஐ அவருடைய நுண்ணறிவு மிக்க செயல்பாட்டுக்காக, குறிப்பான ஒரு அன்பும், உறுதியும் மிக்க செய்கையின் மூலம் அமெரிக்க அரசாங்கத் தலைவரோடு கைகுழுக்கி அவரிடம் ஆங்கிலத்தில் “மிஸ்டர் ஜனாதிபதி, நான் காஸ்ட்ரோ” என்று கூரிய அவருடைய பண்பின் வலிமைக்காகவும், கண்ணியத்திற்காகவும் நான் பாராட்டுகிறேன்.

எனது உடல்நலம் என்னுடைய உடல் திறனுக்கு வரம்புகளிட்ட பொழுது, பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு, என் பார்வையில், எனது அளவுகோலில், யாரால் முடியும் என்பதை வெளிப்படுத்த நான் தயங்கவில்லை. மக்களின் வரலாற்றில் ஒரு வாழ்க்கையென்பது ஒரு நிமிடம்தான் அந்த பொறுப்பை இன்று யார் வகித்தாலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற கிட்டத்த முடிவில்லாத எண்ணிக்கையிலான மாற்றுக்களின் நடுவிலிருந்து தேர்வு செய்வதற்கு தேவையான அனுபவும், நிபுணத்துவமும் இருக்க வேண்டியது இன்றியமையாதது.

நமது தீவை அடிபணிய வைப்பதற்கு ஏகாதிபத்தியம் தன் கைவசம் எப்போதுமே ஏராளமான துருப்புச் சீட்டுகளை வைத்திருக்கும், அது உலகமெங்கிருந்தும் பறிக்கின்ற பண்டங்களின் இயற்கை மூலாதாரங்களின் துணுக்குகளை ஆசையாகக் காட்டி தீவின் இளம் ஆண் பெண்களைக் கவர்ந்து பறித்து மக்களற்ற பகுதியாக மாற்ற வேண்டியிருந்தால், அதையும் அது செய்யும்.

இனவெறி ஆட்சி எப்பொழுது ஏன் உயிர்பெற்றது என்பதைப் பற்றி அந்த அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் சார்பாகப் பேசுபவர்கள் இப்போது பேசட்டும்!

டிசம்பர் 18, 2013.

http://monthlyreview.org/castro/2013/12/18/mandela-dead-hide-truth-apartheid/

Related Posts