சினிமா தமிழ் சினிமா

மகளிர் மட்டும் – சாமானியர் பார்வையில் …

குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மகளிர் மட்டும். திரையில் பெண்ணியம் பேசும் படம்.

பிரபாவதியாக வரும் ஜோதிகா ஒரு ஆவணப்பட இயக்குநர். வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மாவா இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஆவணப்படம் எடுக்கும்போது தனது வருங்கால மாமியாரான ஊர்வசியின் நிலைமை பற்றியும் ஜோதிகாவுக்கு நினைவு வருகிறது. கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார். ஊர்வசி பள்ளிப் பருவத்தில் அவரது தோழிகளான சரண்யா மற்றும் பானுப்ரியாவைப் பிரிந்ததைச் சொல்ல, அந்த மூவரையும் இணைத்து வைக்கவும் வீட்டுச்சிறையில் சிக்கி இருக்கும் மூவரையும் மீட்டு எடுக்கவும் ஜோதிகா எடுக்கும் முயற்சிகளே மகளிர் மட்டும்.

பிரபாவதியாக ஜோதிகா க்யூட்டாக இருக்கிறார்.  36 வயதினிலே படம் போலஅழுத்தமான நடிப்பை கொடுப்பதற்கான ஸ்கோப் இல்லாத கேரக்டர். இருந்தாலும் கூட சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் கவர்கிறார்.

ஜோதிகாவை ஓவர்டேக் செய்கிறார்கள் மற்ற மூன்று சீனியர் நடிகைகளும். ஊர்வசிக்கு இது அழகான மாமியார்  கேரக்டர். ஒவ்வோரு பெண்ணுக்கும்  கணவரும், மாமியாரும்  இப்படி  அமைந்தால் நீதிமன்றம் வழக்குகள்  குறைந்துவிடும்

கணவருக்கு பயப்படுவதும், தோழிகளிடம் வாழ்க்கையை நினைத்து அலுத்துக்கொள்வதுமாக பானுப்ரியாவின் நடிப்பில் யதார்த்தம்.

கரித்துக்கொட்டும் மாமியாரை கவனித்துக்கொண்டு குடித்து விட்டு வந்து அழும் கணவரை சமாளித்துக்கொண்டு வாழும் பாத்திரம் சரண்யாவுக்கு. நிறைவாக செய்திருக்கிறார்.  தப்பு  செய்துவிட்டேன்… என்னை மன்னித்து விடு என கேட்கும்  கணவனிடம்….. மன்னிக்க முடியாது ஓர் அடி வாங்கிக்குங்க  சொல்லும்  போது நச்சு….

நாசர், லிவிங்ஸ்டன், கோகுல் பாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன.

கத்தி மீது நடப்பது போன்ற ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதன் திரைக்கதையில் ஆங்காங்கே சில சுவாரஸ்யங்களை கோர்த்து சொல்லியிருக்கிறார் பிரம்மா.

இதுதான் கதை என்று முடிவு செய்த பிரம்மா அதற்காக வலிந்து உருவாக்கிய நாடகத்தன்மை கொண்ட பாத்திரங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

சங்கர் கவுசல்யா என்று ரியல் கேரக்டர்களை காட்டிய இயக்குநர் அந்த கேரக்டர்களுக்கு கூடுதலாக பின்னணி கூறி வலுச் சேர்க்கவில்லை.

‘பொம்பளைக இருக்கற வீட்டுல சாப்பாட்டுல முடி விழத் தான் செய்யும் நாமதான் எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்’.  சொல்லும்  ஆர்மி  பெண் ஆபிசர்  மன்னிப்பு  கொடுக்கும் போது ஆபிசர், திருந்துவதற்கு வாய்ப்பும் கொடுக்கிறார்.

எடுத்த கதைக்கு இன்னும் அழுத்தமான சம்பவங்களை கோர்த்திருந்தால் சாமானிய ரசிகர்களுக்கு இன்னும் பரவலாக சென்றிருக்கும்.

– நித்யா பிரிசில்லா.

Related Posts