பிற

சிங்காரவேலர் நினைவு தினம்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், சென்னையில் முதன் முதலாக மே தினத்தைக் (தொழிலாளர் நாள்) கொண்டாடியவரும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 இல் தொடங்கியவரும், சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவரும், மே 1, 1923 இல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கிவரும், 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் ஒருவரும், தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும், “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படுபவருமான ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946) அவர்களின் நினைவு தினம் இன்று.

அவறைப் பற்றி ….

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.

தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார். பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன் படி பெப்ரவரி 18, 2011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றை குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தபட்டன.

ம. சிங்காரவேலர் படைப்புகள்:-

 • கடவுளும் பிரபஞ்சமும்
 • நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
 • மனிதனும் பிரபஞ்சமும்
 • மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
 • கோழி முட்டை வந்ததும் காணாமல் போனதும்
 • கல்மழை உண்டாகும் விதம்
 • விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
 • பிரபஞ்சப் பிரச்சினைகள்
 • விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
 • தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
 • விஞ்ஞானத்தின் அவசியம்
 • பேய், பிசாசு
 • தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
 • மனோ ஆலய உலகங்கள்
 • பிரகிருத ஞானம்
 • ஜோதிட ஆபாசம்
 • பகுத்தறிவென்றால் என்ன?
 • பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
 • பிரபஞ்சமும் நாமும்
 • உலகம் சுழன்று கொண்டே போகிறது
 • பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை

Related Posts