பிற

வாழும் மூதாதையர்கள் – நூல் விமர்சனம்

மீனாட்சி சுந்தரம்

முனைவர் அ. பகத்சிங் எழுதிய *“வாழும் மூதாதையர்கள்”* என்ற மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட நூல் வெளிவர இருக்கிறது. தமிழ் நாடு அரசு அட்டவணை
ப்படுத்திய இன்றும் நம்மிடையே வனங்களில் வாழும் 36 பழங்குடி சமூகங்களில் 13 சமூகங்களின் சடங்குகள் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய தகவலுடனும் படங்களுடனும் புரிகிற தமிழில் எழுதப்பட்ட இந்த நூல் ஆய்வாளர்களுக்கு பயன்படும் என்பது மட்டுமல்ல, பாமரமக்களின் பொதுஅறிவை விரிவாக்க உதவும்.
குலத்தை தாண்டி பார்க்க இயலாத நமது ஆதிகால மூதாதையரகளின் சமூகவாழ்க்கையின் நிறை குறைகளை அறிந்தால்தான் முன்னோர்கள் உருவாக்கிய நிறைகளை பேணவும் இன்றைய உலகத்தோடு ஒட்ட ஒழுகிடும் ஞானத்தை புதிதாக கற்கவும் நம்மால் முடியும் அதற்கு அவசியமான தகவல்களை பெற உதவிடும் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும். .
அது மட்டுமல்ல ஊடகங்கள் மவுணச் சதியில் ஈடுபடாமல் இப்புத்தகத்தை அறிமுகம் செயதால், பல காரணிகளால் கலங்கிக்கிடக்கும் தமிழக அரசியல் குட்டையை தெளிவு படுத்தும் சர்ச்சையை தூண்டும் என்பதில் ஐயமில்லை. . அரசியல் கலக்காமல் அறிவியல் புத்தகமாக டார்வின் எழுதினாலும் அது அன்று ஐரோப்பிய அரசியலை கலக்கியது போல முனைவர் பகத்சிங் எழுதியதும் அரசியல் கலப்பில்லாத அறிவியலடிப்படையில் பழங்குடி மக்களின் சமூக வாழ்வைபற்றியது என்றாலும் அரசியல. சித்தாந்த சர்ச்சைக்கு இழுத்துவிடும் தகவல்களை கொண்டுள்ளது என்றால் மிகையல்ல.

ஹரப்பா, மோகஞ்தோரா. கீழடி ஆய்வுகள் போன்ற அகழ்வராய்ச்சியில் கிடைக்கிற தடையங்களை வைத்தும், இலக்கியச் சான்றுகளை வைத்தும் தமிழ் மண்ணில் வாழ்ந்தோர் மற்ற மானுடர்களை விட சிறப்பாக வாழ்ந்தார்கள் என்று கூறப்படுவது ஆய்வாளர்களின் சித்திரங்களே தவர ஏதார்த்தமல்ல என்பதை இன்று வாழும் தமிழக பழங்குடிமக்களின் வாழ்க்கை காட்டுகிறது.

அந்த உண்மையை இந்த புத்தகம் காட்டுகிறது.

அதோடு ‘தமிழகத்தில் வாழும் 36 பழங்குடி மக்களை அநாகரீமானவர்கள் என்று அவர்களது வாழ்வாதாரத்தை பிடுங்கி வேட்டையாடாதீர்கள், உங்கள் கலாசாரம் உசத்தி என்று அவர்கள் தலையில் திணிக்காதீர்கள், அவர்கள் வழியில் மாற்றங்களை உருவாக்கி வாழ உதவுங்கள்’ என்று இந்த புத்தகம் வாதிடுகிறது.

மத்திய அரசின் வனச்சட்டம் மாநில அரசின் கொள்கை இரண்டும் நமது தாவர உயிரின பன்முகத்தன்மையை கெடுப்பதைத் தடுக்கிற ஞானசக்தி இந்த பழங்குடி மக்களே. அவர்கள் மியூசிய சரக்கல்ல என்ற புத்தியை படிப்பவர்களுக்கு இந்த புத்தகம் புகட்டுகிறது.. இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இந்த உண்மையை சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கியம் மற்றும், தொல்காப்பியம் இவைகளை ஆதாரமாக வைத்து மூதாதையர்களைப் பற்றிய சித்திரமும் தமிழ் நாடு அரசு அட்டவணைப்படுத்திய இன்றும் நம்மிடையே வனங்களில் வாழும் 36 டிபழங்குடி சமூகங்களின் வாழ்வுபற்றிய தகவல்களும் நமக்கு உணர்த்துவதென்ன?

இந்த மூதாதையர்கள் சங்க காலத்திற்கும் முந்திய காலத்தவர்கள் .
நமக்கும், வாழும் நமது மூதாதையர்களுக்கும் இருக்கிற ஓரே ஒற்றுமை, அவர்கள் குல அடிப்படையில் அகமண முறையை பின்பற்றுகிறார்கள். நாம் சாதி அடிப்படையில் இன்று அகமண முறையைப் பின்பற்றுகிறோம் ( பெரியாரின் தாக்கத்தால் மேல்சாதியினர் இடையே இது குறைந்து வருகிறது) ..
. அன்று பிற குலங்களோடு சேர்ந்து வாழ கற்றுக் கொண்ட குலங்கள் இணைந்து தமிழகமெங்கும் பரவியிருக்கலாம் குல மொழிகளை இணைத்து தமிழை வளர்த்திருக்கலாம் அவ்வாறு . குலவாழ்க்கையை கைவிட மறுத்த நமது மூதாதையர்கள் உற்பத்திசக்தியையும் உற்பத்தி உறவையும் அதிக மாற்றத்திற்கு உட்படுத்தாமலே வாழ முடிந்திருக்கிறது. நம்மை நாமே அறிய இந்த வாழும் மூதாதையர்கள் வாழ்வை அறிவது அவசியம் அல்லவா?

இவர்களது தாவர ஜீவராசிகளின் ஞானம் காடுகளைப்பேண நமக்குதவும். எனவே பழங்குடி மக்கள் அவரவர் வழியில் மாற்றம் கண்டு வாழ துணைநிற்போம். இது ஒரு அரசியல் பிரச்சினை என்பதை அறிவோம். மேலும் மேலும்
பழங்குடி மக்களின் உற்பத்திசக்தி, உற்பத்திஉறவு பகுத்துண்ணும் வாழ்க்கை இவைகளை ஆய்வு செய்ய முனைவர் பகத்சிங்கை உற்சாகப்படுத்துவோம்

Related Posts