சமூகம் சினிமா மாற்று‍ சினிமா

இறைவி – இரு பார்வை

கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம். எப்போதும் புது இயக்குனர்கள் சறுக்கும் மூன்றாவது படம். இறைவியின் கதையை இரண்டு கோணங்களில் இருந்து பார்க்கலாம்.

1. விஜய் சேதுபதி – அருள் குடும்பம் இடையே இருக்கும் ஆண்டான்-அடிமை இழை. விசுவாசமும், ஆங்காரமும். ‘நீ தம்பி மாதிரி. அவன் தம்பி’ என்னும் இழை. 2. உதிரி மனிதர்களின் கதை – ஆண்களுக்கான உலகம், ஆண்களின் கற்பிதங்கள்/முடிவுகள் அவன் குடும்பத்தை/பெண்களை எப்படி பாதிக்கிறது, அவர்கள் மனவோட்டம் என்னவாக இருக்கிறது என்னும் கதை

முதலில் இது பெண்களை மையமாக்கிய படமே அல்ல. சூர்யா – விஜய் சேதுபதியின் ‘நீ தம்பி மாதிரி, அவன் தம்பி’ தான் படத்தின் மைய இழை. கிட்டதிட்ட ஹரியின் ‘ஆறு’ படத்தின் முதல் பாதியின் நல்லவர்கள் வெர்ஷன். பெண்கள் பாத்திரங்கள் நார்மலாக இது போன்ற கதைகளில் உதிரிப்பாத்திரங்கள். அந்த உதிரிகளின் மனவோட்டம் என்ன? இந்த மெயின் கேரக்ட்டர்கள் செய்யும் செயல்களின் போது அவை என்ன நினைக்கும் செய்யும் என கேமராவை நகர்த்தும் போது மட்டும் இது ஒரு அழகான சிறுகதை ஆகிறது. இலக்கியம் என்பதன் அழகே மனவோட்டங்களை படம் பிடித்தல் தானே? படம் நெடுக இந்திய கலாச்சாரம் பகடி செய்யப்படுவது போல தெரிந்தாலும் அது Romanticizeம் செய்யப்படுகிறது. பல இடங்களில் அந்த கலாச்சாரம் தான் பிணைப்பாய் ஒரு Positive energyஆக ஒரு ஆணின் பொறுப்பற்ற பேச்சிலர்/ஆண் வாழ்க்கையை திருத்தி கட்டுக்குள் இருக்க செய்வதாய் காட்டப்பட்டிருக்கிறது.

இதை அப்படியே – அதாவது சூர்யாவும் விஜய் சேவும் திருந்தியிருந்தால், வாழ்ந்திருந்தால் இது ‘மயக்கம் என்ன’வில் காட்டப்பட்ட அந்த Romanticized பாணி ஆகியிருக்கும்.

ஆனால், கார்த்திக் ‘ஆண்களை திருத்துதல் பெண்களின் வேலையல்ல’ என்ற பெரியார் பாணி பெண்ணியத்தையும், கூடவே இவங்க திருந்தமாட்டாங்க என்ற அவர் சொந்தக்கருத்தையும் ஏற்றி வைக்கிறார். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டும் சாத்தியம். இங்கே நடக்கும் எத்தனை அரேஞ்சுடு கல்யாணங்கள் உண்மையில் Soul அளவில் பொறுத்தமானவை? இங்கே ஆண்களும் சரி பெண்களும் சரி இவற்றை ஏற்றுக்கொண்டே வாழ பழகி இருக்கின்றனர். மயக்கம் என்ன எப்படி சாத்தியமோ, போலவே இதுவும்.

இதில் ஆண்கள் கேரக்டர்கள் அரைகுறையாய் நடந்து கொண்டாலும், அவை அப்படி நடந்து கொள்ளும்படி தெரிந்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருள் – மயக்கம் என்ன தனுஷ் போல, சந்தர்ப்பத்தால் தோல்வி அடைந்த ஒரு எமோஷனல் ஆள்

வி.சே – விசுவாசம் மிக்க ஒரு எமோஷனல், நெருக்கமான வேலைக்கார பரம்பரை இளைஞன்

ஜெகன் – தான் செய்யும் செயல்களுக்கு, தன்னை தானே convince செய்ய நியாய சமாதானங்கள் சொல்லிக்கொள்ளும் இளைஞன்

பெண்கள் விஷயததில், படம் நிறைய விஷயங்களை சொல்ல முயன்று குழப்பிக்கொண்டிருக்கிறது.

கார்த்திக் ஷொட்டு வாங்கும் இடங்கள்:

  1. ஜெகன் Liberate செய்யும் ஆள் என அவனே கருதிக்கொண்டாலும், மீண்டும் தன்னையே (இன்னொரு ஆணை) அவன் பாதுகாக்கும் இடத்தில் வைத்துப்பார்க்கிறான். இது செம்ம நுண் பகடி. அவன் கண்ணகியை விடுவிக்கவில்லை. நான் பாத்துக்கறேன் என்கிறான். இது தான் இங்கு பலரின் பெண்ணியம்.
  2. மண வாழ்க்கை கசந்த பெண்கள். மூன்று தீர்வுகள். இன்னொரு கணவன். Free sex and life. தனியாக வாழ்தல். இது மூன்றையும் தன்னுடைய அறிவுக்கும்ழ் சூழ் நிலைக்கும், நிர்பந்தத்துக்கும் ஏற்ப எடுக்கும் மூன்று பேர். கூடவே வாழ்ந்து முடித்த வடிவுக்கரசி. இந்த முடிவுகள் எதையும் Judge செய்யாமல் பெண்ணியம் பேசியிருக்கிறார். அவர்களின் முதல் முதல் ஆசையை நினைவு கூரவும். அந்த Transformation.
  3. மழைல நனையும்ன்னு ஆசை – ஆனா நனைஞ்சுவோம்ன்னு பயம்

இதை பெண்கள் பார்வைன்னு எடுக்காம, உதிரி மனிதர்களின் கதையா எடுத்துக்கலாம். கோபம், சந்தர்ப்பம் – அதை பற்றி நமக்கிருக்கும் கற்பிதங்கள் – கெத்து – கண நேர முடிவு (அல்லது அது தானா?)

  • இதெல்லாம் ஒரு ஆணின் வாழ்வில் நிகழ்கையில் அவன் குடும்பம் என்ன ஆகிறது. இது தான் கதை. நல்ல மனிதர்களின் சந்தர்ப்பம் சார்ந்த முடிவுகள் தானா இதெல்லாம்? எனில் இது ஏன் ஆண்களுக்கு மாத்திரமே நிகழ்கிறது? அந்த கற்பிதத்தை தான் பகடி செய்திருக்கிறார் கார்த்திக்.
  • ‘திருத்தி வாழ’ ஒரு கல்யாணம். த்தூ என்கிறார். எத்தனை ஊர் மேயும் பெண்களை கட்டி திருத்த நாம் ரெடி?
  • ‘ஜெகனை காதலிச்சேன். ஆனா சொல்லல’ இதுக்கு சுத்தமாக ரியாக்ட் ஆகாத வி.சே ‘படுத்தியா’ என்பதை அறிய விழைவது ஏன்? தன் பொண்டாட்டி இன்னொருத்தன தனக்கு அப்பறம் காதலிச்சா என்பது ஏன் அவனுக்கு முக்கியமா படல?

இறைவியின் Plot knot, Ego of SJ surya, விஜய் சேதுபதியின் விசுவாசம், பாபி சிம்ஹாவின் அரைகுறை பெண்ணியம்/புரட்சி ஆகியவற்றின் கதையே. பாபி சிம்ஹாவின் அரைகுறை புரட்சியை, ஏன் டா திருட்டுக்கு படைப்பு, கலை, ஆராதனைன்னு நாலு வார்த்தைய போட்டுட்டா நியாயப்படுத்திட முடியுமா? என பகடி செய்திருக்கிறார்கள் (Relate to radharavi saying my wife iraivi, i wasted her life)

கார்த்திக் தடுமாறி இருக்கும் இடங்கள்:

1. படம் நெடுக, கேரக்டர்கள் எல்லாமே, நிகழ்வுகள் எல்லாமே Exaggerated. இவ்வளவு கோபம், இவ்வளவு நிதானமின்மை இருந்தால் எல்லாரும் Hyper-emotional ஆட்கள்ன்னா மட்டும் தான் முடியும். நிஜத்துல கொஞ்சம் நிதானம் இருந்திருக்கும்

2. எல்லா பெண்களும் எடுக்கும் முடிவுகள் அமெச்சூர்தனமாய் உள்ளன.

மலர் ஏன் விஜய் சேதுபதிய விரும்பற மாதிரி காட்டணும்? விரும்பறான்னா சேந்து வாழ வேண்டி தான? அந்த அக்கான்னு கூப்புடுற கேரட்டர் செம்ம Artificial. ஏன்? காதலற்ற Free sex தப்பா? விரும்பினா, இன்னொருத்தனோட படுத்தவ என்பதால் தான் மலர் விட்டுக்கொடுக்கிறாளா? இதன் தர்க்கம் என்ன?

மலர் படுத்தது பரவால்லன்னு நினைக்கும் வி.சே அஞ்சலி படுத்தாலான்னு ஏன் கேக்கணும்?

போலவே யாழினி செம்ம அல்லாட்டம். ஒரே போன் கால். திருப்பியும் வைபவ். யாழினியால் மழையில் நனைய முடியவில்லை என்னும் கா.சு, அஞ்சலி செய்வது சரி என்கிறாரா ‘மனிதி’ பாடல் மூலம்? அஞ்சலியும் லூசு தானே? ஆண்களே வேண்டாம்ன்றது என்ன முடிவு? அது Judgemental. You dont know what life has for you. So, be open. இது தானே சரியான தீர்வு?

இப்படி எல்லா கேரட்டர்களும் நிறையவே குழப்பமாய் அமெச்சூராய் நடந்துகொள்கின்றன.

3. வி.சேவின் குழந்தை ஸ்கூலுக்கு போகும் வரை ஜெகன் ஏன் காலேஜுக்கு போகிறார்?

4. ராஜுமுருகன் பாணி ‘பொம்பளைங்க எல்லாம் சாமி டா’ Romanticize ஐ தவிர்க்கலாம். மனிதி வெளியே வான்ற கருத்து திணிப்பையும்.

5. தமிழ் ஆடியன்ஸ்க்கு புரியாதுன்னு கடைசில சூர்யா வெச்சு, நடுவுல சித்தப்பாவ வெச்சு கருத்து சொல்லிட்டே வந்தது செம்ம எரிச்சல்

ஆனால், படத்தில் கா.சுக்கே தெரியாமல் எனக்கு பிடித்த ஒரு விஷயம் செய்துள்ளார். மேலே சொன்ன அமேச்சூர்தனம், அல்லாட்டம் தான். பெண்கள் எப்போதும் இப்படி குழப்பமாகவே முடிவெடுத்துள்ளனர் தானே? மலர் வி.சே வேற ஒருத்தியோட வாழட்டும் என விட்டது, அஞ்சலி தனியா வாழறேன்னு முடிவெடுத்தது, கமலினி அல்லாட்டம் என எல்லாமே நிஜத்தில் பெண்கள் குழப்பிக்கொள்வது தான். இங்கே Strong ஆன பெண் என நாம் சொல்வதே கஷ்டப்படும் ஒருத்தியைத்தானே? பெண்கள் செய்வதில் பல நேரங்களில் இமோஷன்ஸ் இருக்கும், லாஜிக் இருக்காது – இப்படி ஒரு பார்வை கொள்ளலாம், படத்திலிருந்து.

ஆனால், மனிதி வெளியே வா என இந்த பார்வையை கெடுத்து விட்டார். (இது கா.சு அமேச்சூர்தனமாய் இல்லாமல், கேரக்டர்களின் அமெச்சூர்தனமாய் இருந்தால்)

மனித உணர்வுகளை மொத்தமா சொல்லி முடிச்சுட்டதா எவனும் பீத்திக்க முடியாது. இறைவி ஒரு கோணத்தை காட்டிருக்கு.

உண்மையான பெண்ணியம் ‘Let them be’ தான்.

மிக மொக்கையான அறிவுள்ள/திறமையுள்ள/தைரியமுள்ள to அபாரமான அறிவு/திறமை/தைரியமுள்ள ஆண்/பெண் என எல்லா ரகமும் உண்டு தானே? எல்லா பெண்களாலும் independent ஆக முடியாது. அதற்கு அவர்கள் இதுவரை வளர்ந்த சூழ் நிலை, அவர்கள் அறிவு செறிவு என பல காரணம். பட், 25க்குள் இருக்கும் எல்லா பெண்களாலும் இந்த கோட்டை தாண்ட முடியும். கொஞ்சம் முயன்றால் அவர்கள் இந்த மூன்றையுமே வசப்படுத்தலாம்.

இறைவியும், Compere பேட்டியில் கார்த்திகும் அதைத்தான் சொல்கிறார். Let them be. பொண்ணுன்னு சொல்லி ‘உங்க பூசாரித்தனமும் வேண்டாம். உங்க பொங்கச்சோறும் வேண்டாம்’ என்கிறார்.

படத்தின் பெரிய தவறு கார்த்திக் கருத்து சொல்ல முயன்றது. கருத்தை explicit ஆக பேசும் இடங்கள், மழை குறியீடு, இறைவி – பொம்பள சாமி டா, பொறுத்துப்போறவ டா இவையெல்லாம் தவிர்த்து, கேரக்டர்களின் கோபம், நிதானமின்மை அவை சார்ந்து அவர்கள் வாழ்வு மாறும் முறையை மட்டும் காட்சிப்படுத்தியிருந்தால், இறைவி க்ளாசிக் ஆகி இருக்கும். ஒரு முறை மலர் அழாததாக நினைத்துக்கொண்டு, அஞ்சலி திகைத்து ரயில்வே ஸ்டேஷனிலேயே நிற்பதாகவும், கமலினி எல்லோரையும் விட்டு ஒரு நெடும் பயணம் போவதாகும் யோசித்துக்கொண்டு படம் பாருங்கள்.

இறைவியின் கருத்து திணிப்புகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்களின் நிதானமின்மை – பாதிக்கப்படும் பெண்கள் என ஒரு பக்கா வட்டியும் முதலும் எப்பிசோட். அதில் பெண்ணியம் தூவி இறக்கியிருக்கிறார் கார்த்திக்.

Related Posts