பிற

கிம் ஜொங்-இல்

வட கொரியாவின் முன்னாள் தலைவரும், வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையம், வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் முன்னாள் தலைவரும், வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளராக 1997 முதல் 2011 வரை இருந்தவரு‍மான (General Secretary of the Workers’ Party of Korea) கிம் ஜொங்-இல் அவர்களின் பிறந்த நாள் (பிறப்பு பிப்ரவரி 16, 1941 – இறப்பு 17 டி‍சம்பர் 2011).

1980 ஆம் ஆண்டு தொடங்கி, வடகொரிய தொழிலாளர் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினராகவும் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் வடகொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு‍ வரை வடகொரியாவின் ஆட்சி பொறுப்பை ஏற்று‍ நடத்தி வந்தார். 17 டிசம்பர் 2011 அன்று‍ இரயிலில் பயணம் செய்து‍ கொண்டிருந்த போது‍ மாரடைப்பால் இறந்தார்.

Related Posts