குறும்படங்கள்

காடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி

காடே கதை கூறு

இயக்கம்-எழுத்து-ஒளிப்பதிவு : ஜெயசீலன்

வெளியீடு: காம்ரேட் டாக்கீஸ்

தயாரிப்பு: 4 புரொடக்சன், யாழ் கலைக்கூடம்

 ஹரி கிட்டி

நிறம் – வெறும் நிறத்தை மட்டும் வைத்தே ஒருவரின் மதிப்பைக் கணக்கிட முடியுமா ? அல்லது செய்யும் தொழிலை வைத்து தான் ஒருவரை கணக்கிட முடியுமா..? இவை அனைத்திற்கும் மேலாக பேருந்தில் கடைசி சீட்டில் உட்கார்ந்து வருவதால் ஒருவரை எந்த ஜாதி என்றோ, எந்த மதம் என்றோ கணித்திட முடியுமா..?! ஆனால் இவை அனைத்தின் அடையாளமாக உழைக்கிற  முன்னிலை படுத்துவது இன்றும் அரங்கேறி வரும் மிக மோசமான சாதிய கொடுமை என்றே சொல்லலாம்.

சிறு வயதில் நான் கேட்ட ஒரு வாசகம் தான் எனக்கு இந்த படத்தை பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. “தமிழன்னு சொன்னா இந்தியாவுல மதிப்பு இல்ல, இந்தியன்னு சொன்னா மத்த எந்த நாட்டுலயும் மதிப்பே இல்ல” இந்த வரி என்னவோ இந்த குறும்படத்துக்கு ரொம்ப பொருந்துது.  நிறம், மதம், மொழி போன்ற அடையாளங்கள் சுமார் 9 பேரோட உயிர காவு வாங்கி இருக்கு.

படத்தோட பாடல் வரிகள் “தமிழா தமிழா ” என்கிற எழுச்சி குரலை கூட சோகமாகவே பதிவு செய்யுது. செம்மரங்களை கடத்தியதாக 9 பேரை சுட்டு கொன்ற ஆந்திரா காவல் துறையை எந்த அளவுக்கு நீதி துறை கண்டிச்சிருக்குனு தெரியல. இது போன்ற வன்முறையை யார் செய்தாலும் குற்றமே.

படத்துல வர ஒற்றை வரி ரொம்ப ஆழமாக சொல்லப்பட்டிருக்கு. “சாதி, கல்வி, பொருளாதாரம்… இப்படி எல்லாத்துலயும் பின்தங்கி தானே இருக்கீங்க.. பஸ்ல உட்காரும் போது கூட நீங்க லாஸ்ட் தான்டா” இந்த வரிகள் உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களை அவர்கள் சாதியை குறிப்பிட்டு எந்த அளவுக்கு இந்த சமூகம் கீழ்மையா பாக்குதுனு அப்பட்டமா காட்டுது.

வெறும் நிறம், துணி, முகத்த வச்சி இன்னார் இந்த சாதி, இந்த மதம், இந்த இனம-்னு சொல்றதுலாம் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தால எந்த அளவுக்கு நம்ம மனசு ஆழமா கறைபடிஞ்சியிருக்குதுன்னு காட்டுது.

இந்த 9 உயிர்கள் மட்டும்தான் இது போன்ற வன்முறையான கண்ணோட்டத்துல உயிரிழந்து இருக்கங்களான்னா கிடையாது! ஒவ்வொரு நாளும் இப்படி ஏதோ ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய கொடுமையால் பாதிக்கப்படுறாங்க. இதற்கான தீர்வை நோக்கி நாம ஒரு அடி முன்னோக்கி நகர்ந்து இருக்கோம்னு சொல்லலாம். ஆனால், நாம் இன்னும் ஆழமாக எதையுமே செய்ய தொடங்கவில்லை என்பதே நிதர்சனம்!

Related Posts